Header Ads Widget

Responsive Advertisement

பாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம்-3



பெண்டா (Penta) என்ற கிரேக்க சொல்லுக்கு ஐந்து அல்லது ஐம்பது என்று பொருள், பஸ்கா பண்டிகைக்கு அடுத்து வரும் நாளை யூதர்கள் பெந்தாகோஸ்தே என்று அழைத்தார்கள், அப்படியென்றால் ஐம்பதாவது நாள் என்று பொருள், அந்த நாளில்தான் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார், ஆகவே பரிசுத்த ஆவியின் அனுபவம் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களை பெந்தகோஸ்தே கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

பொதுவாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட ஓவியங்களில் INRI ‍ என்று எழுதப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம், அந்த எழுத்துக்களுக்கு சரியான அர்த்தம்
"Iesvs Nazarenvs Rex Ivdaeorvm" என்பதாகும் இதன் பொருள் நசரேயனாகிய இயேசு கிறிஸ்து யூதர்களுடைய இராஜா என்பதாகும், அகஸ்ட சீஷர் என்ற ரோமப் பேரரசில் பாலஸ்தீனாவை ஆண்ட ஆளுநர் பிலாத்து இயேசுவைக் குறித்து எழுதி வைத்தது ஆகும்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் எருசலேம் தேவாலயத்தில் ரோம நாணையங்களைக் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை, காரணம் அதில் ரோம அரசனின் பெயரும், அவனுடைய உருவமும், பெயரோடு கூட கடவுளுடைய குமாரன் என்ற வாக்கியமும் இருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது, ஆகவே ஆலய வளாகத்தில் பிரதான ஆசாரியர்களே காசுக்கடை நடத்தி எட்டு ரோம நாணையங்களுக்கு ஒரு சேக்கல் என்ற விதத்தில் காசுகளை மாற்றி கொள்ளை இலாபம் அடித்தார்கள்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

சேக்கல் என்பது சிரியா தேசத்தின் நாணையம், அதில் சொரூபங்களும், அரசன் கடவுளுடைய மகன் என்ற வாக்கியங்கள் இல்லை, இது பாலஸ்தீனா பகுதியில் செல்லாது, ஆனால் தேவாலய காணிக்கையாக இது மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

யூதர்களில் செலோத்தே(Zelotes) எனப்பட்ட ஒரு குழுவினர் இருந்தார்கள், அவர்கள் ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராகக் கலகம் செய்த புரட்சியாளர்கள் ஆவர், இவர்கள் ரோமர்களுக்கு எதிராக வரிகொடா இயக்கம் நடத்தியவர்கள் ஆவர்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

நற்செய்தி நூல்களில் லூக்காவில் மட்டுமே, இயேசு பிறப்பைப் பற்றிய தகவல்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளது, மேலும் திருமுழுக்கு யோவானுடைய பிறப்பு குறித்த தகவல்களும் இந்த நூலில் தான் இருக்கின்றன. இதற்கு காரணம்; லூக்கா இயேசுவின் தாயாரான மரியாளிடம், இயேசுவின் பிறப்பைக் குறித்த தகவல்களை கேட்டறிந்து எழுதியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள், புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களில் லூக்கா மட்டுமே யூதரல்லாதவர், அவர் ஒரு கிரேக்கர், மற்றும் மருத்துவர் ஆவார்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

சமாரியர்கள் எனப்படுகிறவர்கள், யூதர்கள் பாபிலோனியர்களால் சிறைபிடித்துக் கொண்டு போகப்பட்ட போது, பாலஸ்தீனாவில் மீந்திருந்த யூதர்கள், இவர்கள் பாபிலோனிய போர்வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கும், கட்டாய திருமணத்திற்கும் ஆளாக்கப்பட்டு இணக்கலப்பு அடைந்தார்கள். சிறையிருப்பிலிருந்து திரும்பிய இணக்கலப்பு ஆகாத யூதர்கள் சமாரியர்களை இணக்கலப்பின் நிமித்தம் தாழ்ந்த குடிகளாக கருதினார்கள்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

தாலந்து என்ற வார்த்தை "talanton" ‍ என்ற கிரேக்க சொல்லின் நேரடி வார்த்தையாகும், இது கிரேக்க ரோமானியர்களின் காலத்தில் நாணையமாகவும், அளவீட்டு அலகாகவும் இருந்தது, இந்த சொல் மறுவி "Talents" ‍ என்று ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது, இதன் பொருள் திறமை என்பதாகும், உண் திறமைகளை இயேசு கிறிஸ்துவுக்காக பயன்படுத்துவாயா?

Post a Comment

2 Comments

  1. அருமையான அரிய தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. @Pethuru Devadasonதளத்திற்கு வந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி அண்ணா...

    ReplyDelete