Header Ads Widget

Responsive Advertisement

கிறிஸ்துவுக்கு பின் தோமா

கிறிஸ்துவுக்கு பின் தோமா

கிபி. 34ல் இயேசு கிறிஸ்து சீடர்களை விட்டு பிரிந்து பரத்திற்கு சென்ற பிறகு 11 சிஷர்களும் பிரமித்து போய் இவ்வூழியத்தை யார் யார் எங்கு போய் செய்வது என்று தங்களுக்குள் யோசனை பண்ணிக் கொண்டிருந்தனர். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த நற்செய்தி செல்ல வேண்டும். இதற்காக 11 பேரும் செர்ந்து தங்கள் ஊரில் உள்ள இயேசுவை அறிந்த பல அதிகாரிகளை கூட்டினர். அவர்கள் சுமார் 300 பேர்கள் கூடியிருந்தனர். அக்கால அரசர்கள் பொதுவாக ஒரு அரசனுக்கு பதவி கொடுக்க வேண்டுமென்றால் எல்லோருடைய பெயர்களையும் சிறு சிறு ஓலைகளில் எழுதி அதை ஒன்று சேர்த்து குலுக்கல் முறையில் ஒருவரை எடுக்க சொல்லி தேர்ந்தெடுப்பார். என்வே, நம் நாட்டில் தற்போது உள்ளது போல மக்களாட்சி அப்போது கிடையாது. சீடர்களின் உடன் ஆட்கள் எல்லாம் சேர்ந்து யார் எந்த தேசத்துக்கு செல்வது என்று யோசனை செய்யும்போது 300 பேர்களில் விசேஷித்த கிருபையை அனைவரும் கண்டனர். கூடியிருந்த மக்கள் அனைவரும் தங்களுக்குள்ளாக தோமா எங்கு செல்வாரோ? என்று சிந்தித்து கொண்டிருந்தனர்.
இயேசு உயிர்த்தெழுந்த பிறகும் கூட இயேசுவின் அற்புத அடையாளங்களை விசுவாசிக்காத தோமா அவர் உயிர்த்தெழுதலையும் நம்பவில்லை. இந்த ஆலோசனைக்குழு கூடும்போது சுமார் 7 மணி நேரம் ஏதும் பேசமல் அமைதியான சூழ்னிலையில் இருந்தாராம். 11 சீடர்களில் ஒருவர் ஒரு நல்ல யோசனையை சொன்னார். 11 பேர்களில் பெயரை எழுதி குலுக்கல் சீட்டு போட்டு யாருக்கு எந்த தேசம் வருகிறதோ அங்கு அவர்கள் செல்ல வேண்டும் என்று அந்த வேலையை துவங்கினார்கள். அந்த குலுக்கல் சீட்டை எடுப்பதற்கு பக்கத்து ஊரிலிருந்து ஏசுவின் அற்புதத்தை பெற்ற ஒரு நபரை அழைத்தார்களாம். முதல் மூன்று பேர்களை தேர்ந்தெடுத்த பிறகு நான்காவது பெயராக புனித தோமா என்று எழுதப்பட்டிருந்ததாம். பொதுவாகவே நான்காவதாக யாருடைய பெயர் வருகிறதோ அவார் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்று அவர்களுடைய தீர்மானசீட்டில் எழுதப்பட்டிருந்தது. ஆனல் தோமாவின் பேருடன் இந்தியா என்று வந்தவுடன் தோமாவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 7 மணி நேரம் மவுனமாக இருந்தவர் பேச தொடங்கி நான் யூத இனத்தை சேர்ந்தவனாயிற்றே. நான் எப்படி இந்தியாவுக்கு செல்ல முடியும் என்று மறுத்தாராம்.
மற்ற சீடர்கள் அனைவரும் நம் பரம பிதாவிடத்தில் வீற்றிருக்கும் கிறிஸ்துவின் கட்டளையை நீங்கள் மேற கூடாது என்று சொல்லி இந்தியாவுக்கு தோமா செல்ல வேண்டுமென்று ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர். அப்போதும் அவர் உடனடியாக தன்னுடைய பிரயாணத்தை தொடரவில்லை. நான் இங்கு குறைவாக விட்டிருக்கும் எனது ஊழிய பணியை முடித்துவிட்டு தான் இந்தியாவுக்கு செல்வேன் என்று சொல்லி சுமார் 4 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தார். கிபி. 38ம் வருடம் தோமாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க பாலஸ்தீன மக்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது அவர் புறப்படக்கூதாத படிக்கு 6 தடைகள் காணப்பட்டது. முதல் ஒரு நாளை குறிப்பிடும்போது தோமா சுகவீனப்பட்டுவிட்டாராம். மறு நாளை குறிப்பிடும்போது தன்னுடைய உடன் மக்கள் ஓர் அற்புதத்தை செய்ய வேண்டும் என்று சொல்லி அழைத்து கொண்டு போய்விட்டனர். மூன்றாவது நாளை குறிப்பிடும்போது அவர் ஒரு மரண வீட்டிற்கு செல்ல வேண்டியாதாயிருந்த்தது. நான்காது நாளை குறிப்பிடும்போது தான் பிரயாணம் செல்லும் கப்பல் பழுதடைந்துவிட்டது. 5 வது நாளை குறிப்பிடும்போது சில எதிருகள அவரை தாக்க முயன்றனர். ஆறாவது நாளை குறிப்பிடும்போது அவரை சூழ்ந்திருந்த மக்கள் ஜெபத்துடன் சில மணி நேரங்களில் அவரை கப்பலில் பிரயாணப்பட அமர்த்தினர். அவர் பிரயாணப்பட்டு வரும்போது குறித்த காலத்தில் இந்தியாவை வந்தடைய முடியவில்லை. பல இடங்களில் கப்பல் நிறுத்தப்பட்டு தோமாவினுடைய ஆழ்ந்த ஜெபத்தினால் இயற்கை சூழ்னிலை அவர்க்கு சாதகமாக அமைந்து சுமார் 90 நாட்கள் பிரயாணத்திற்கு பிறகு இந்தியாவின் தென்பகுதியான் கேரள மானிலத்தில் அவர் அடியெடுத்து வைத்தார்.

Post a Comment

0 Comments