Header Ads Widget

Responsive Advertisement

வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் பைபிள் அங்கிள் தளம்,

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஈடுஇணையில்லா நாமத்தில் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துதல்கள், இன்றைய தினம் நம்முடைய தளம் ஆரம்பிக்கப்பட்டு சரியாக நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் பிரவேசிக்கிறோம், இம்மட்டும் வழிநடத்திய தேவனுக்கு கோடானுகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறோம், சரியாக 2008 ஆண்டு மே 18 ஆம் நாளில் இந்தத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பிக்கும் போதே 70க்கும் அதிகமான பதிவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டு, அற்பமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தளம், இன்று சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 200க்கும் அதிகமானவர்கள் பார்வையிடும் தளமாக மாறியிருக்கிறது, வெறும் கிறிஸ்தவ பதிவுகள் மாத்திரம் இடம்பிடித்தாலோ, நாள்தோறும் எழுதாவிட்டாலோ, சமயம் சார்ந்த வலைப்பூக்களை வெற்றியடையச் செய்ய முடியாது என்ற பழைய சித்தாந்தத்தை உடைத்து தேவனுடைய அளவற்ற கிருபையால் சாதித்துக் காட்டியிருக்கிறது பைபிள் அங்கிள் தளம்,

கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட கிறிஸ்தவ மன்றம் என்ற Forum ‍ இந்த ஆண்டில் நீக்கப்பட்டு, கிறிஸ்தவ திரட்டி, மற்றும் கிறிஸ்தவ இணைப்பகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பைபிள் அங்கிளின் சார்புதளம் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு கிறிஸ்தவ மன்றம் என்ற பெயர் வைக்கப்பட்டது, அதோடு மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான புறஜாதியார் தங்கள் வலைப்பூக்களிலும், பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தும் பைபிள் அங்கிள் தமிழ் யூனிக்கோடு எழுதிக்கு, புதிய வடிவம் கொடுக்கப்பட்டு தேவனுடைய அன்பை பறைசாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அகபே தமிழ் எழுதி என்ற பெயர் வைக்கப்பட்டது.

அதோடு மாத்திரமல்ல, இஸ்லாமியர்களுக்கான கட்டுரைகள், மற்றும் கிறிஸ்தவ உலகில் நடக்கும் நாட்டு நடப்புகளைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் அகபே தமிழ் எழுதியின் சார்பு வலைப்பூவும் ஆரம்பிக்கப்பட்டது இந்த ஆண்டில் தான். ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட, அதே நேரத்தில் வெவ்வேறு தோற்றத்துடனும் செயல்படக்கூடிய மூன்று வலைப்பூக்களாக இந்த ஆண்டில் பைபிள் அங்கிள் தளம் பரிணமித்திருக்கிறது, இதற்காக தேவனைத் துதிக்கிறோம்,


அதோடு மட்டுமல்லாமல், நாள் தோறும் வேதத்தை தியாணிக்கச் செய்ய வேண்டி, இந்த ஆண்டில் SOAP 4 TODAY ‍ வலைப்பூவின் புதிய பதிவுகள் பைபிள் அங்கிள் தள வாசகர்களின் தின தியானத்திற்காக உடனுக்குடன் பகிற்ந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது,


கடந்த சில ஆண்டுகளில் புறஜாதியாரின் வருகை அதிக அளவில் இருந்தது இந்த ஆண்டில் அது சற்று குறைந்து போனது, ஆனாலும் புதிதாக இரட்சிக்கப்பட்டு நம்முடைய தளத்திற்கு வந்து பயன் பெற்றதாகச் சொல்லி நமக்கு வந்த மடல்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிக அளவில் இருந்தது,


அதுமாத்திரமல்ல, ஜெப ஊழியமும் பைபிள் அங்கிள் ஊழியத்தின் ஒரு அங்கம் என்பது யாவரும் அறிந்ததே, பைபிள் அங்கிள் வாசகர்களை ஜெபிக்கத்தூண்டும் வகையில் இந்த ஆண்டு பைபிள் அங்கிள் ஜெப அறைக்கென்று தனியாக ஒரு தளமே உருவாக்கப்பட்டுள்ளது eloi4u.org/prayer ‍ என்பது அந்தத் தளத்தின் முகவரியாகும், இந்தத் தளத்தின் மூலம் ஜெபம் குறித்த அனைத்து தகவல்கள், எப்படி ஜெபிக்கலாம், எப்படி ஜெபிக்கக்கூடாது, போன்ற விளக்கங்கள், மற்றும் பிரதி எடுக்கக்கூடிய மாதிரி ஜெபங்கள், ஆடியோ வகை ஜெபங்கள், புகுபதிகையுடன் கூடிய தன்னார்வ ஜெப ஊழியம் செய்ய விரும்புகிறவர்களுக்கான ஜெபக்குறிப்புப் பக்கம், பொதுவான ஜெபக்குறிப்புகள், ஆகியவை பைபிள் அங்கிள் ஜெப அறை பக்கத்தில் கர்த்தருக்கு சித்தமானால் வடிவமைக்கப்படவுள்ளது,


அதோடு மட்டுமல்ல வேத வாசிப்பை ஊக்கப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் நாடக வடிவிலான வேதாகமம் புதிய ஏற்பாடு இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தருவது மட்டுமல்லாமல் Online ‍ வழியாகவும் கேட்கவும், வேதாகம நூல்களைக் குறித்தும், அதைப் படிக்க வேண்டிய விதம், அந்த நூலின் வரலாறு ஆகியவையும் தனித்தனியாக கர்த்தருக்கு சிந்தமானால் தொகுக்கப்படவிருக்கிறது.

நம்முடைய இரட்சகரும் மீட்பருமாகிய இயேசுக்கிறிஸ்துவை தடவியாகிலும் கண்டுகொள்ளவேண்டும் என்று வேதம் நமக்கு போதிக்கிறது, அந்த வகையில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், வரலாற்றுத் தகவல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், பாடல்கள், இறை செய்திகள், திரைப்படங்கள், இலவச பதிவிறக்கங்கள், என ஏதாவதின் வாயிலாக அவரைக் குறித்துப் பறைசாற்ற வேண்டும், எந்த வகையிலாயினும் கிறிஸ்து அறிவிக்கப்பட்டே ஆகவேண்டும் என்ற உறுதியுடன் பைபிள் அங்கிள் தளம் செயல்பட்டு வருகிறது.

இந்த நல்ல தருணத்தில் இந்த தளத்துக்காகவும், இந்தத் தளத்திற்கு வந்து படிக்கும் முகம் தெரியாத இரட்சிக்கப்படாதவர்களுக்காகவும், உங்கள் தனிப்பட்ட குடும்ப மற்றும் குழு ஜெபங்களில் ஜெபித்துக் கொள்ளுங்கள், கர்த்தருக்கு சித்தமானால் நானும் உயிரோடிருந்தால், அடுத்த ஆண்டில் இன்னும் அதிக வளர்ச்சியுடனும், அதிக வசதிகளுடனும் பைபிள் அங்கிள் தளம் செயல்படும், என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன். எனக்காகவும் ஜெபித்துக்கொள்ள கிறிஸ்துவுக்குள் வேண்டுகிறேன்.

இந்தத் தளம் உருவாகவும், எழுத்து ஊழியத்தில் நான் ஈடுபடவும் காரணமாக இருந்த தமிழ் கிறிஸ்தவர்கள் தள நண்பர்கள், பேதுரு அண்ணா, கோவை அண்ணா, அற்புதம் அவர்கள், சகோதரி ருக்மனி, சில்சாம் அண்ணா, உட்பட அணைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இவர்களுடைய எழுத்துக்களே என்னை எழுத்து ஊழியம் செய்யமுடியும் என்று தூண்டியது,

அதோடு மட்டுமல்லாமல் தளத்தை பிரபலமாக்க முதன்முதலாக இணைப்புக் கொடுத்து உதவிய தமிழ் இஸ்லாம் வலைப்பூ நிர்வாகி அவர்களுக்கும், Blogging ‍ செய்வது தொடர்பாகக் கற்றுக்கொடுத்த ராபின்சன் மற்றும் ரிச்சர்ட் சகோதரர்களுக்கும், தள வடிவமைப்பில் உள்ள Flash player, மற்றும் படங்களை உருவாக்கக் கற்றுக்கொடுத்த கிறிஸ்னராஜு அவர்களுக்கும், இந்த ஆண்டிலும் இக்கட்டான சூழ்நிலையில் தானாக உதவி செய்த Peace Online Radio ‍ நிர்வாகி சுகுமார் அண்ணா அவர்களுக்கும், மிக மிக முக்கியமாக ஜெப அறையில் வரும் ஜெபக்குறிப்புகளுக்காக ஜெபித்து உதவிவரும் சகோ அற்புதம் அவர்கள், சகோதரி மீனா குமாரி அவர்கள், பிரபு ஜே டேணியேல் அவர்கள், வின்ஸ்டன் அவர்கள், சேட்ஜீவ் அவர்கள், ஆகிய ஜெபக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியையும் வாழ்த்துதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், இவர்கள் அணைவரும் பைபிள் அங்கிள் தளத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்குள்ளவர்களாவர், இவர்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட குடும்ப மற்றும் குழு ஜெபங்களில் ஜெபித்துக் கொள்ளுங்கள்.

நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே மகிமையடைவாராக.. ஆமென்

என்றென்றும் மாறாத அன்புடனும், உண்மையுடனும்
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரன்
ராஜ்குமார்.S

Post a Comment

0 Comments