Header Ads Widget

Responsive Advertisement

டைனோசர்கள் போன்ற விலங்குகள் அழிந்தது எப்படி? பைபிள் ஆதாரம்
அன்பானவர்களே ஆதியாகமம் முதல் அதிகாரம் முதல் வசனத்தை வாசியுங்கள் " ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்" என்று சொல்லப் பட்டுள்ளது மேலும் பைபிளில் மிகவும் பழமை வாய்ந்த புத்தகமான யோபுவில் (38) பூமி உண்டாக்கப்பட்டபோது மற்ற நட்சத்திர மண்டலத்தில் வாழந்தவர்கள் மகிழ்ந்தார்கள் என்றும் சொல்லப் பட்டிருக்கிறது, இதுவரை முன்னுரையாக வேத அடிப்படையிலான சில அடிப்படை காரியங்களைக் குறித்து தியானித்தோம் இனிவரும் பதிவுகள் முற்றிலும் அறிவியல் அடிப்படையிலானவை சரி விசயத்திற்குச் செல்லுவோம்,

தொல்பொருள் ஆதார‌ங்க‌ள்
ஆதியில் தேவன் பூமியை உண்டாக்கிய போது மிகவும் செழிப்புடன் விளங்கியது, (காரணம் யோபு 38 விளக்கப்பட்டுள்ளது) அந்த உலகத்தில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது, அதில் ஏராளமான காடுகள், டினோசர்கள், ப்ரண்டாசாரஸ், மமாத் என்ற யானைகளை ஒத்த வில‌ங்குகள், பல்வகையான இராட்சச பறவையிணங்கள் என்று செழிப்பாக பல இலட்சக் கணக்கான ஆண்டுகள் எவ்வித இடைஞ்சலும் இன்றி வாழ்ந்து வந்ததாக இன்று அறிவியலாலர்கள் கண்டறிந்துள்ளார்கள், அவற்றின் படிமங்கள் நாள்தோறும் கண்டறியப்பட்டு வருகின்றன,

இவைகள் மிகவும் பிரம்மாண்டமானவைகளாக இருந்தன என்றும் அறிகிறோம், உதாரண‌மாக டினோசர்கள், 40 முதல் 70 டண்கள் இருந்ததாகவும், இவைகள் நாளொன்றுக்கு சுமார் 1 டன் அள‌விலான தாவரங்களை உட்கொண்டன என அறியும்போது, அதன் பிரமாணடத்தையும் அக்கால இயற்கை வளங்களையும் அறிந்துகொள்ளலாம்,


புவியியல் ஆதாரங்கள்
இந்த உயிரினங்கள் பூமியில் ஏற்பட்ட ஓர் மிகப்பெரிய விண்கள்( வால் நட்சத்திரம்) மோதியதால் அழிந்ததாக அறிவியலாலர்கள் சொல்லுகிறார்கள், மேலும், தற்கால புவியியல் ஆய்வாளர்கள், வட ஆப்பிரிக்காவில் பரந்து விரிந்துள்ள சகாரா பாலைவனத்தை ஆராய்ந்த போது அங்கே மிகக் கடினமான பாறை வகைகள் மெழுகைப் போல உருக்கப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்பட்டவைகள் போல வேறு பல கடினமான பாறைகளின் மீது தெளிக்கப்பட்டு இறுகியிருப்பதாகவும், மேலும் மனலிலுள்ள சிலிக்கான்கள் அபரிபிதமான வெப்பத்தில் உருக்கப்பட்டு இயற்கைக் கண்ணாடிகளாக சகாரா பாலைவனம் முழுவதும் கிடைக்கப் பெறுகின்றன என்றும், இது மனிதன் கண்ணாடியைக் கண்டுபிடிப்பதற்கும்(5000 ஆண்டுகள்) முந்தையதானது என்றும் மிக மிகப் பழமையானது என்றும், கண்டுபிடித்திருக்கிறார்கள், மேலும் செய‌ற்கைக்கோள்க‌ள் துனையோடு ஏராள‌மான ஆறுக‌ள் இந்த‌ மிக வ‌ர‌ண்ட‌ ச‌காராவில் ஓடிய‌த‌ற்கான‌ த‌டைய‌ங்க‌ளையும் க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள்,

இது ம‌ட்டும‌ல்ல‌ இந்த பாறைத் தொட‌ர்கள் (மேற்கண்ட உருக்கப்பட்ட பாறைகளின் இறுகிய படிமங்கள்) ச‌காராவில் ம‌ட்டும‌ல்ல, பூமியில் ம‌ற்றபாக‌ங்க‌ளான தென் அமெரிக்க‌ க‌ண்ட‌த்தில் அமேசான் காடுக‌ளின் ம‌த்தியிலும், உல‌க‌த்தில் மிக உயரமான‌ அருவியான வெனிசுலாவில் இருக்கும் ஏஞ்ச‌ல்ஸ் நீர்வீச்சி இந்த‌ வ‌கைப்பாறைக‌ள் நிறைந்த‌ ம‌லைத் தொட‌ரிலும் அமைன்திருப்ப‌தாக‌ சொல்லுகிறார்க‌ள், மேலும் உல‌கின் வ‌ட‌க்கு மூளையான அலாஸ்காவின் ப‌னி சூழ்ந்த ப‌குதிக‌ளிலும், உல‌கின் கிழ‌க்குக்கோடியான‌ ஆஸ்திரேலியா க‌ண்ட‌த்தில் இருக்கும் நியூ கினி நாட்டின், வெப்ப‌ம‌ண்ட‌ல‌ காடுக‌ள் சூழ்ந்த‌ ம‌லைப்ப‌குதியிலும், அமேரிக்கா நாட்டில் கிரேன்ட் கேனிய‌ன் என்ற‌ வ‌ர‌ண்ட ப‌ள்ள‌த்தாக்குப் ப‌குதியிலும் இந்த‌ ப‌ழ‌மையான இர‌ண்டு பாறைக‌ள் உருகி ஒட்டிக் கொண்ட‌ பாறைக‌ள் காண‌ப்ப‌டுவ‌தாக‌க் க‌ண்ட‌றின்துள்ளார்க‌ள்.

இதில் ஆச்ச‌ரிய‌மான‌ விச‌ய‌ம் என்ன‌வென்றால்; இந்த‌ப் பாறைக‌ள் ப‌ல‌ கோடி ஆண்டுக‌ள் ப‌ழ‌மையான‌வைக‌ள் என்றும், ஆனால் அவைக‌ள் சுமார் ப‌த்து இல‌ட்ச‌ம் (10,00,000) ஆண்டுக‌ள் முன்ன‌தாக‌த்தான் இவைக‌ள் உருகி ஒன்றின் மேல் ஒன்றாக‌ ஒட்டி இறுகியிருக்கின்ற‌ன‌ என்றும் க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள்,இப்பாறைக‌ள் உருக‌ எத்த‌னை டிகிரி வெப்ப‌ம் தேவை ஓர் அறிவிய‌ல் பார்வை

இப்ப‌டிப்ப‌ட்ட க‌டின‌மான‌ பாறைக‌ள் உருக சுமார், 25,000 டிகிரி வெப்ப‌ம் தேவை என்று அறிவிய‌ல் கூறுகிற‌து, அதாவது எரிமலைக் குழம்பான லாவாவை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமான வெப்பம், அப்ப‌டி ஒரு வெப்ப‌ம் பூமியின் மேற்ப‌ர‌ப்பின் ஏற்ப‌டும் சாத்திய‌க் கூறுக‌ள் மிக‌ மிக‌க் குறைவு என்றும், அது ஓர் வின்னிலிருந்து விழுந்த‌ ஒரு பொருளால் ம‌ட்டுமே உருவாக்க‌ முடியும் என்றும், மேலும் அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஓர் அழிவு உண்டான‌ போது மிக‌வும் ப‌ழைமையான ஒரே க‌ன்ட‌ம் ம‌ட்டுமே இருந்த‌தாக‌வும், அத‌னால் தான் க‌ண்டப் பிள‌வின் போது இந்த ஒத்த காலத்துப் பாறைத் தொட‌ர்க‌ள் வெவ்வேறு க‌ண்ட‌ங்க‌ளிலும் ஆயிர‌க்கண‌க்கான‌ கிலோ மீட்ட‌ர்க‌ள் தொலைவிலும் நின்று மௌன‌ சாட்சிக‌ளாக‌ நின்று கொண்டிருக்கின்ற‌ன‌ என்று அறிவிய‌ல் உல‌க‌ம் சொல்லுகிற‌து,

உயிரிய‌ல் ஆய்வாள‌ர்க‌ள் இப்ப‌டி மிக‌ மிக‌ அதிக‌மான ஓர் வெப்ப‌ம் ப‌ல‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ கிலோமீட்ட‌ர் ப‌ர‌ப்ப‌ள‌வுக‌ள் கொண்ட‌ பூமியின் மேற்புற‌ க‌டின‌மான‌ பாறைக‌ளை உருக்கி ஒன்றின‌த்திருக்குமானால், ம‌ணலின் சிலிகானை உருக்கிக் க‌ண்ணாடிக‌லாக்கியிருக்குமானால், இன்றைய‌ உல‌கின் மிக‌ப்பெரிய‌ ஆறான அமேசான் ஆற்றை விட‌ப் பெரிய ஆறுக‌ளை காய்ன்து போக‌ச் செய்திருக்குமானால், அப்போது பூமியில் வாழ்ந்த‌ வில‌ங்குக‌ள் ப‌றவைக‌ள், ம‌ட்டும‌ல்ல பூமியின் பழைய அனைத்துத் தாவர வகைகளும் ஒரே நொடியில் பொசுங்கியிருக்கும், கார‌ண‌ம் ப‌ல‌ இல‌ட்ச‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்னாள் வாழ்ந்த‌ வில‌ங்குக‌ள் பிர‌மாண்ட‌மான‌வைக‌ளாக‌ இருந்தாலும், அவைக‌ள் மென்மையான‌வைக‌ள், அவைக‌ளால் சுமார் 15டிகிரி முத‌ல் 40டிகிரி அள‌வுக‌ள் உள்ள‌ வெப்ப‌ நிலையை ம‌ட்டுமே தாக்குப் ப்டிக்கும் ச‌க்தியுடைய‌வை, த‌ற்போதுள்ள‌ பூம‌த்திய‌ரேகை ப‌குதியில்,அடிக்கும் வெப்ப‌த்தையோ, அல்ல‌து பாலைவன‌த்தில் மிக‌ச் சாதார‌ண‌மாக‌ த‌கிக்கும் வெப்ப‌த்தையோ கூட‌ தாங‌கியிருக்க முடியாது, என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்,வானவியல் ஆதாரங்கள்,

பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இவ்வளவு வெப்பம் இருந்ததில்லை, காரணம் பூமி சாய்திருக்கவில்லை, ஆனால் வானத்தில் இருந்து ஓர் மிகச்சக்தி வாய்ந்த வின்கல் ஒன்று பூமியின் மீது வினாடிக்கு 23000 கிலோ மீட்டர்கள் வேகத்தில்மோதிய அழுத்தத்தால் பூமி 23.5 டிகிரி பாகை சாந்ததாகக் கண்டு பிடித்திருக்கிறாகள், கடைசியாக தொல் பொருள் ஆய்வாளர்கள், பூமியில் கன் சிமிட்டும் நேரத்தில் நடந்த ஓர் இயற்கைத் தாக்குதல் நடந்தது என்றும் ஒப்புக்கொள்கிறார்கள், இதனால் ஒரு வினாடியில் 1000த்தில் ஒரு பங்கு நேரத்தில் இந்த பூமி வெப்பத்தினாலும், ஒரு பொருள் மோதியதால் உண்டான பெரும் பள்ளம் ஏற்படுத்திய தாக்கத்தால் ஏற்பட்ட திடீர் மண்  மேடுகளாலும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள், ஆகியவை இருந்த நிலையிலேயே மண்ணில் புதையுண்டன அகவேதான் இப்போது  நமக்கு அவைகளின் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகளை அவைகள் மண்னில் புதைந்த போது இருக்கும் நிலைகளை வைத்து அறிய முடிகிறது, என்றும் ஒப்புக்கொள்கிறார்கள்.

பைபிள் சொல்லுவது என்ன?
அன்பானவ‌ர்களே இப்போது ஆதியாகமம் முதல் அதிகாரம் இரண்டாம் வசனம் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம். " பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய்க் காணப்பட்டது." பிரியமானவர்களே பூமி எப்படி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் எப்படியானது என்று நமக்கு மேற்சொன்ன அறிவியல் ஆய்வுகள் மூலம் நமக்கு விளங்குகிறது அல்லவா?

மேலும், பூமியில் ஓர் எரிகல் அல்லது வால் நட்சத்திரம் விழுந்தது என்றும், அது பூமியின் உயிர்களை நாசமாக்கியது என்றும் அறிவியல் இன்று நிரூபித்திருப்பதை, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாகவே பைபிளில் ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது ஏசாயாவின் புத்தகம் 14ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள், பிரகாசமான நட்சத்திரமாகிய சாத்தான் பூமியில் விழத் தள்ளப்பட்டான் என்றும், அவன் உயிர் ஜாதிகளை அழித்தான் (ஈனப்படுத்தினான்) என்றும் விளக்கப்பட்டுள்ளது,

பிரியமானவர்களே சென்றப‌திவில் நாம் கண்ட சாத்தான் யார் என்ற கேள்விக்கான விடை இப்போது உங்களுக்கு அறிவியல், தொல்பொருள் ஆய்வியல், புவியியல், போன்ற தற்காலக் கண்டுபிடிப்புகள் மூலம் தெளிவாக அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறேன், இப்படி விழுந்த சாத்தானால் அழிக்கப்பட்ட பூமி எப்படி புதுப்பிக்கப் பட்டது? அறிவியல் ஆதாரங்களுடன் வேத அடிப்படையில் அடுத்த பதிவில் சந்திக்கலாம் காத்திருங்கள்........

Post a Comment

0 Comments