Header Ads Widget

Responsive Advertisement

பைபிளின் ஐந்தாம் நாளும் அறிவியலும் (பாகம்-2)


அன்பானவர்களே இன்று பைபிளின் சொல்லப்பட்ட படைப்பின் காரியங்களை அறிவியல் ஆதாரங்களோடு பார்க்கவிருக்கிறோம். இதை நாம் பைபிளில் ஆதியாகமம் 1-20:23 வரை உள்ள வசன்ங்களில் படிக்கலாம், ஐந்தாம் நாளிலே கடலில் வாழும் மிகப்பெரிய உயிரின்ங்களையும், சகல் நீர்வாழ் உயிரிணங்களையும் உண்டாக்கியதாகக் காண்கிறோம். இதே போல வானத்தில் பறக்கும் பறவைகளையும் சகலவிதமான சிறகுகள் உள்ள பறவைகளையும் ஜாதி ஜாதியாக உண்டாக்கி இவைகள் தாங்கள் தங்கள் ஜாதிகளின் படியே திரளாகப் பெருகக் கடவது என்று ஆசீர்வதித்தார். என்று காண்கிறோம்.

பரினாமக் கொள்கைக்காரர்கள் முதலாவது தண்ணீரில் அல்லது கடலில் கண்ணுக்குத் தெரியாத ஒரு செல் உயிரிணமான அமீபா பாக்டீரியா போன்றவைகள் உண்டானதாகவும், இவைகள் படிப்படியாக மாறுபாடு அடைந்து இன்று நாம் கானும் சிக்கலான பெரிய விலங்குகளான நீலத்திமிங்கலங்கள், மீன்கள், நீர் யானைகள், சுறாக்கள், மற்றும் சீல்கள் என உண்டானதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அறிவியல் அறிஞர்கள் அமீபா பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரிணங்கள் மிகவும் சிக்கலானவை. என்று சொல்லுகிறார்கள்.
ஆனால் அமீபாக்களுக்கு சிறிதும் சம்பத்தம் இல்லாத நீலத் திமிங்கலங்கள் சுமார் 150 டன் எடை உள்ளவைகளாகவும், ஆண் பெண் என்ற இரு பாலிகளாகவும், குட்டி போட்டு பால் கொடுப்பவைகளாகவும், இருக்கின்றன, மேலும் திமிங்கலங்கள் தன் குட்டிக்குப் பால் கொடுக்கும் போது கடல் நீர் குட்டியின் வாய்க்குள் செல்ல முடியாத வகையில் திமிங்கலங்களின் மடி வடிவமைக்கப் பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். இது பரினாமத்தில் மாறியிருந்தால், அது மாறும் காலம் வரையிலும் திமிங்கலங்கள் எப்படி உயிர் வாழ்ந்தன என்று பரினாமக் காரர்கள் சொல்லுவார்களா?
சிலர் திமிங்கலங்கள் சில காலம் முன்பு வரை தரையில் வாழ்ந்ததாகச் சொல்லுகிறார்கள். இதற்கு அதன் இடுப்புப் பகுதியில் உள்ள எலும்புகளைக் காரணமாகச் சொல்லுகிறார்கள். ஆனால் ஒருசில திமிங்கல வகைமட்டுமே இப்படிப்பட்ட எலும்புகளைக் கொண்டிருப்பதாகவும், மற்ற பெரும்பாலான வகையில் இப்படிப்பட்ட எலும்புகள் இல்லை என்றும் மீன் வள ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இதன் மூலம் திமிங்கலங்கள் தரையில் வாழ்ந்துருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லுகிறார்கள்.
இன்று கடலின் தினமும் புதிய புதிய மீன் இன்ங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
கடலில் மட்டும் 2,49,000 (இரண்டு இலட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரம் வகை உயிரிணங்கள் வசிப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இவற்றில் பல வகைகள் மனிதன் பார்க்காத வகைகள் ஆகும்

பரினாம பொய்யை தோலுரிக்கும் ஓர் உதாரணம்
1957-ம் ஆண்டு கடல் மட்டத்துக்கு அடியில் 11,700 அடி ஆழத்தில் வசித்து 28 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாகவே மறைந்து விட்ட தாக சொல்லப்பட்ட நியோபிலினா காலாத்தியா என்ற மீனினம் பிடிக்கப்பட்டது அப்படியானால் சுமார் 28 கோடி ஆண்டுகளாக இந்த மீன் அப்படியே இருப்பது கடந்த நூற்றாண்டில் நிரூபிக்கப் பட்டு விட்டது. இது பைபிளின் உண்மைத் தன்மையை நமக்கு மௌனமாகப் பறைசாற்றுகிறது அல்லவா?
அதேபோல சியோலகாந்த் என்ற 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக சொல்லப்பட்ட மீன் இனம் 1938-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் இவ்வகை மீன்கள் முன்பிருந்த அதே வடிவத்தில் பிடிக்கப்பட்டன. இவைகள் நமக்கு பைபிள் உண்மை என்பதைத் தெளிவாக்குகிறது அல்லவா?

இதே போல பரினாமக் கொள்கைக்காரர்கள் மீன் போன்ற கடல் வாழ் உயிரின்ங்களின் வழித் தோன்றல்கள் பறவைகள் என்று சொல்லுகிறார்கள். அப்படியானால் மீனுக்கு உள்ள கனமான எலும்புகள் எப்படி பறவைகளின் மெல்லிய எலும்புகளாயின என்று சொல்லுவார்களா?
குளிர் இரத்தப் பிரானிகளான மீன்கள் எப்படி வெப்ப மண்டல பறவைகளாயின என்றும் விளக்குவார்களா? இவைகள் பைபிள் சொல்லும் கடவுளின் படைப்பின் இரகசியம் இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

அன்பானவர்களே அடுத்த பதிவில் மன்னில் இருந்து மனிதன் எப்படி உண்டாயிருக்க முடியும்? என்ற இன்றைய அறிவியலாளர்கள் நகைக்கும் பைபிள் உண்மையை அறிவியல் மற்றும் நடைமுறை உண்மைகள் கொண்ட விருவிருப்பான ஆய்வுக்கட்டுரைத் தொடரைப் படிக்க மறவாதீர்கள் மீண்டும் சந்திப்போம் காத்திருங்கள்........

Post a Comment

24 Comments

 1. உங்களை எல்லாம் யாரு ப்ரெயின் வாஷ் பண்றது ? உங்கள் டோட்டல் பதிவும் முட்டாள்தனமாக உள்ளது.

  http://en.wikipedia.org/wiki/Evolution

  பைபிள் பொய் என்று நிரூபிக்கமுடியும். விவாதிக்க தயாரா ?

  ReplyDelete
 2. நண்பரே,
  எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 3. அன்பு நண்பர் செந்தழல் ரவி அவர்களே, இந்த உலகத்தின் அதிபதியான சாத்தானின் பொய்களில் நீங்களும் வஞ்சிக்கப் பட்டிருக்கிறீர்கள். உங்களை நினைத்து மிகவும் கவலையாக இருந்தது,

  நானும் சில ஆண்டுகளுக்கு முன்னால் இப்படித்தான் வஞ்சிக்கப் பட்டிருந்தேன், கவலைப்படாதீர்கள், ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்து உங்களுக்காகவும், இரத்தம் சிந்தினார். உங்களுடைய இரட்சிப்புக்காகவும், மீட்புக்காகவும், ஜெபித்துக் கொள்கிறேன்.

  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும், ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக........ ஆமேன்.


  சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற (எங்களுக்கோ) நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(I கொரிந்தியர் 1:18)

  ReplyDelete
 4. Dear Brother Senthamiz Ravi!!!! I read your comments and your wikipedia attachment.Thats really a great step that you've taken. Yes as u've asked, I'm ready to Prove that Bible is "THE" WORD OF GOD,not just by writing some crap,but scientifically.And lets see whether ur mere words or craps win or The Bible wins. By the way i think u believe in Evolution theory,so Just check out the following link to know more about your evolution theory.

  http://ims.truepath.com/atheist.html

  Meet you soon,
  God Bless You Dear.

  @Raj anna, U keep going ...God Bless You.

  ReplyDelete
 5. நிறைக்குடம் இருக்க குறைக்குடம் கூத்தாதுதாம்.காசுக்கு மதம் மாறும் கூட்டம் எல்லாம் இப்படி தான் பேசும்.பைப்ளில்லில் உலகம் தட்டையானது என்று உள்ளது இவர்களால் இதை நிரூபிக்க முடியுமா.மூளை சலவை செய்யப்பட்ட பைத்தியக்காரக் கூட்டம்.உங்க ஆண்டவர உங்கள மட்டும் ரட்சிக்க சொல்லுங்க எங்கள ரட்சிக்க வேண்டாம்.நாங்கள் ஈரோட்டுப்பாதையில் பயணிக்கும் பெரியாரின் பேரன்கள்.

  ReplyDelete
 6. அன்பு சகோ திவ்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள், உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....


  **//காசுக்கு மதம் மாறும் கூட்டம் எல்லாம் இப்படி தான் பேசும்.//**


  நான் காசுக்கு மதம் மாறும் கூட்டத்தைச் சேர்ந்தவனள்ள... ஆனாலும் நான் என் பதிவுகளில் உண்மை உண்மையை மட்டுமே பேசுகிறேன்

  **//பைபிளில் உலகம் தட்டையானது என்று உள்ளது இவர்களால் இதை நிரூபிக்க முடியுமா?//**

  என்னை மன்னித்து விடுங்கள் கண்டிப்பாக என்னால் நிரூபிக்க முடியாது, நீங்கள் வேண்டுமானால் பைபிளில் பூமி தட்டையாக உள்ளது என்று சொல்லியிருக்கிறது என்று நிரூபியுங்கள்... பார்க்கலாம்!!!!!!!!!!

  ஏசாயா 40; 22‍‍ல் பூமி உருண்டையானது என்றே சொல்லப்பட்டிருக்கிறது

  **//மூளை சலவை செய்யப்பட்ட பைத்தியக்காரக் கூட்டம்.**//

  ஆம் நாங்கள் கிறிஸ்துவுக்குள் பைத்தியகாரர்களாகவே இருக்கிறோம்(1 கொரி 4;10)

  **//உங்க ஆண்டவர உங்கள மட்டும் ரட்சிக்க சொல்லுங்க எங்கள ரட்சிக்க வேண்டாம்.//**

  இது மட்டும் என்னால் முடியவே முடியாது உங்களையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரட்சிக்கும் படி கட்டாயம் வேண்டிக்கொள்வோம்..

  **//நாங்கள் ஈரோட்டுப்பாதையில் பயணிக்கும் பெரியாரின் பேரன்கள்//**

  நானும் ஈரோட்டு பெரியாரின் பேரன் தான், நான் பெரியாரின் இரசிகன், ஈரோடு பெரியார் மன்றத்தின் அருகில் இருந்தே இந்த் கட்டுரைகளை எழுதுகிறேன். பெரியார் அண்ணா ஆகியோரின் எழுத்துக்களே என்னை கிறிஸ்துவிடம் கூட்டிச் சேர்த்தது, அவர்களது எழுத்துக்கள் இன்றும் எனக்கு வழிகாட்டியாக இருக்கின்றன...

  தளத்திற்கு வந்த என்னருமை நண்பருக்கு நன்றிகள்

  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக...........

  ReplyDelete
 7. Dear sister Divya,
  None can change a human heart with anything,as you said even the money can not change it inside and out.Certainly money can change your mind but not your heart but the word of God says in Hebrews 4:12 (one of the books in the Bible)"For the word of God is living and active. Sharper than any double-edged sword, it penetrates even to dividing soul and spirit, joints and marrow; it judges the thoughts and attitudes of the heart.".For instance let me give u an example, If i take a strange chocolate which you would have never seen before and I eat it infront of u without giving u a bite,and after finishing eating it if i ask you How was the chocolate,How can u describe it without tasting?? can u?? Certainly no. In the same way unless u taste and see u can not say how good this God is.

  Even u can see it penetrating ur heart and speak to u we u heed to it.Its very easy to criticize but we should always think before we speak.

  And the perspective that u have about Christians is "they are Changing the religion by giving the money" isn't it? For your kind information,When u start believing in Jesus,surely He will bless you with what u require. The Bible instructs us to provide for the needy and serve them. So its a act of kindness which u learn when u accept Jesus as ur personal saviour. When people around the world sees u,out of the joy and humbleness before God u confess and tell them about Jesus christ which ultimately makes people to taste the love of Jesus,which is further passed on to the generations. So its just the acts of kindness not the Act of CHANGING RELIGION.

  Winston:)
  http://christordained.blogspot.com/

  ReplyDelete
 8. என்ன நான் கேட்டதுக்கு பதிலே காணும்.

  ReplyDelete
 9. அன்பு சகோதரரே உங்களுக்கு ஏற்கெனவே தேவையான கொடுக்கப்பட்டாயிற்று சகோதரர் வின்ஸ்டன் அவர்களும் பதில் கொடுத்துள்ளார்.

  தயவு செய்து அவைகளைப் படிக்கவும். இவைகளைப் படிக்காமல் வீணாகப் பிதற்றிக்கொண்டிருக்க வேண்டாம்.

  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும், ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக........ ஆமேன்.

  ReplyDelete
 10. Sister Divya,
  Can you tell me how many times have you read the Bible??
  Do you know the fact??? There are researches going on for years and years about it because there are many things still hidden in it. U can not say The earth is flat whaen u have not read it even a single time. Its not enough if u just read it. U will find it as a narrative story if u do that but u should understand it.like what is written,why is it written,where is it written..etcc...wait wait...not just reading and understanding, First of all u should seek God's help to understand it because it is his word.So he only can help in a better way. Do u know where is it written in the bible that the earth is flat??? If u know let me also know.
  God Bless You!!!
  Winston:)
  christordained.blogspot.com

  ReplyDelete
 11. பதில் சொல்ல முடியலையா மிக்க மகிழ்ச்சி.கலீலியோ கலீலி பதியாசும் தெரியுமா

  ReplyDelete
 12. பைபிளில் பூமி உருண்டை என்றுதான் உள்ளது, தாங்கள் இன்னும் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் தயவு செய்து Guest book பகுதியில் உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள், கட்டாயம் உங்களுக்கு தெளிவாக பதில் சொல்லுகிறேன். மற்றவர்களும் அதைப் படித்து பயனடைவார்கள்.

  உங்கள் கேள்வி என்ன எனபதை அங்கே தெளிவாக எழுதுங்கள் நன்றி

  http://www.bibleuncle.co.cc/2005/01/blog-post_7117.html

  ReplyDelete
 13. தோழர் winston நான் பைபிள் படிப்பது இருக்கட்டும் முதலில் பைபிள் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்.நீங்கள் படிக்கும் பைபிள் 23 முறை திருத்தி எழுதப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.கலீலியோ கலீலி பூமி உருண்டை என்று சொன்னதற்காக வாடிகன் தேவாலயத்தால் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.இந்தக்கருத்தை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.ஆனால் இதற்க்கு பதில் சொல்ல முடியாமல் வெளியிடாமல் நான் பிதற்றுகிறேன் என்று கருத்து வெளியிடும் ராஜ்குமார் அவர்களே.உங்களின் எழுத்துக்கள் நீங்கள் பரிணாம வளர்ச்சியில் சற்று பின்தங்கி விட்டீர்களோ என்ற ஐயத்தையும் உங்களின் மேல் சற்று பரிதபாதையும் ஏற்படுத்துகிறது.தங்களின் இந்தக்குறைகளை எல்லாம் வல்ல உங்கள் இயேசு கிறிஸ்துவும்,அல்லாவும்,சிவபெருமானும்,புத்தனும் அருள்புரியுமாறு அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.என்ன இதையாவது வெளியிடுவீங்களா இல்ல இதையும் வெளியிடாமல் விட்டுடுவீங்களா.திரும்பவும் சொல்லுறேன் உங்க கடவுள் மட்டும் இல்ல எந்த கடவுளும் என்ன ரட்சிக்க தேவை இல்ல.மேலும் ஒரு சின்ன விண்ணப்பம் நான் சகோதரன் இல்ல சகோதரி.

  ReplyDelete
 14. **//என்ன இதையாவது வெளியிடுவீங்களா இல்ல இதையும் வெளியிடாமல் விட்டுடுவீங்களா.//**

  அன்பு சகோதரி உங்கள் பின்னூட்டங்கள் எதையும் நான் நீக்கியது இல்லை. அனைத்தையுமே வெளியிட்டு விட்டேன். ஒருவேளை தொழில் நுட்ப குறைபாட்டால் பிண்ணூட்டம் கிடைக்காமல் போயிருந்தாலோ, அல்லது தாங்கள் பொய் சொன்னாலோ (மன்னிக்கவும்), அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

  ReplyDelete
 15. **//உங்க கடவுள் மட்டும் இல்ல எந்த கடவுளும் என்ன ரட்சிக்க தேவை இல்ல.//**

  அன்பு சகோதரி இது உங்கள் தனிப்பட்ட விருப்பம் இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. நான் உங்களை கடவுள் இரட்சிக்கும் படியாக சொல்லவில்லையே பிறகு ஏன் திரும்பத்திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை தயவு விளக்குவீர்களா?

  நான் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் கடவுள் ஆசீர்வதித்துக் காத்துக்கொள்ள வாழ்த்த மட்டுமே செய்தேன். வாழ்த்துவது என் மரபு வாழ்த்துக்கு பாத்திரவானாய் இருந்தால் அது உங்கள் மேல் இருக்கட்டும். இல்லாவிட்டால் அது என் மேல் வரட்டும்.

  ReplyDelete
 16. **//ஒரு சின்ன விண்ணப்பம் நான் சகோதரன் இல்ல சகோதரி.//**

  மன்னித்து விடுங்கள். போலியாக பெண் பெயரில் யாரோ ஒரு ஆண் எழுதுகிறார் என்று தவறாக நினைத்து விட்டேன்.

  ReplyDelete
 17. **//கலீலியோ கலீலி பூமி உருண்டை என்று சொன்னதற்காக வாடிகன் தேவாலயத்தால் அவமானப்படுத்தப்பட்டார் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.இந்தக்கருத்தை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.ஆனால் இதற்க்கு பதில் சொல்ல முடியாமல் வெளியிடாமல் நான் பிதற்றுகிறேன் என்று கருத்து வெளியிடும் ராஜ்குமார்//**

  சகோதரி இந்த பிண்ணூட்டம் மேலே வெளியிடப்பட்டிருக்கிறது, தாங்கள் பூமி உருண்டை பற்றி கேள்வி எழுப்பி இருந்தீர்கள், அதற்கான பதில் கொடுக்கப்பட்டாயிற்று என்றுதான் மேலே சொல்லியிருக்கிறேன்.

  அதற்கு பதில் சொன்ன பிறகுதான் கலிலீயோ பற்றிய சந்தேகத்தை கேட்டிருக்கிறீகள், தாங்களே அதை மேலே படித்துப் பார்க்க முடியும்,

  (மேலும் ஒரு கூடுதல் தகவல் பிளாக்கரில் இடப்படும் பின்னூட்டங்கள் திருத்தியோ அல்லது ஒரு பகுதி மட்டும் நீக்கியோ வெளியிடமுடியாது என்பதை பிளாக்கர் பயன்படுத்தும் அனைவருமே அறிவார்கள்)

  கலிலியோ குறித்த உங்கள் சந்தேகம் நியாயமானதே, நான் இதை பொய் என்று மறுக்கப் போவதில்லை.

  அந்த சம்பவம் நடந்த கால கட்டம் மற்றும் சூழ்நிலைகளை வரலாற்றுப் பின்னனியோடு ஆராயவேண்டும். இதைக் குறித்த விரிவான ஆராய்ச்சிக்கட்டுரை என்னிடம் இருக்கிறது மிகவிரைவிலேயே அதை வெளியிடுகிறேன். கொஞ்சம் காத்திருங்கள்.

  ReplyDelete
 18. **//ராஜ்குமார் அவர்களே.உங்களின் எழுத்துக்கள் நீங்கள் பரிணாம வளர்ச்சியில் சற்று பின்தங்கி விட்டீர்களோ என்ற ஐயத்தையும் உங்களின் மேல் சற்று பரிதபாதையும் ஏற்படுத்துகிறது.//**

  அன்பு சகோதரி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை நானும் உங்களின் கருத்தை ஒத்தவனாகவே இருந்தேன். பெரியாரியல், அறிவியல், கடவுள் மறுப்பு போன்ற்வற்றில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தேன். கடவுள் மறுப்பைத் தவிர மற்ற அனைத்திலும் நான் இப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். நான் ஏன் கடவுள் மறுப்பை ஏன் கைவிட்டேன் என்று சொல்லுகிறேன் கேளுங்கள்.

  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது அவர் சாகவில்லை மயக்கமாகவோ, அல்லது கோமா நிலையிலோ இருந்திருப்பார். அதை அக்கால மக்கள் அவர் மரித்து விட்டதாக நினைத்து அடக்கம் செய்திருக்கலாம் என்றும் நினைவு திரும்பியவுடன் உயிர்தெழுந்து விட்டதாக அறிவித்து விட்டார்கள் என்றும் நான் வாதாடியிருக்கிறேன்.

  (1) ஆனால், இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசிகள் சொன்ன சில நம்பமுடியாத தீர்க்கதரிசனங்கள் என் வாழ்வில் நடந்ததையும்,

  (2) பரிசுத்த ஆவியானவர் என் சரீரத்தை நிரப்பும் போது என் உடலில் ஏற்படும் விவரிக்க முடியாத சிலிர்ப்பையும், ஆனந்தத்தையும், அனுபவிக்கும் போதும்,

  (3) நான் குழப்பத்தில் இருக்கும் போது என் அருகிலிருந்து நம்பவே முடியாத ஆனால் மிகச்சரியான ஆலோசனைகளை பரிசுத்த ஆவியானவர் எனக்கு உணர்த்துவதையும், சொல்வதையும், உணர்ந்த போதும், கேட்ட போதும்,

  (4) இவை எல்லாவற்றிகும் மேலாக சர்வ வல்லவராகிய இயேசு மகாராஜா பேரொளியாக "என்னிடம் வர மாட்டாயா" என்று அழைக்கப் பட்டதை பார்த்த போதும்,

  (5) சில ஒரு சில மாதத்திற்கு முன்னாள் அவருடைய ஆணி பாய்ந்த கரத்திலிருந்து வழிகின்ற இரத்த்தத் தோடு அவருடைய கரத்தினால் என் தலையைத் தொட்டதை பார்த்ததையும், உணர்ந்ததையும்,

  (6) சின்னஞ் சிறு பிள்ளைகள் எரி நரகக்காட்சிகளை அச்சத்தோடும் திகிலோடும் விவரித்ததை அறிந்ததையும்.

  என்னால் எப்படி மறுக்க முடியும்? இவைகள் ஏதோ தூக்கத்தில் கண்ட கனவோ அல்லது மனதில் தோண்றிய கற்பனையோ அல்ல. நான் சுய நினைவில் இருக்கும் போதும், என் புலன்களால் உணரக்கூடியதுமான நிலையில் நடந்தவை, நடந்து கொண்டிருப்பவை. இப்படிப்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு நான் எப்படி அவரை மறுக்க முடியும்?


  நான் கண்ட உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும். மற்றவர்களும் இந்த அனுபவங்களுக்கு உள்ளாக வேண்டும், என்று தான் இந்த வலைமலரை கடந்த ஒன்னரை ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.


  நான் பரினாம வளர்ச்சியில் பிந்தங்கி விட்டேனோ என்று நீங்கள் ஐயப்பட்டு எனக்கு சாண்றிதழ் தரவேண்டுவதில்லை. நான் பிறப்பதற்கு முன்னே என்னைக் கண்டுகொண்டவ்ரும், அவருடைய பரிசுத்த இரத்தத்தை கிரயமாகக் கொடுத்து. என்னை மீட்டுக் கொண்டவருமாகிய இயேசு கிறிஸ்து ஒரு முறை நான் கலக்கமான சூழ்நிலையில் இருக்கும் போது மெல்லிய குரலில்:

  "உனக்கு ராஜ்குமார் என்று ஏன் பெயர் வைக்கப்பட்டது தெரியுமா? நீ இயேசு மகாராஜாவின் குமாரன், ஆம் நீ என்னுடைய குமாரன்(மகன்). பயப்படாதே நான் உனக்காக யாவையும் செய்து முடித்தேன்" என்று சொல்லி எனக்கு சாண்று கொடுத்தாரே அந்த சாண்றிதழே எனக்குப் போதும்.


  நீங்கள் பரிதாபப்பட்டாலும், என்னை பைத்தியகாரன் என்று சொன்னாலும், நான் கவலையோ வருத்தமோ அடையப்போவதில்லை சகோதரி

  உங்கள் பதிலுக்காக ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும், ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக........ ஆமேன்.

  ReplyDelete
 19. //(மேலும் ஒரு கூடுதல் தகவல் பிளாக்கரில் இடப்படும் பின்னூட்டங்கள் திருத்தியோ அல்லது ஒரு பகுதி மட்டும் நீக்கியோ வெளியிடமுடியாது என்பதை பிளாக்கர் பயன்படுத்தும் அனைவருமே அறிவார்கள்)//

  பிளாக்கரில் இடப்படும் பின்னூட்டங்கள் திருத்தியோ அல்லது ஒரு பகுதி மட்டும் நீக்கியோ வெளியிடமுடியாது என்று எனக்கும் தெரியும் ஆனால் என் கேள்வியை நீங்கள் வெளியிடாமலேயே விட்டுவிட்டீர்கள் என்று தான் சொன்னேனே தவிர திருத்தி வெளியிட்டீர்கள் என்று சொல்லவில்லை.

  ReplyDelete
 20. //ஒரு வேளை தாங்கள் சொல்லுவது போல பைபிள் 23 முறை திருத்தப்பட்டது என்று நீங்கள் சொல்லுவீர்களானால் எங்கே எப்போது எப்படி? என்று "தாங்கள் நம்பும் அறிவியல்" மற்றும் வரலாறு ஆதாரத்துடன் விளக்குவீர்களா?//

  இதை குறித்து ஒரு ஆதாரப்பூர்வமான பதிலை கட்டுரையாக உங்கள் தளத்திற்கு விரைவில் சமர்பிக்கிறேன்.தற்பொழுது அது குறித்த ஆய்வுக்கட்டுரை தயாரித்து வருகிறேன்.முடிவடைய சில மாத காலங்கள் தேவைப்படும் ஆனாலும் அதை விரைவில் முடித்து தவறாமல் உங்கள் தளத்திற்கு அனுப்புகிறேன்.

  ReplyDelete
 21. மூளைப்பகுதி மூன்று அடுக்குகளால் கட்டப்பட்டுள்ளது.

  முதல் பகுதி ஆர்க்கிபாலியம் என்று அழைக்கப்படுகின்றது. ஊர்வன வகை விலங்களிடத்தும் இப்பகுதி உண்டு. இந்த பகுதி தன்னை தானே காத்துக் கொள்ளும் இயல்பை உயிர்களிடத்து உருவாக்குவதில் பங்கேற்கிறது

  இரண்டாம் பகுதிதான் லிம்பிக் பகுதி. இது பாலுட்டிகளிடத்து உண்டு. இது செக்ஸ், தாபம், நெகிழ்வு, காதல், பரிவு போன்ற பல வகை உணர்வுகளுக்கும் காரணமான பகுதியாக உள்ளது.

  இந்த பகுதி ஆராயும் சிந்தனைகளை தூண்டுவதில்லை.நேரும் சம்பவங்களை இந்த பகுதியில் சேமிக்கப்பட்ட நினைவுகளோடு ஒப்பீடு செய்து அதனோடு பொருந்துவதை கண்டு உடனே முடிவு செய்ய தூண்டுகின்றது.

  மூளையின் மூன்றாம் பகுதி முக்கியமானது. இது குரங்களிடத்தும், மனிதரிடத்தும் உண்டு. இதன் பெயர் நியோகார்டெக்ஸ். இந்த பரிமாண வளர்ச்சி லிம்பிக் பகுதியின் வளர்ச்சிக்கு அடுத்த நிலையில் நிகழ்ந்தது. நியோகார்டெக்ஸ் மனிதரிடத்து மூளையின் அளவில் 90 சதவீதமாக உள்ளது. குரங்குகளிடத்து இதன் அளவு குறைவு. சில நபர்கள் இதனை முழுமையாக பயன்படுத்தா பொழுதும் இது நிச்சயம் அவர்களிடத்து உண்டு.( உங்களுக்கும் உண்டு )

  இந்த பகுதிதான் ஆராயும் தன்மையை உண்டாக்குகிறது. இதன் ்மூலம் அமையும் செயல்கள் லிம்பிக் பகுதியின் முடிவுகளை மாற்றி அதன் காரணங்களை ஆராய சொல்கின்றது. உணர்ச்சிகளின் விளிம்பில் பிரச்சனையில் மறுகாமல் அலசி பார்க்க உதவுதலின் அவசியம் பரிணாமத்ததில இருக்க போய் இந்த பகுதி உருவாகி இருக்கிறது.

  குரங்கிற்கும் மனிதனுக்கும் மட்டும் உள்ள இந்தப்பகுதியே குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதற்கு போதுமான ஆதாரம்.


  //மேலும் கலீலியோ கலீலி பற்றிய உங்கள் கட்டுரையை நான் மிகவும் எதிர்பார்க்கிறேன்.அது வெளிவந்த பிறகு அதை குறித்து என் கருத்தை பதிவு செய்கிறேன்.//

  ReplyDelete
 22. // நீங்கள் வெளியிடாமலேயே விட்டுவிட்டீர்கள் என்று தான் சொன்னேனே தவிர திருத்தி வெளியிட்டீர்கள் என்று சொல்லவில்லை//

  நான் இதற்கு ஏற்கெனவே பதில் கொடுத்துவிட்டேன்.(காண்க ஏப்ரல் 01‍ல் நான் வெளியிட்ட முதல் பின்னூட்டம்)

  ReplyDelete
 23. **//அது குறித்த (பைபிள் திருத்தப்பட்டது குறித்த) ஆய்வுக்கட்டுரை தயாரித்து வருகிறேன்.முடிவடைய சில மாத காலங்கள் தேவைப்படும் ஆனாலும் அதை விரைவில் முடித்து தவறாமல் உங்கள் தளத்திற்கு அனுப்புகிறேன்.//**

  நன்றி சகோதரி, உங்கள் கட்டுரைக்காக காத்திருக்கிறேன். ஆனாலும் நான் உங்களுக்கு பைபிள் திருத்தப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக மூலப்பிரதிகள் விமர்சன அறிவியல் குறித்த கட்டுரைக்கு தாங்கள் எந்த மறுப்பையும் வெளியிடவில்லை என்பதன் மூலம் இவைகளை தாங்கள் ஏற்று கொள்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

  இரட்சிப்பு குறித்த என் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லையா? அல்லது பதில் உங்களிடம் இல்லையா?

  ReplyDelete
 24. அன்பு சகோதரி உங்கள் கேள்விகளுக்கான பதில்களை கீழ் கண்ட பதிவில் உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். படியுங்கள் உங்களுக்கு இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள் நன்றி

  பதிலுக்கான தொடுப்பு:http://www.bibleuncle.co.cc/2010/04/blog-post_03.html

  இத்துடன் இந்த பதிவின் பின்னூட்டத்தை மூடுகிறேன் இனி தாங்கள் இந்த புதிய கட்டுரையில் பின்னூட்டம் இடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி

  இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரன்

  ராஜ்குமார்

  ReplyDelete