Header Ads Widget

Responsive Advertisement

29. சாலமோன்


சாலமோன் ஞானமடைதல்
சாலமோன் எகிப்த்து பாரோவிடம் சம்பந்தம் கலந்து பாரோவின் மகளைத் திருமணம் செய்தான்.அந்நாட்கள் மட்டும் கடவுளுடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால், மக்கள் மேடைகளிலே பலியிட்டுவந்தார்கள். சாலொமோன் கடவுளிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஒரு நாள் கடவுள் சாலமோனின் கனவில் வந்து உனக்கு என்னவேன்டுமோ கேள் என்று கேட்டார். அதற்கு அவன், எனக்கு நீர் தெரிந்து கொன்ட இந்த இஸ்ரவேல் மக்களை ஆள ஞானமுள்ள இருதயத்தைத்தாரும் எனக் கேட்டான். கடவுளும் அவன் கேட்ட ஞானத்தை அவனுக்கு அளவில்லாமல் கொடுத்தார்.

சாலமோனின் சாதூர்யம்

ஒருநாள் இரண்டு பெண்கள் சாலமோனிடத்தில் நியாயம் விசாரிக்க வந்தார்கள். அவர்களில் ஒருத்தி, என் ஆண்டவனே, நானும் இந்த பெண்ணும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன். நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த பெண்னும் ஆண்பிள்ளை பெற்றாள்; எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை. இராத்திரி தூக்கத்திலே இந்த பெண் தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று. அப்பொழுது, நான் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள்; என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்த போது, அது செத்துக்கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்று பார்க்கும் போது, அது நான் பெற்றபிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள்.அதற்கு இந்தப் பெண், அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ, இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி சாலமோனுக்கு முன்பாக வாதாடினார்கள். அப்பொழுது சாலமோன் , உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி, ஒரு வாளை எடுத்து சாலமோன் ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான். அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் துடித்ததினால், சாலமோனை நோக்கி, ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள். அப்பொழுது சாலமோன் உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான். சாலமோன் தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் சாலமோனுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.

சாலமோன் சொன்ன நீதிமொழிகள்
சாலமோனின் ஞானம் மற்ற அனைவரைப் பார்க்கிலும் மிகவும் சிறந்ததாய் இருந்தது. அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து ஆகும். லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரம் மற்றும் தாவ‌ரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான்.

சாலமோன் கட்டிய ஆலயம்

மேலும் அவனுடைய கால கட்டத்தில் எதிரிகள் யாருமில்லாததால் அமைதி நிலவியது இதனால் கடவுளுக்கென்று ஒரு பெரிய ஆலயம் ஒன்றைக் கட்டத்தீர்மானித்தான். இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சால்மோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் இரண்டாம் மாதத்திலும், அவன் கடவுளின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான். அதில் கடவுளின் உடன் படிக்கைப் பெட்டியை வைக்க தனியாக ஒரு சன்னிதானத்தையும் நிறுவினான். அந்த ஆலயம் கட்டிமுடிக்க ஏழு ஆண்டுகள் ஆனது. சாலமோன் கடவுளின் ஆலயத்தைக் கட்டிமுடிந்ததும் கடவுள் இரன்டாம் முறையாய் அவனுக்கு தரிசனமாகி அவன் கட்டிய ஆலயத்தில் த்ன்னுடைய நாமம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என வாக்கருளினார்.

சாலமோனின் மீறுதல்

கடவுள் இஸ்ரவேல் மக்களை அன்னியப் பென்களின் மேல் ஆசை வைக்க வேண்டாம் அவர்கள் உங்களை என்னிடமிருந்து வழிவிலகிப் போகச் செய்து விடுவார்கள். என்று சொல்லியிருந்தார். ஆனால் சாலமோன் தனகென அன்னியப் பெண்களாய் ஏராளமான‌ மனைவிகளையும் மறு மனையாட்டிகளையும் வைத்துக் கொண்டான். இதனால் அவன் தன் தகப்பன் தாவீதைப் போல இல்லாமல் தன் வயது சென்ற நாட்களில் தன் மனைவிகளின் பேச்சைக் கேட்டு கடவுளைவிட்டு வழிவிலகிப் போனான். ஆம் அவன் அன்னிய தெய்வங்களை சேவிக்க ஆரம்பித்தான்.

கடவுளின் தன்டனை

கடவுள் சாலமோனை இரன்டுமுறை எச்சரித்தும் அவன் மனமாறவில்லை இதனால் கடவுள் மிகவும் கோபம் கொன்டார். மேலும் அவர் சாலமோனிடம் ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துக்கொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என சாலமோனை தன்டித்தார்.மேலும் கடவுள் சாலமோனுக்கு விரோதமாக; சேரேதா ஊரிலுள்ள நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலோமோனின் ஊழியக்காரனை கடவுள் அரசனாகத் தேர்ந்தெடுத்தார். அதை அகியா என்ற தீர்க்க தரிசியின் மூலம் அவனுக்கு அறிவித்தார். சாலமோன் இதை அறிந்து யெரோபெயாமைக் கொல்ல வகை தேடினான், ஆனால் யெரொபெயாம் எகிப்துக்கு தப்பியோடினான்.

சாலமோனின் முடிவு
சாலமோன் இஸ்ரவேல் மக்களை நாற்பது ஆண்டுகள் அரசாண்டு மரித்தான். அவனுக்குப் பிறகு சாலமோனின் மகன் ரெகொபெயாம் என்பவன் முடிசூட்டிக் கொண்டான். சாலமோன் இறந்த தகவல் கிடைத்ததும் யெரொபெயாம் நாடு திரும்பினான்.

Post a Comment

0 Comments