Header Ads Widget

Responsive Advertisement

01.இதுவரை

பைபிள் கதைகள் புதிய ஏற்பாடு

சிறு வேண்டுகோள்:அன்பானவர்களே பைபிள் கதைகள் புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாக வெளியிடப்படுகிறது எனவே முதலாவது பைபிள் கதைகள் பழைய ஏற்பாட்டை படியுங்கள் அப்பொழுது பைபிள் க‌தைகள் புதிய ஏற்பாடு தெளிவாய்ப் புரியும்.

01.இதுவரை

பைபிள் கதைகளில் இதுவரை மேலோட்டமான சம்பவங்களை மட்டுமே பார்த்து வந்தோம், அதில் ஆழமாய் புதைந்துள்ள‌ ஒரு முக்கியமான ஒரு அடிப்படை காரியத்தை பற்றி இங்கே காண்போம். முதலாவது சாத்தான் யார் எனத் தெரிந்து கொள்வோம்,

லூசிஃபர்
லூசிஃபர் என்பவன் காபிரியேல், மிகாயேல் போல கடவுளுடைய ஒரு தூதுவன். அவன் கடவுளுடைய சமூகத்தில் இசை மீட்டுபவன். அவன் ஒருமுறை தனக்கிருக்கும் ஆற்றலால் கர்வம் கொண்டான் மேலும் தான் கடவுளாக மாறவேண்டும் என நினைத்தான், அந்தக்கணமே அவன் பாதாளத்திற்கு விழுந்தான், அன்று முதல் அவன் கடவுளுக்கு விரோதமான காரியங்களைச் செய்ய ஆரம்பித்தான். அவனே சாத்தான் என அழைக்கப்படுகிறான். அவனுக்கு புழுக்களே படுக்கையென்றும் பூச்சிகளே அவன் போர்வையென்றும் ஏசாயா (ஏசாயா,14) தீர்க்கதரிசி சொல்கிறார்.

கடவுளின் சாயலாக மனிதன்
கடவுள் மனிதனைப்படைத்த போது அவருடைய சுவாசத்தை ஊதி அவனுக்கு உயிரளித்தார் அதன் மூலம் மனிதன் ஜீவ ஆத்துமாவானான். மனிதனைக் கடவுள் தன் சாயலாகவே படைத்தார் அதாவது மற்ற உயிர்களில் இல்லாத ஆத்துமா என்ற ஒன்று அவனிடம் உருவானது.தெளிவாய் சொல்லப்போனால் கடவுளின் வடிவமான‌ பரிசுத்த ஆவி (ஆவி) பரம பிதா (ஆத்துமா) இவ்வுலகிற்கு சரீரமாய் வந்த கிறிஸ்து (சரீரம்) என்ற திரித்துவ சாயலாகும்.

ஏவாளிடம் பிசாசின் வஞ்சனை
மனிதன் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டவுடன் பிசாசு அவனைத் தன் வலையில் வீழ்த்த முடியவில்லை. ஆனாலும் மனிதனை பாவத்திற்குள் வீழ்த்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். மனிதனுக்குத்துனையாக அவனது விலா எலும்பிலிருந்து உருவாக்கப்பட்ட மனுசியை அனுகுவது பிசாசுக்கு எளிதாக இருந்தது. காரனம் கடவுளின் சாயலில் இருந்த மனிதனின் விலா எலும்பை வீழ்த்தினால் மனிதனை எளிதில் வீழ்த்தலாம் என திட்டமிட்டு அதில் வெற்றியும் அடைந்தான்.

கடவுளின் சாபம்
பாம்பின் உருவில் வந்த பிசாசை கடவுள் சபிக்கும் போது “அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்” என்ற சாபத்தையும் சொன்னார். அதாவது கடவுளுக்கு விரோதமான காரியத்தில் தன் சாயலான மனிதனை விழச்செய்ததால் அம்மனித இனத்தில் ஒருவர் பிறந்து பிசாசின் தலையை நசுக்குவார், என்பதாகும். இதனால் பிசாசு பயமடைந்தான். மேலும் அவன் பயமே பைபிள் சம்பவங்கள் முழுவதும் பரவிக்கிடக்கிறது. அது என்ன எனபதைப் பற்றி இனி சுருக்கமாகக் காண்போம்.

பிசாசின் ப‌ய‌ம்
க‌ட‌வுளின் சாப‌த்திற்குப் பின் பிசாசு ம‌னித‌ன் த‌ன் த‌லையை ந‌சுக்கிவிட‌க்கூடாது என்ப‌தில் குறியாக‌ இருந்தான்.ஆதாம் ஏவாள் மூலம் பாவத்தில் விழுந்தான். ஒருவேளை அவனது மகன்கள் தன் தலையை நசுக்கி விடுவார்கள் எனக் கருதி ஒருவனை வைத்து மற்றவனைக் கொலை செய்ய வைத்து பாவியாக்கினான்.

கடவுளின் திட்டமும் அறியமுடியாத பிசாசும்
இப்படியே பிசாசு கடவுளின் திட்டத்தை அறிய முடியாமல் பூமியில் பிறந்த மனிதர்கள் அனைவரையும் பாவத்தில் விழச் செய்தான்.இந்தக் காரனத்தினாலேயே கடவுளின் நண்பனான ஆபிரகாமின் பிள்ளைப் பிறப்பை நூறு ஆண்டுகள் தடுத்தான். ஆனால் கடவுள் அவனுக்கு அதிசயம் செய்தார். யாக்கோபைக் கடவுள் ஆசீர்வதித்த பின் யாக்கோபின் சந்ததியிலேயே அவர் பிறப்பார் என அறிந்து கொண்டான். ஒருவேளை யாக்கோபு மிகவும் நேசிக்கும் யோசேப்பாக இருக்கலாம் என நினைத்து அவனை அடிமையாய் எகிப்திற்கு கொண்டுபோகச் செய்தான். ஆனால் கடவுள் யூதாவின் சந்ததியைத் தெரிந்து கொண்டார்.

பிசாசின் யூகமும் கடவுளின் திட்டமும்
இப்படியாக யூதாவின் வம்சா வழியிலேயே அவர் வருவார் என யூதா வம்சத்தினரை வீழ்த்துவதிலேயே குறியாக இருந்தான். யூதா வழியில் வந்த பேரரசனும் கடவுளின் நண்பனாகவும் நீதிமானாகவும் இருந்த தாவீதாக இருப்பாரோ எனக் கருதி பெத்சேபாளிடம் பாவத்தில் விழ வைத்து வெற்றி கொண்டான். அதே போல கடவுளிடம் அளவற்ற அறிவைப் பெற்ற சாலமோனாக இருக்குமோ என என்னி அவனையும் அன்னிய தெய்வத்தை வணங்க வைத்து பாவத்தில் விழச்செய்தான்.

பிறப்பதே பாவம்
“இச்சை கர்பம் தரித்து பாவத்தைப் பிறசவிக்கிறது” (யாக் 1:15)இதன் மூலம் இவ்வுலகில் பிறந்த யாரும் பரிசுத்த வான்கள் இல்லை அப்படியானால் பிசாசின் வலையில் சிக்காமல் கடவுளின் சாபம் நிறைவேற்றப் போவது யார்? அதை புதிய ஏற்பாட்டுக்கதைகளில் காண்போம்……….

Post a Comment

3 Comments

  1. லுசிபர் என்பதற்கு சரியான விளக்கம் இங்கே உள்ளது
    http://jamakaran.com/tam/2009/june/thirutham.htm

    எனது (சகோ. வசந்தகுமார்) கட்டுரையை அறிமுகப்படுத்தும்போது ஜாமக்காரன் பிப்ரவரி 2009 இதழில் 11ம் பக்கத்தில் "தேவனுக்கு மூன்று முக்கிய தூதர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர்.லூசிபர். இந்தப் பெயரை நம் வேதபுத்தகத்தில் எந்த மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடவில்லை. ஆனால் மூலப்பாஷை வேதப்புத்தகத்தில் மட்டும் லூசிபர் என்று பெயரைக் குறிப்பிட்டே எழுதப்பட்டுள்ளது" என்று என் கட்டுரையின் இடையே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் இது தவறாகும். எபிரேய மற்றும் கிரேக்க மொழி வேதப்பிரதிகளில் இப்பெயர் இல்லை. லூசிபர் என்பது லத்தீன் மொழிச்சொல். லத்தீன் மொழிபெயர்ப்பு வேதாகமத்திலேயே இப்பெயர் உள்ளது. மேலும், இப்பெயரின் அர்த்தம் "விடிவெள்ளி" என்பதாகும். ஆதிசபைப் பிதாக்களும் அவர்களைப் பின்பற்றி பாரம்பரியச் சபைகளும் தீரு மற்றும் பாபிலோனிய அரசர்களைப்பற்றிய எசேக்கியல் 28:11-15, ஏசாயா 14:12-15 என்னும் வேதப்பகுதிகளை (எசே 28:11-12, ஏசா 14:4) சாத்தானுடைய வீழ்ச்சியைப்பற்றிய குறிப்பாக வியாக்கியானம் செய்ததினால், இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் "விடிவெள்ளி" (ஏசா 14:12) சாத்தான் என்னும் கருத்து கிறிஸ்தவர்கள் மத்தியில் உருவானது. மேலும், கி.பி.4ம் நூற்றாண்டிற்குப் பின்னர் லத்தீன் மொழிபெயர்ப்பே சபையின் உத்தியோகபூர்வமான வேதாகமமாக இருந்ததினால் இம்மொழிபெயர்ப்பில் உள்ள லூசிபர் என்னும் சொல் சாத்தானுடைய பெயராகப் பிரபலமடைந்து, பழைய ஏற்பாடு எழுதப்பட்ட எபிரேய மொழியில் தேவதூதர்களுடைய பெயர்கள் தேவனைக் குறிக்கும் "ஏல்" என்னும் எபிரேயச் சொல்லுடனேயே முடிவடையும். இதனால்தான் பிரதான தூதர்களாக வேதத்தில் உள்ள இரு தூதர்களுடைய பெயர்களும் இச்சொல்லுடன் "காபிரியேல்", "மிகாயேல்" என்று முடிவடைகின்றன. யூதர்களுடைய நம்பிக்கையின்படி மொத்தம் ஏழு பிரதான தூதர்கள் உள்ளபோதிலும், அவற்றில் இரு தூதர்களுடைய பெயர்கள் மட்டுமே வேதத்தில் உள்ளன. எனவே லூசிபர் என்பது வேதத்தில் சாத்தானுக்கு கொடுக்கப்பட்ட பெயர் அல்ல. இது ஆதிசபைப் பிதாக்களின் வியாக்கியானத்தை அடிப்படையாகக்கொண்டு வேதாகமத்தின் லத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள பெயராகவே உள்ளது.

    விடிவெள்ளி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் தோன்றும் பிரகாசமுள்ள நட்சத்திரமாக (வீனஸ் கிரகம்) இருப்பதனால், ஏசாயா 14:12ல் பாபிலோனிய அரசன் "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி" என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இத்தகைய அர்த்தத்துடன் 2பேதுரு 1:19ல் விடிவெள்ளி (லத்தீனில் லூசிபர்) என்னும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் 22:16ல் இயேசுகிறிஸ்துவும் "விடிவெள்ளி" என்று அழைக்கப்பட்டுள்ளார். லத்தீன் வேதாகமத்தில் இவ்விடத்திலும் லூசிபர் என்னும் சொல்லே உள்ளது. வெளிப்படுத்தல் 2:28லும் விடிவெள்ளி என்னும் சொல் உள்ளது. லூசிபர் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சாத்தானுடைய பெயராயிருந்தாலும் வேதாகமத்தில் இப்பெயர் சாத்தானுக்கு கொடுக்கப்படவில்லை. வேதாகமத்தில் "பிசாசு" (மத் 4:1), "சர்ப்பம்" (2கொரி 11:3), "வலுசர்ப்பம்" (வெளி 12:7), "இப்பிரபஞ்சத்தின் தேவன்" (2கொரி 4:4), "இந்த உலகத்தின் அதிபதி" (யோவா 12:31,16:11), "சோதனைக்காரன்" (மத் 4:3), "பொல்லாங்கன்" (மத் 13:19, 1யோவா 5:18,19), "ஆகாயத்து அதிகாரப் பிரபு" (எபே 2:2), "பெயல்செபூல்" (மத் 12:24) என்னும் பெயர்கள் சாத்தானுக்கு உள்ளன.

    ReplyDelete
  2. நல்ல விளக்கம் இதை இங்கே பதித்தமைக்கு நன்றி சகோதரரே

    ReplyDelete
  3. ஐயா, என் பெயர் ஜெயக்குமார், தங்கள் பதிப்பில் பழைய ஏற்பாட்டு கதைகள் படித்ததில் மிகுந்த மகிழ்ச்சி, ஆனால் புதிய ஏற்பாட்டு கதைகள் வாசிக்க ஆவலுடன் தேடியபோது இங்கே அவைகள் இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளித்தது. தயவு செய்து அவற்றை பதிவிட வேண்டுகிறேன்,
    அன்புடன்,
    ஜெயக்குமார்.

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

    ReplyDelete