Header Ads Widget

Responsive Advertisement

எபிரேயத் தமிழ் நடை (கிறிஸ்தவ தமிழ் நடை) உருவான வரலாறு

அன்பானவர்களே நீன்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, கடந்த பதிவில் சீகன் பால்க் பைபிளை தமிழில் மொழி பெயர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்கள் பற்றி பார்த்தோம் இந்த பதிவில் தமிழ் மொழி எழுத்து சீர்த்திருத்தங்களுடன் தமிழில் வந்த முதல் பைபிள் வரலாறு பற்றி பார்ப்போம், மேலும் "கீதவாத்தியங்கள் இசைத்தான், கின்னரம் வாசித்தான், தாழ்ச்சியடையேன், நடனம் பண்ணினாள்," தேனில் பலாப்பழத்தை ஊற வைத்த சுவையுடைய எபிரேயத்தமிழ் வந்த வரலாறு தெரியுமா உங்களுக்கு.......

பெஞ்சமின் சூல்ச்
சீகன் பால்க் விட்டுச்சென்ற பணியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சூல்ச் என்பவர் தொடர்ந்து செய்தார்,இவருக்கு உதவியாக ஒரு பிராமனர் இருந்தார் இவர்கள் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பணி செய்தார், 1727 ஆம் ஆண்டு இவர் முழு பைபிளையும் வெளியிட்டார், தள்ளுபடி ஆகமங்களையும் இவரே முதன் முதலில் வெளியிட்டார்,

சூல்ச் அவர்களும் சீகன் பால்க் பயன்படுத்திய கொச்சையான தமிழையே பயன்படுத்தினார், இது பிழைகள் நிரம்பியதாக இருந்தாலும், தமிழில் புத்தகமே இல்லாமல் இருந்த அந்த நாட்களில் இது இமாலய வெற்றியாகும்.

தமிழ் எழுத்து சீர்திருத்தம்
தமிழ் எழுத்துக்கள் பனை ஓலையில் தனி நபரின் கையெழுத்துக்க்கு ஏற்ப வடிவம் மாறி இருந்தது என்றும் பொதுவான அச்சுவடிவம் இல்லை என்றும் நாம் ஏற்கனவே கண்டோம், இது பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்ட நாட்களிலேயே சீரக்கப்பட்டது, போர்ச்சுகீசியரான "கான்ஸ்டைன் பெஸ்கி" இவரைத்தான் எல்லோரும் இவரை வீரமாமினிவர் என்று அழைப்பார்கள். இவரே தமிழில் தற்போது நடைமுறையில் இருக்கும் எழுத்து சீர்திருத்தம் செய்தவராவார், மேலும் இவருக்கு பிறகு அமெரிக்க அருட்பனி இயக்கத்தின் தலைவராக இருந்த "ஹென்டர்" என்பவர் தான் சீரற்று இருந்த தமிழ் எழுத்துக்களுக்கு சீரான அச்சு வடிவத்தை உருவாக்கினார், இது அடுத்து வந்த தமிழில் பைபிளை மொழியாக்கம் செய்தவர்களுக்கு பேறுதவியாக இருந்த்தது,

பெப்ரிஷீயஸ் அவர்கள்
இவர் 1740ம் ஆண்டு தமிழ் நாட்டில் கடலூருக்கு வந்தார், இவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார், இவர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே தமிழில் தொடர்ந்து மூன்று மணி நேரம் சொற்பொழிவு ஆற்றவும், எழுதவும் படிக்கவும் தெரிந்தவராவார். மேலும் இவர் ஜெர்மன், கிரேக்கு, எபிரேயு, இலத்தீன், ஆங்கிலம், ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றவராவார், இத்தகைய திறமையாளர்தான் தமிழில் பைபிளை அடுத்த மொழியாக்கம் செய்ய அனுப்பப்பட்ட மிஷனரி ஆவார். மேலும் இவர் வீரமாமுனிவரின் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்தினார்.

மேலும் பெப்ரீஷியஸ் மிகவும் பயபக்தியுடன் முழங்காலில் நின்றே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார். மொழியாக்கப்பணிக்காக கடைசி வரை இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. சீகன் பால்க் மொழியாக்கம் இவருக்கு பேருதவியாக இருந்தது, அதிலுள்ள பிழைகளை நீக்கினார். இருபது ஆண்டுகாலம் கடுமையாக உழைத்து ஆதியாகமம் முதல் நியாயாதிபதிகள் வரை உள்ள தொகுதியை வெளியிட்டார். 1791 ஆண்டு இவர் உயிர் நீத்தார். இவரது கல்லறை இப்போதும் சென்னை வேப்பேரியில் உள்ள தூய மத்தியாஸ் ஆலய வளாகத்தில் உள்ளது.

சீகன் பால்கை போலவே இவரது கடின உழைப்பினால் வெளிவந்த முதல் பைபிளை இவரும் காண்வியலாமல் போனது, இவர் மொழிபெயர்த்த முழுவேதாகமும் 1840‍ ல் வெளியானது, இதுவே தற்போது புழக்கத்திலிருக்கும் கிறிஸ்தவ தமிழ் நடை ( எபிரேயத்தமிழ் நடை) உருவாகக் காரணமாக இருந்தது. இவரது மொழிபெயர்ப்புக்கு பொன் திருப்புதல் என்று பெயர்,

இதெல்லாம் சரி இப்போதிருக்கும் தமிழ் பைபிளை இரண்டாம் பக்கம் திருப்பினால் அங்கே Tamil O.V.(அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு) என்று எழுதப்பட்டிருக்கும் இதற்கான‌ காரண‌மும், தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழ் பைபிளை மொழியாக்கம் செய்தது யார்? எப்போது மொழியாக்கம் செய்யப்பட்டது? என மிக விரைவிலேயே அடுத்த பதிவில் காண்போமா?....

Post a Comment

3 Comments

  1. its very nice dear brother...

    ReplyDelete
  2. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அரிய தகவல்களை வழங்கி வருகிறீர்கள்! நன்றி!

    ReplyDelete