Header Ads Widget

Responsive Advertisement

வாலிபர்கள் எச்சரிக்கை! - சிறுகதை

படிப்பிலும், அழகிலும் சுட்டியான ரோஸிக்கு தன்னுடய படிப்பை முடித்தவுடன் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்ததில் அவளுடைய பெற்றோருக்கு மிகவும் சந்தோஷம், தன் சொந்த ஊரை விட்டு அந்தப் பெரு நகருக்குத் தன் பெற்றோர் சகிதம் தொடர்வண்டியில் வந்து இறங்கினாள். அதுவரை அவள் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த மாநகரம் அது, புரியாத மொழி, நவீன நாகரீகம் என்று எல்லாமே புதிதாகத் தோன்றியது ரோஸிக்கு, 


அலுவலகத்தில் முதல் நாள்; பெண்கள் எல்லோரும் உதட்டுச்சாயம், மாறுபட்ட சிகையலங்காரம், மேல் நாட்டுப்பானி உடைகளோடு இருக்க, இவளோ சுடிதார் அணிந்து ஜடைபின்னிய கூந்தலோடு இருந்ததை எல்லோரும் அதிசயமாகப் பார்த்தார்கள். மற்றவர்களின் பார்வையின் வலியைத் தாங்க முடியாமல் சோர்ந்து போனாள் ரோஸி. தன் அப்பாவிடம் போன் பன்னி; 'அப்பா நான் அங்கேயே வந்துடறேன் எனக்கு இங்க பிடிக்கவே இல்ல' என்று அழுதாள், அவள் அப்பா; 'கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாப் போயிடும்டா' என்று ஆறுதல் படுத்தினார்.

நாட்கள் சென்றது, யாரும் ரோஸியை மதிப்பதாகத் தெரியவில்லை, தான் மட்டும் தான் இந்த உலகத்திலேயே அசிங்கமான பெண்ணோ என்று கவலையில் ஆழ்ந்தாள் ரோஸி, அப்போதுதான் புதிதாக வேலையில் சேர்ந்தான் நவீன், அல்ட்ரா மார்டன் நடை உடை, என்று நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி எப்போதும் மலர்ந்த முகத்துடன் ஏதாவது நகைச்சுவை செய்து கொண்டே இருப்பது நவீனின் இயல்பு, அவனுக்கு ரோஸியின் அருகான இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

ரோஸியை முதல் முறையாகப் பார்த்தவுடன் நட்பு புன்னகை சிந்தினான் நவீன், ரோஸியும் கடமைக்கு சிரித்து வைத்தாள். அடுத்த ஒரு மணிநேரத்திற்குள்ளாக மூன்று முறை ரோஸியைச் சிரிக்கவைத்துவிட்டான். 'நீ ரொம்ப அழகா சிரிக்கற உன் long hair ரொம்ப நல்லா இருக்கு' என்றான். ரோஸி மனதுக்குள் சிரித்துக் கொண்டு 'thanks' என்றாள். நவீனின் சினேகமான அனுகுமுறை ரோஸிக்கும் பிடித்திருந்தது. 

நாட்கள் உருண்டோடின. இருவரும் நல்ல நண்பர்களாயினர். வெளியே ஒன்றாகச் செல்வது உணவருந்துவது, சினிமா செல்வது என்று நட்பின் நெருக்கம் அதிகமானது. அவன் எப்போதும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ரோஸியைப் புகழ்ந்து கொண்டே இருந்தான். முக்கியமாக அவள் கழுத்தில் சுருண்டிருந்த முடியின் அழகுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று அடிக்கடி வர்னிக்க ஆரம்பித்து விட்டான். 

தன் அழகை ஒரு ஆண் புகழ்வது எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது? ரோஸிக்கு மனதில் ஒரே சந்தோஷம், ஒரு முறை 'Marriage' ‍பண்ணா உன்ன மாதிரி ஒரு பெண்ணைதான் பண்ணனும்', என்று சொன்னான். ரோஸியின் மனதில் அந்த வார்த்தைகள் ஏதோ ஒன்றைத் தட்டி எழுப்பியது போல இருந்தது. அன்று இரவு முழுவதும் அவளுக்கு இனம் புரியாத ஒரு சந்தோஷமான,  குழப்பத்திலேயே கழிந்தது,


மாதங்கள் சென்றன, இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள், ரோஸி தன்னையும் அறியாமல் நவீனை நேசிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவனைக் காதலிக்கிறோம் என்று அறியாமல் இருந்தாள். மாத இறுதி party ஒன்று அலுவலகம் சார்பில் ஒரு நல்ல இடத்தில் ஏற்பாடாகியிருந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டும், நகைச்சுவகளைப் படிமாறிக்கொண்டும், உல்லாசமாக இருந்தனர். இரவு மணி 11 மேல் ஆகிவிட்டது அன்றைய மாலைப் பொழுது மிகவும் மகிழ்ச்சியாகக் கழிந்தது. அன்று இரவு ரோஸியை முதல் முறையாக தன் காரில் Drop ‍செய்தான் நவீன்.

காருக்குள்; 'நாளைக்கு weekend ‍என்ன plan?' என்றான் நவீன், 'ஒன்னும் இல்ல' என்றாள் ரோஸி. நானும் free - தான் எங்கேயாவது போகலாமா? என்றான். நவீன், எங்க போகலாம்? இவள், உனக்கு சாகசம் செய்ய பிடிக்குமா? என்றான். பிடிக்கும், என்றாள். இவள் சரி அப்போ பக்க்கத்துல ஒரு Forest அருகில் Falls இருக்கு அங்க போலாமா? என்றான். அங்கெல்லாம் நா வரலப்பா என்று மறுத்தாள் ரோஸி.

என்ன பயமா?' என்றான். அதெல்லாம் 'ஒன்னும் இல்ல' என்றாள். ரோஸி, அங்க ரொம்ப நல்லா இருக்கும், இந்த வெயில் காலத்தில், அங்கு சென்றால் நன்றாக குளிர்ச்சியாக இருக்கும். அது என்னோட 'Favorite place மனசுக்கு ரொம்ப ரிலாக்சா இருக்கும், நீ வராட்டா நானும் போகல. சரி வேற எங்க போகலாம்னு நீயே சொல்லு என்றான்', சரி 'அங்கயே போகலாம்' என்றாள் ரோஸி, இதுதான் உன்கிட்ட எனக்குப் பிடிச்ச விசயமே, i like you dear என்றான். o.k, நவின் நாளை காலை உன்ன நானே வந்து pick up பண்ணிக்கறன். என்றான்.

அடுத்த நாள், இருவரும் அதே காரில், சில காரியங்களை பேசிக்கொண்டே சிரித்தப்படி சென்றதில் தூரமும் நேரமும் தெரியவில்லை. நவீன் அந்த இடத்தின் அழகை ஒவ்வொன்றாகக் காட்டி வர்னித்த போது 'உனக்குள்ள ஒரு கவிஞனே இருக்கான்' என்றாள் ரோஸி, அது எல்லாத்தையும் விட நீதான் அழகு என்று ரோஸியை புகழ ஆரம்பித்தான்.

அதோ தூரத்தில் தெரியும் அந்த Dam இங்கிருந்து 55 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு. இதுதான் அதோட 0-பாண்ட் என்று காட்டினான். நேரம் சென்றது, அதுவரை நட்பாகப் பேசிக்கொண்டிருந்த நவீன் ரோஸியின் பின்னால் இருந்து திடீரென கட்டிப் பிடித்தான். ஒரு நிமிடம் அரண்டு போன ரோஸி, சுதாரிப்பதற்குள் அவளுக்கு முத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்தான், ஏற்கெனவே நவீனை மிகவும் நேசித்ததாலும், இயற்கையாகவே ஏற்படக்கூடிய பாலுணர்வினாலும், அவளால் மறுக்க முடியவில்லை. ஆனாலும் பயத்தினால் நா வரண்டு முகமெல்லாம் வேர்த்துப் போனாள், தனிமையாய் வாழும் அவளுக்கு அந்த ஸ்பரிசமும், அவனது அரவணைப்பும், அவளுக்கு ஒரு புதிய பரிமான மகிழ்ச்சியைக் கொடுக்க இருவரும் ஓருடல் ஆனார்கள்.

வீடு திரும்பியதும், அன்று இரவு ரோஸியால் தூங்க முடியவில்லை. மிகவும் குழப்பத்திலும், பயத்திலும் ஆழ்ந்தாள் ரோஸி, இது சரியா? தவறா? ஐயோ நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன்? 'கொஞ்சம் கூட எனக்கு அறிவில்லாமல் போயிற்றே' என்று தனக்குத் தானே பேசிக்கொண்டாள். மறுபுறமோ, இது சரிதான். அவனையே நான் கல்யாணம் செய்ய போகிறேனே. எனக்கு நவீனை பற்றி தெரியும், அவன் ரொம்ப நல்லவன் எனக்குப் பொருத்தமானவன் என்று தனக்குத்தானே சமாதாணம் சொல்லிக்கொண்டாள்.

நாட்கள் கடந்தது அவர்களின் தீய நட்பும் வளர ஆரம்பித்தது. ஒரு நாள் நவீனுக்கு போன் செய்து 'நவீன் எனக்கு ஒடம்பு கொஞ்சம் சரியில்லை, ஏதுவும் சாப்பிட முடிய வில்லை. குமட்டலாக இருக்கு, வாந்திக்கூட வருது, ஆஸ்பிட்டலுக்கு போகலாம் வாயேன் என்றாள். நவீனும் அழைத்துச் சென்றான். ஏதாவது Food poison ஆகியிருக்கும் என்றார் டாக்டர். கடையில் மருந்து வாங்கிக்கொண்டு இருவரும் திரும்பினார்கள், 
ஆனாலும் அவளுக்கு உடல் சரியானதாகத் தெரியவில்லை, 2 மாதங்கள் சென்றது, மறுபடியும் ஒருநாள் ரோஸி ஆஸ்பிட்டலுக்கு போனாள், மருத்துவர், அவளை பரிசோதித்து விட்டு, “உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா?” என்று கேட்டார், இல்ல சார், சீக்கிரம் ஆயிரும் என்றாள் ரோஸி. சீக்கிரம் பண்ணிக்கோமா, நீ இப்போ கர்ப்பமா இருக்க என்று சொன்னார் டாக்டர். 
இதைக் கேட்டவுடன் ஒருபக்கம் கொஞ்சம் பயந்து போனாள் ரோஸி, ஆனால் மற்றொரு பக்கமோ தன் வயிற்றில் இன்னொரு உயிர் வளர்கிறதை அறிந்து ஒரு சொல்ல முடியாத சந்தோஷம் அவள் உள்ளத்தை நிரப்பியது, நவீனிடம் சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவான் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்,

வரும் வழியில் சந்தோஷத்தில் தன் வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டே வந்தாள், தன் அறைக்கு வந்த உடன் நவீனுக்கு போன் செய்து 'நவீன் உடனே வீட்டுக்கு வாப்பா. உனக்கு ஒரு Surprise என்றாள்', அவன்; கொஞ்சம் பிசியா இருக்கேன் மதியம் வரட்டுமா? என்றான். 'அதெல்லாம் முடியாது நீ இப்பவே வா ஒரு சந்தோஷமான விஷயம்' என்றாள், 'போன்லயே சொல்லேன் ரோஸி' என்றான், 'முடியாது நீ நேரில் வந்தாள் சொல்லுகிறேன்’ என்றாள். சரி இன்னும் 30 நிமிடத்தில் நான் வருகிறேன். போன் வைக்கப்பட்ட சந்தம் கேட்டது, 

calling Bell சத்தம் கேட்டு ஓட்டமும், நடையுமாக சென்று கதவைத் திறந்தாள் ரோஸி, அவள் எதிர்பார்த்த படி நவீன் அவள் முன்னாள் நிற்க சந்தோஷம் பொங்க அவனை வரவேற்றாள். என்ன ஒடம்பு பரவால்லையா? டாக்டர் என்ன சொன்னார்? நாளைக்காவது ஆபீஸ் வருவீங்களா? என்றான்.

'அதெல்லாம் இருக்கட்டும் இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ, எனக்கு ஊட்டி விடு' என்றாள், 'என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க எதாவது ப்ரமோஷன் கெடச்சிருச்சா?' என்றான், 'ஆமா நம்ம ரெண்டு பேருக்கும் தான்' என்றாள், 'Mail எதுவும் வரலெயே' என்றான், 'மக்கு மக்கு நான் அந்த பிரமோஷன சொல்லல, நீங்க அப்பா ஆகப்போறீங்க' என்று சொல்லி நிறைந்த பார்வையில் அவனை ஏறிட்டு ஆசையாப் பார்த்தாள்.

நவீன் உணர்ச்சியற்றவனாக அவள் முகத்தைப் பார்த்து, 'என்ன Dear ‍கொஞ்சம் Careful லா இருந்திருக்க கூடாதா? இப்போது எதுக்கு, ஒன்று செய்யலாம் அபார்ஷன் பண்ண லேடி டாக்டர் யாரையாவது போய்ப் பாக்கலாம் என்று அடுத்த கட்டத்தைக் குறித்து யோசிக்கலானான். 

ரோஸியின் முகம் தெரித்த கோபம், அவள் மூக்கை சிவப்பாக்கியிருந்தது 'நவீன் நான் எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை சொல்லீட்டு இருக்கேன் நீ இப்படி பேசற இது நம்ம  குழந்தை இல்லையா? என்றாள் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு,

ரோஸியே தொடர்ந்தாள்; 'தயவு செய்து வா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்' என்று அவன் கையைப்பிடித்தாள், அவன் அவள் கையை உதரிவிட்டு 'நீ என்ன பைத்தியமா? நீயும் நானும் மியூச்சுவல் அன்டர்ஸ்டேன்டிங்ல செக்ஸ் வெச்சுகிட்டோம். நீயும் சந்தோஷமா இருந்த; நானும் சந்தோஷமா இருந்தேன், அவ்ளோதான் இதுக்குப் போய் கல்யானம் அது இதுனு சீரியச பேசற' என்றான், 
ரோஸி உணர்ச்சி மேலிட எழுந்து நின்று அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு கண்களில் பெருகிய நீருடன்; 'நவீன் எவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட, நீயெல்லாம் மனுஷனா? என் குழந்தைக்கு வழிசொல்லு' என்றாள்.

ஒரு Friend ஆக. நானே உனக்கு Help பண்றேன் வா ஒரு நல்ல லேடி டாக்டரா பாத்து அபார்ஷன் பன்னிரலாம் என்றான். கண்ணத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டாள் ரோஸி, பின்பு அவன் மார்பில் சாய்ந்து அழுக முயலும் போது,
நவீன் அவளைத் தள்ளிவிட்டு ஹேய் ஒன்னும் இல்லாத விசயத்துக்கு போய் இப்படி பண்ணற. என்ன தைரியம் இருந்தா என்ன கை நீட்டி அடிப்ப, உன்னுடைய விருப்பப்படி தான் உன்னை தொட்டேன் என்று கூறி, தொடர்ந்து, உனக்கு அபார்ஷன் பன்றதுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நெனச்சேன், ஆனா இப்போ அதுவும் செய்ய மாட்டேன். இனி நீ யாரோ நான் யாரோ good bye, என்று சொல்லி அவளை உதறி விட்டு, தன் காரில் வேகமாக ஏறி புறப்பட்டான்.

கார் வேகமாகக் கிளம்பிய சத்தம் கேட்டது, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இருந்த மகிழ்ச்சி நரகமாகிவிட்ட நிலையிலும், ஒரு தாயாக தன் குழந்தையை நினைத்து இன்புற்றாள் ரோஸி, ஆனால் அடுத்த வினாடி தன் எதிர்காலம், தன் பெற்றோர், சமுதாயம் எல்லாம் நினைவுக்கு வர இனி வாழ்ந்து பயனில்லை என்று முடிவுக்கு வந்து. தன்னிடம் இருந்த ஒரு புடவையை எடுத்து, மின்விசிறியில் கட்டி, தன்கழுத்தில் மாட்டித் தொங்கி உயிர்விட்டாள்.

விஷயம் கேள்விப்பட்ட ரோஸியின் பெற்றோர் அவமானம் தாங்காமல் கதறி அழுதார்கள், அப்போது அவளது தகப்பனாருக்கு தன்னுடைய சிறுவயதில் செய்த தவறு நினைவுக்கு வந்தது. அப்பொழுதுதான், தான் அன்றைக்கு செய்த தவறுக்கு இன்று நியாயத்தீர்ப்பு எழுதப்பட்டது என்ற உணர்வு அவருக்கு வந்தது, மனமுடைந்து தன் பழைய தவறுக்காக அழுது கதறினார். உறவினர்களிடமும், சமூகத்திடமும் சொல்ல மனதில்லாமல், ரோஸியின் பெற்றோர்கள் இருவரும், தற்கொலை செய்து கொண்டார்கள்.

இதை வாசிக்கும் என் அன்பு சகோதரியே, நவீனைப் போன்ற கயவர்கள் உன்னைச்சுற்றிலும் இருக்கக்கூடும், எச்சரிக்கையுடன் பழகு, ஒரு ஆண் ஒரு பெண்ணை சிக்ரெட், மது போன்ற ஒரு போதை வஸ்துவாகக் கூட பார்க்க முடியும், ஆனால் ஒரு பெண்ணால் அப்படி போதை வஸ்துவாகப் பார்க்க முடியாது எனவே எச்சரிக்கையுடன் இரு, 
இதை வாசிக்கும் என் அன்பு சகோதரனே, ஒருவேளை நீயும் நவீனைப்போல ஒரு பெண்ணிடம் தவறான நோக்கத்தோடு கூடப் பழகிக்கொண்டிருக்கலாம், “உன்னுடைய தவறை உன்னுடைய பிள்ளைகள் பிள்ளைகளின் பிள்ளைகள் வரை கடவுள் விசாரிப்பார்” என்று பைபிள் சொல்லுகிறது. (யாத்திராகமம் 20:5), நாளை உன் மகளுக்கும், சகோதரிக்கும் இப்படிப்பட்ட நிலமை வராமல் இருக்க வேண்டுமானால் இன்றே உன் தீய சிந்தனைகளையும், தீய செயல்களையும் விட்டு மனம் திரும்பு.  

இன்றைய காலக்கட்டத்தில் திருமணத்திற்கு முன் வைத்துக்கொள்ளும் பாலுறவு சரியே என்று அநேகர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வேதாக முறைமையின் படி இது தவறு. தேவனால் அக்கீகரிக்கப்பட்ட பாலுறவு, கணவன், மனைவியின் இடையில் உள்ளது மாத்திரமே. திருமணத்திற்கு முன்னதாக சில உணர்வுகளால் ஏற்படும்  உறவை “வேசித்தனம்” என்று வேதம் கூறுகிறது. இவ்விதமான பாலுறவு “பாவத்திற்கு” நம்மை வழிவகுக்கிறது. அநேக வாலிபர்களுக்கு இவைகள் தெரியாதப்படி, சாத்தான் வாலிபர்களின் மனதை குருடாக்கி வைத்திருக்கிறான். நாம் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் தானே என்று அநேகர் நினைப்பதுண்டு, ஆனால், அது வேசித்தனமாகிய பாவமே. இந்த ரோஸி  திருமணத்திற்கு முன்னதாக பாலுறவில் ஈடுப்பட்டதின் முடிவு மரணம். வேசித்தனத்தினால் இன்று அநேக வாலிபர்களை சாத்தான் தன்னுடைய வலையிலே சிக்கவைத்துக்கொண்டிருக்கிறான் எச்சரிக்கை.. 

I  கொரிந்தியர் 7:2. ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும். 

எபிரெயர் 13:4. விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

பாலுறவு தேவனால் ஏற்படுத்தப்பட்ட அற்புதமான காரியம்,  விலையேறப்பட்ட ஒன்று. ஆனால், ஒருவன் தன் திருமணத்திற்கு பிறகே பாலுறவில் ஈடுப்பட வேதம் நம்மை எச்சரிக்கிறது. 

நாம் வேசித்தனத்திற்கு விலகியிருக்க வேண்டும்.  (I கொரிந்தியர் 5: 1) உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ……அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. 

நம்முடைய சரீரம் தேவனுடைய ஆலயம், (I கொரிந்தியர் 6: 13,18). வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.  வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.

(I கொரிந்தியர் 10:8.) அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.

(கலாத்தியர் 5:19.) மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
(கொலோசெயர் 3:5.) ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
(I தெசலோனிக்கேயர் 4:3.) நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,

யூதா 1:7. அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.இந்த வாலிபர்களை போல நாம் வாழாதப்படி எச்சரிக்கையாயிருப்போம். நிச்சயமாக வேசித்தனம் பண்ணுகிறவர்கள் நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைவார்கள். 

சகோதரனே, சகோதரியே, இந்த வேசித்தனத்திற்கு, விபசாரத்திற்கு விலகி இருக்க தீர்மானம் செய்வாயா? 

சாத்தானின் கண்ணிக்கு தப்பிக்க ஒரே வழி தேவனுடைய வார்த்தை.

இக்கதையில் வரும் சம்பவங்கள், பெயர்கள் அனைத்தும் கற்பனையே

Post a Comment

1 Comments

  1. // விசயம் கேள்விப்பட்ட ரேனுவின் பெற்றோர் அவமானம் தாங்காமல் கதறி அழுதார்கள், அப்போது அவளது தகப்பனாருக்கு தன்னுடைய சிறுவயதில் செய்த தவறு நினைவுக்கு வந்தது, அப்போதுதான் தான் அன்று செய்த தவறுக்கு இன்று நியாயத்தீர்ப்பு எழுதப்பட்டது என்ற உணர்வு வந்தது, மனமுடைந்து தன் பழைய தவறுக்காக அழுதார். உறவினர்களிடமும் சமூகத்திடமும் சொல்ல மனதில்லாமல், ரேனுவின் பெற்றோர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள். //

    நண்பரே உங்களை விட உலகத்தான் நல்ல தீர்ப்பைத் தருகிறான்; நீங்கள் "விதி" படத்தைப் பார்க்கவில்லையோ..?

    சரியான கதைக் களத்தில் தவறான முடிவு...
    இது மாற்றத்தையல்ல,ஏமாற்றத்தையே தரும் என்பது எனது கருத்து.

    ReplyDelete