Header Ads Widget

Responsive Advertisement

பைபிளின் நான்காம் நாளும் அறிவியலும்


அன்பானவர்களே கடந்த பதிவுகள் உங்கள் விசுவாசத்தை கிறிஸ்துவுக்குள் பெலப்படுத்தியிருக்கும் என்று விசுவாசிக்கிறேன். இன்று நாம் பைபிளில் முதல் புத்தகத்தில் சொல்லப்பட்ட நான்காம் நாளைக் குறித்து ஆராயவிருக்கிறோம்.

இது ஆதியாகமம் 1:14-19-ல் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் முன்பே பார்த்த்து போல (பார்க்க: பைபிளின் இரண்டாம் நாளும் அறிவியலும்) சூரியனும் சந்திரனும் நான்காம் நாளில் உருவாக்கப்பட் ட து. சூரியனும், சந்திரனும், மற்ற நட்சத்திரங்கள் அனைத்தும் மனிதன் காலங்களையும் நேரங்களையும் அறிந்து கொள்வதற்காக என்று நாம் அறிய முடிகிறது. 
வரலாற்றின் பார்வையில்
பைபிளின் ஆதியாக ம ம் 11-ம் அதிகாரத்தைப் பார்த்தோமானால் ஆபிரகாமின் முன்னோர்கள் எப்படி தங்கள் வயதையும் காலத்தையும் துல்லியமாக அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். 
மேலும், தற்போதைய வரலாற்று அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன், கி.மு 603 மே மாதம் 18-ம் தேதியில் ஒரு பூரண சூரிய கிரகணம் உண்டானது என்றும், மீண்டும் அப்படி ஒரு சூரிய கிரகணம் கிமு 585-ல் ஏற்படும் என்றும் தேல்ஸ் என்ற வானவியல் அறிஞர் எந்தவிதமான வானவியல் கருவிகள் கண்டு பிடிக்கப் படாத அந்தக் காலத்திலேயே (சுமார் 2600 ஆண்டுகள்) கணித்து வைத்திருந்த்தை நாம் அறிய முடிகிறது.
மேலும் இங்கிலாந்தில் ஸ்டோண் ஹன்ஞ்ச் என்ற இடத்தில் காணப் பட்ட கற்கள் மிகப்பழங்காலத்திற்கு முன்பே இந்த கற்கலின் நிழலைக் கொண்டு காலத்தையும் நேரத்தையும் கணிக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
எகிப்திய கிமு 750-ம் ஆண்டுகளிலேயே காலத்தையும், குறிப்பிட்ட நட்சத்திர நாளில் விதைத்தால் மற்றொரு குறிப்பிட்ட நட்சத்திர நாளில் அறுவடை செய்யலாம், என்றும் விதைக்கும் பருவத்தைத் துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார்கள்,
 இது போன்ற வரலாற்று ஆதாரங்களைப் பார்க்கும் போது பைபிளில் சொல்லப்பட்டவை உண்மை என்று அறிந்து கொள்ளலாம் அல்லவா? சுருக்கமாகச் சொல்லப்போனால் சந்திரனின் வடிவத்தை வைத்தே நாள் கணக்கையும் மாதக்கணக்கையும் நம் முன்னோர்கள் கண்டடைந்திருக்கிறார்கள்.
அறிவியல் பார்வையில்
முந்தைய பதிவுகளிலேயே சூரியன் பூமியைவிட இளையது என்பதை நம் அனைவரும் அறிந்த காரியத்தைக் கொண்டு புரிந்து கொண்டோம் அல்லவா? ஆகவே சந்திரனைக் குறித்து கொஞ்சம் விளக்கமாக காணலாமா?
சந்திரன் பூமியிலிருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதி என்று அறிவியலாளர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் பைபிள் சந்திரன் தனியாக உருவாக்கபட்ட து என்று சொல்லுகிறது. 
அறிவியலாளர்கள் சொல்லுவதைப்போல சந்திரன் பூமியிலிருந்து பிரிந்து போயிருக்குமானால், அங்கே வளிமண்டலம் ஆக்சிஜன் ஈர்ப்பு விசை ஆகியவை ஏன் அங்கே மாறு படுகிறது? ஒருவேளை சூரியனின் வெப்பம் வேண்டுமானால் சகிக்க க் கூடாமல் இருக்கலாம், ஆனால் வளி மண்டலமே இல்லாமல் எப்படி முற்றிலும் மாறுபட்ட சூழ்னிலை நிலவும்?
சில கேள்விகள்:
(1)    சூரியனின் வெப்பம் நவீன உயிரினங்களான நாம், மற்றும் விலங்குகள், தாவரங்கள் ஆகியவை பாதிக்கக் கூடாத இடத்தில் நிலை நிறுத்தப் பட்டிருக்கிறது, ஒரு வேளை சூரியன் இன்னும் நெருக்கமாக இருக்குமானால் நம் நிலைமை என்ன? அல்லது தொலைவாக இருக்குமானால் நம் நிலையென்ன?
(2)    பூமி அளவில் இன்னும் சற்று அதிகமாக இருந்தால் கூட பூமியில் மனிதன் வாழ முடியாது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் அப்படியானால் இவைகள் இவ்வளவு நேர்த்தியாக அமைய யார் காரணம்?

(3)    வின்வெளியில் எரிநட்சத்திரங்களிலிருந்து பூமியின் மேல் வந்து விழும் தூசியின் அளவு வருடத்திற்கு சுமார் ஒரு கோடியே நாற்பது இலட்சம் டன் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். மனிதன் சந்திரனுக்கு செல்வதற்கு முன்னர் சந்திரனில் எரி நட்சத்திர தூசுகள் பல நூறு அடிகள் படர்ந்திருக்கும் என கணக்கிட்டார்கள் ஆனால் மனிதன் அங்கே சென்று பார்த்த போது சில அடிகள் மட்டுமே அந்த தூசுகள் மூடியிருந்த்து என அறிந்தார்கள். அப்படியானால் சந்திரன் எவ்வளவு இளையது என அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா?


(4)    பூமியும் சந்திரனும் சூரியனை அதன் ஈர்ப்பு விசையால் தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுவதாகச் சொல்லுகிறார்கள், ஆனால் சூரியக் குடும்பத்தில் 31 சந்திரன்கள் (துனைக்கோள்கள்) இருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்கள், அதில் 20 சந்திரன்கள் ஈர்ப்பு விசையினால் பூமியும் சந்திரனும் சுற்றிவருவதாக அறிவியலாலர்கள் சொல்லும் திசையின் நேர் எதிர் திசையில் சுற்றி வருகின்றன இதற்கு அறியலாளர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
இத்தகைய கேள்விகளும் வரலாற்று உண்மைகளையும் வைத்து நாம் பார்க்கும் போது பைபிள் சொல்வது நமக்கு தெளிவாக விளங்குகிறது அல்லவா?
ஏன் அறிவியல் முரன்படுகிறது
அறிவியல் கண்டுபிடிப்புகள் நிலையானது அல்ல என்பதும், இதன் கோட்பாடுகள் காலத்தால் மாற்றப்பட்டு வந்திருக்கின்றன என்பதும் நாம் அனைவரும் அறிந்த்தே, அப்படியானால் இனிவரும் நாட்களில் பைபிளின் உண்மை மனிதனின் அறிவுக்கண்கள் அகலமாகத் திறக்கப்படும் போது இன்னும் அதிகாரப் பூர்வமாக நிரூபிக்கப்படும் என்று நாம் நிச்சயம் நம்பலாம், அடுத்த பதிவில் சந்திக்கலாம் காத்திருங்கள்................

Post a Comment

3 Comments

  1. என்ன நண்பா, அதுக்காக அறிவியலே டுபாகூர்ங்கற மாதிரி பேசுறீங்களே! கொஞ்சம் ஓவரா தெரியல.

    regards
    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  2. Dear Hayyram!!!! Its all good when you have posted great things about your hinduism in your blogspot,wow!!!! thats really amazing stories,certainly I want you to know that "Hinduism is not a history but a Mythology":)) the Indian history itself says like that.How do you answer this???What is your opinion?????

    ReplyDelete
  3. அன்பு சகோதரர் ஹேராம் அவர்ளுக்கு இந்த வலை மலரின் அடுத்த பதிவில் (பைபிளின் ஐந்தாம் நாளும் அறிவியலும் (பகுதி-1) அறிவியல் பொய்யா?) விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது படித்துப் பயனடையுங்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக.. ஆமேன்

    ReplyDelete