மின்மினிப் பூச்சிகள் நானற்புற்களின் மேல் கூட்டம் கூட்டமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நிலவொளியில் ஏரியின் நீரோட்டம் மங்களாக மின்னிக்கொண்டிருக்கும் மாலைமயங்கிய நேரத்தில் ஜான் கருவாட்டைக் கயிற்றில் கட்டி தண்ணீரில் போட்டு சேற்று நன்டுகளைக் கவர்ந்து அவைகளைப் பிடித்துக் கொண்டிருந்தான். ஜானுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு இது, மாத்திரமல்ல அவனுக்கு நன்டு வறுவலோடு சாராயம் குடிப்பது மிகவும் பிடித்தமானது, வாரத்தில் இரண்டு நாட்களாவது இப்படி நன்டு பிடித்துக் கொண்டுபோய் தன் மனைவியிடம் சமைத்துக் கொடுத்துத் தரசொல்லி தன் வீட்டிலேயே சாராயம் குடிப்பான். ஜான் அரசு நடத்தும் ரேசன் கடையில் விற்பனையாளனாக வேலை செய்து வந்தான்.
அன்று இரவு ஜான் தன் வீட்டில் அமர்ந்து அவன் நன்டு வறுவலோடு சாராயம் குடித்துக் கொண்டிருந்த போது, அவனுடைய நண்பன் சாமுவேல் நீ திருந்தவே மாட்டியா? என்ற கேள்வியோடு ஜானின் வீட்டுக்குள் நுழைந்தான். "உனக்கு ஏன்டா பொறாமையா இருக்கா? கள்ளச் சந்தையில ரேசன் அரிசியோட கிராக்கி அதிகம், கேரளா வியாபாரிங்க நல்ல விலைக்கு வாங்கிக்கராங்க, அதுல நல்லா சம்பாதிக்கறேன். சந்தோசமா இருக்கேன், நீ பொழக்கத் தெரியாதவன். இப்படித்தான் பேசுவ" என்று சாமுவேலை இகழ்ந்தான் ஜான். "எப்பதான் இவர் திருந்துவாரோ தெரில அண்ணா என்று சொல்லிக்கொன்டே ஜானின் மனைவி ஒருதட்டில் நன்டு வறுவலைக் கொண்டுவந்து சாமுவேலுக்கும் கொடுத்தாள், "இவன் நன்டுகளை கருவாட்டக் காட்டிப் பிடிப்பது போல இவன சாத்தான் காசக்காட்டிப் பிடிச்சிட்டான், இன்னும் கொஞ்ச நாள்ல சாத்தான் தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சாத் தான் இவனுக்கு புத்தி வரும்." என்று சாமுவேல் மறுமொழி சொல்ல, "உங்க வேலையப்பாருங்கடா" என்று தன் நண்பனையும் மனைவியையும் அடக்கினான் ஜான். இது இன்று நேற்றல்ல கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடந்துகொண்டுதான் இருந்தது.
ஒருசில மாதங்களுக்குப் பின்பு இந்தச் சம்பவங்களை அசை போட்டுக்கொண்டே கண்களில் கண்ணீரோடு தன் தலையைக் தன் தலைக்கு வைத்துக் கொண்டு கொசுக்கடியில் அவதிப்பட்டுக்கொண்டு ஜான் அந்த அழுக்கடைந்த திட்டில் படுத்துக்கொண்டு இருந்தான். ஐயோ என் மனைவியும் நண்பனும் சொல்ல்லியிருந்ததைக் கேட்டிருந்தால் நான் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கமாட்டேனே..!!!! எத்தனை எத்தனை அவமானங்கள் அடிகள், வேலையும் வேறு போய்விட்டது, போதாதற்கு அரிசி கடத்தலுக்காக மூன்று மாதம் சிறைவாசம் வேறு, என்னை நம்பி அரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுக்கச்சொன்ன அரிசியை நான் திருட்டுத் தனமாக பதுக்கி விற்றதால் அல்லவா இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன், என்று தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தான்.
நாட்கள் சென்றது, சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டான், சோர்வான நடையில் தன் தெருவில் நுழைந்து நடந்தான், எப்போதும் தன்னிடம் ஆசையாக வந்து "ஜான் மாமா" என்று தன் கால்களைக் கட்டிக்கொள்ளும் பக்கத்து வீட்டுப் பிள்ளையை ஜானைப் பார்த்தவுடன் அக்குழந்தையின் தாய் வேகமாகக் கதவைச் சாத்தினார். ஏற்கெனவே அவமானத்தால் குறுகியிருந்த ஜான் மேலும் அவமானமடைந்தான். தன் நண்பன் சாமுவேல் உடனிருந்தாலும், அவனோடு பேசவோ, அவன் முகத்தைப் பார்க்கவோ ஜான் விரும்பவில்லை இருவரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
வீட்டில் மயான அமைதி நிலவியது எல்லார் முகங்களிலும் ஒருவித இறுக்கம் தெரிந்தது, "படுவாவி படுவாவி இத்தன நாள் நான் சேத்தி வச்சிருந்த கவுருவத்த எல்லாம் ஒரே நாள்ல குழி தோண்டிப் பொதச்சுட்டான்" என்று தன் தலையில அடித்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார் ஊரிலிருந்து வந்திருந்த ஜானின் அப்பா. "ஜான் கொஞ்ச நேரம் அப்படித்தான் இருக்கும் நீ போய் குளிச்சிட்டு வா" என்று ஆறுதல் படுத்தினான் சாமுவேல். சிறிது நேரத்துக்குப் பின் ஜானின் மனைவி ஜானுக்குப் பிடித்த நன்டு வறுவலோடு மதிய உணவை ஜானுக்கும், சாமுவேலுக்கும் பரிமாறினாள். சாமுவேலின் மனைவி அவளுக்கு உதவி செய்தாள், தன் மனைவியின் முகவாடலையும் தன்னால் அவளுக்கு ஏற்பட்ட அவமானத்தையும் ஜான் ஒரு வினாடி நினைத்துப் பார்த்தான். அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தபோது அவளது கண்கள் அழுகையால் சிவந்தும் வீங்கியும் போயிருந்தது. தன் துக்கத்தை அடக்க முடியாமல். "சாமி எங்கண்ணு என்ன மன்னிச்சிருடா... நா திருந்தீட்டன்டா... என்று கதறி அழுதான்" ஜான். அழுகை பொறுக்கமாட்டாமல் தன் கையிலிருந்த ரசப் பாத்திரத்தை கீழே போட்டுவிட்டு அறைக்குள் ஓடினாள் ஜானின் மனைவி.
அவளை சாமுவேலும், அவன் மனைவியும் சமாதாணப்படுத்தி ஜானிடம் அழைத்து வந்தார்கள். ஜான் இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. சாமுவேல் பேச ஆரம்பித்தான், "ஜான் கேட்டுக்குப் போகும் வழி விசாலமானதுன்னு வேதம் சொல்லுதில்லயா? இப்போ அந்த வழி உன்ன எங்க கொண்டுபோய் விட்டுச்சின்னு பார்த்தயா? ஆண்டவருக்குக் கீழ்படிகிறது போல உன் எஜமானுக்கும் கீழ்படின்னு வேதம் சொல்லுது இல்லயா? இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல, இனியாவது அப்படி நடந்துக்கோ... அப்பதான் ஆண்டவர் உன்ன ஆசீர்வதிப்பார்" என்றான்." "இனி நான் இப்படிப்பட்ட தீமைகளுக்கு விலகியிருப்பேன். மாத்திரமல்ல இனி நான் ஆண்டவருக்கும், மற்றவர்களுக்கும் உண்மையுள்ளவனாய் இருப்பேன்." என்று சொன்னான் அடிவயிற்றிலிருந்து புறப்பட்ட அந்த வார்த்தைகளில் இருந்த உறுதியும், உண்மையும் அங்கிருந்த எல்லோராலும் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
சில மாதங்களில் ஜானுக்கு நல்ல வேலை கிடைத்தது, இப்போதெல்லாம் ஜானும் அவன் மனைவியும், அதிகாலமே எழுந்து தங்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டு முழங்காலில் நின்று தேவனை நோக்கித் துதிப்பதிலும், ஜெபிப்பதிலும், கூடியிருந்து ஐக்கியத்தில் பெலப்பட்டார்கள். ஜான் வேலையில் உண்மையும் உத்தமுமாய் நடந்து கொண்டதால் ஆண்டவர் அவனுக்கு உயர்வைக் கட்டளையிட்டார். சங்கீதம் 128ன் படி தேவன் ஜானையும் அவன் குடும்பத்தையும் ஆசீர்வதித்தார்.

இப்போதும் ஜான் நன்டு பிடிப்பதும் சமைத்துச் சாப்பிடுவதும் தொடர்கிறது, ஆனால் அங்கே சாராயம் இல்லை, அவன் பிள்ளைகளும், மனைவியும் அவனைச் சுற்றிலும் அமர்ந்து ஐக்கியமாக உணவருந்துகிறார்கள்..
5 Comments
நல்ல கதை..
ReplyDeletethank you Brother....
ReplyDeleteமீண்டும் நல்லதொரு கதை பிரதர். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார். தளவடிவமைப்பும் மிக அழகாக மனத்திற்கு இனிமையாக இருக்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்டு என்பது தவறான சொற்பிரயோகம். நண்டு என்பதே சரி.
ReplyDeleteமிக்க நன்றி சகோதரே, தேவனுடைய நாமத்துக்கே மகிமை உண்டாகட்டும், தங்களுடைய தளமும் வெற்றியடைய வாழ்த்துக்கள் இன்னும் அதிகமான பதிவுகளை இடுங்கள் நன்றி
ReplyDelete