நாய்களோடு நடைபயிற்சி செய்பவர்களா நீங்கள்?
சில சமயம் பலர் காலை, மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா?. அதில் சிலர் தாங்கள் வளர்க்கும் நாய்குட்டியோடு நடைபயில்வார்கள். அப்போது அப்போது அந்த நாய்க்குட்டி மேல் மட்டுமே அதிகமான கவனம் செலுத்த வேண்டியிருக்கும், காரனம் அந்த நாய் தன்னைவிட பலம் குறைந்த நாய்களைப்பார்த்தால் சண்டைக்குப் போகும். மேலும் கண்ணில் படும் சாலையோர கம்பங்களுக்கு ஓடி தன் அடையாளத்தை பதிவுசெய்யும். மேலும் தெருவில் செல்வோர் மீது பாயும். இதனால் நாயோடு வந்தவர்கள் அதைக்கட்டுப்படுத்துவதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டுவிடுவார்கள். மொத்தத்தில் நடைபயில்பவர்களில் உடற்பயிற்சி நோக்கம் நிறைவேறாமல். நாய் அவர்களை தன் வேலைகளுக்கு கூடவந்து உதவிசெய்யும் வேலைக்காரனாகவே தன் எஜமானை மாற்றிவிடுகிறது என்பதே உண்மை.இது போலத்தான் சிலர் ஆவிக்குரிய வாழ்க்கைகுள் வரும் போது உலகப் பிரகாரமான (தொலைக்காட்சி, மது, பொய், மற்றும் பல) சில பல நாய்களையும் கூட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்கள் உண்மையாய் ஆவிக்குறிய பயன் தெரிந்து வந்திருந்தாலும், அந்நாய்(உலகப்பிரகாரமானவைகளுக்கு)களுக்கு அவர்களின் நோக்கத்தை முறியடிப்பதே முக்கிய வேலையாகிப்போனபடியால். அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறுவதில்லை மேலும் அவர்கள் அவைகளை மிகவும் நேசிப்பதாலும், அவைகளை கைவிட மனமில்லாமில்லாததாலும், தங்கள் நோக்கம் நிறைவேறாமலேயே திரும்ப வேண்டியிருக்கிறது.
ஆகவே நீங்கள் மட்டும் இனிமேல் தனியாக தினமும் நடைபயின்றால் நடைபயிற்சியின் பலனை முழுமையாய் அனுபவிக்கலாம்.
0 Comments