Header Ads Widget

Responsive Advertisement

anaathi deavan | அனாதி தேவன்... -Tamil Christian Song Video & Lyrics


அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
அனுபல்லவி

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
சரணங்கள்

1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார் — இந்த

2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத் தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே — இந்த

3. கிருபை கூர்ந்து மன துருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் — இந்த

Post a Comment

0 Comments