Header Ads Widget

Responsive Advertisement

30. இஸ்ரவேல் தேசம் உடைக்கப்பட்டது


புதிய மன்னனிடம் மக்களின் முறையீடு
சாலமோன் மரித்த பின்பு அவருடைய மகன் ரெகொபெயாம் என்பவன் ராஜாவாக முடிசூட்டிக் கொன்டான் அவனிடம் இஸ்ரவேல் மக்கள் வந்து “உன் தகப்பனுடைய ஆட்சியில் எங்களுக்கு ஏராளமான கெடுபிடிகள் இருந்தன, உங்கள் ஆட்சியில் எங்கள் மீதான கெடுபிடிகள் எப்படியிருக்கும் என நீங்கள் தெரிவிக்க வேண்டும்” என்று ரெகொபெயாமிடம் கேட்டார்கள் அதற்கு அவன் மூன்று நாள் கழித்து சொல்கிறேன் என்று சொல்லி தன் சபையில் இருந்த மூத்த அறிஞர்களிடம் ஆலோசனை செய்தான், அதற்கு சபையின் மூத்தவர்கள்; மன்னனிடம் ” நீ மக்களிடம் எனது ஆட்சியில் கெடுபிடிகள் அதிகமாக இருக்காது மேலும் மன்னனாகிய நான் உங்கள் சேவகன் எனச் சொல்லுங்கள்.” என ஆலோசனை வழங்கினார்கள்.

ஆலோசனையை மதிக்காத மன்னன்
ச‌பையின் மூத்த‌வ‌ர்க‌ளின் அறிவுறையை ஏற்காத‌ ம‌ன்ன‌ன் த‌ன்னுடைய‌ ந‌ன்ப‌ர்க‌ளின் ஆலோச‌னையைக் கேட்டான். அவ‌ன‌து ந‌ன்ப‌ர்கள்; “நீ ம‌க்க‌ளிட‌ம் என் த‌க‌ப்ப‌னின் ஆட்சியைவிட‌ என் ஆட்சியில் அதிக‌மான‌ கெடுபிடிக‌ள் இருக்கும்” என‌ அறிவிக்குமாறு சொன்னார்க‌ள். ம‌ன்ன‌னும் அப்ப‌டியே அறிவித்தான். இத‌னால் ம‌க்க‌ள் க‌ல‌க்க‌ம‌டைந‌த‌ன‌ர்.

தேச‌ம் உடைக்க‌ப்ப‌ட்ட‌து
இஸ்ர‌வேல் ம‌க்க‌ளில் யூதா கோத்திர‌த்தார் ம‌ட்டும் ரெகொபெயாமின் ஆளுகையை ஏற்றுக் கொண்டார்க‌ள், ம‌ற்ற‌ கோத்திர‌த்தார் அவனை மன்ன‌னாக‌ ஏற்றுக்கொள்ள‌ விரும்ப‌வில்லை. மேலும் அவ‌ர்கள் எகிப்திலிருந்து திரும்பிய யெரொபெயாமை ராஜாவாக‌ அறிவித்த‌ன‌ர். இத‌னால் இஸ்ர‌வேல் தேச‌ம் இர‌ண்டாக‌ உடைந்த‌து. இப்ப‌டியாக‌ சால‌மோனின் மீறுத‌லினால் உண்டான‌ சாப‌ம் நிறைவேற்ற‌ப் ப‌ட்ட‌து.

யெரொபெயாமின் மீறித‌ல்

யெரொபெயாம் தன் நாட்டு மக்களிடம், பொன்னினால் வார்க்கப்பட்ட இரண்டு கன்றுக் குட்டிகளை உருவாக்கி; இவைகளே உங்களை எகிப்திலிருந்து மீட்டுவந்த உங்கள் கடவுள். என அறிவித்து, அவைகளை வணங்கும் படியும் சொன்னான். மேலும் தன் மனதில் தோன்றிய ஒரு நாளைப் பன்டிகையாக அறிவித்தான், மேலும் அந்த நாளில் தானே முன்னின்று பலிகளை செலித்தி அச்சிலைகளுக்கு தூபம் காட்டினான். இது கடவுளின் பார்வையில் பொல்லாததாய் இருந்தது.

பலிபீடத்திற்கு சாபம்

யெரொபெயாம் பலிபீடதில் பலிசெலுத்திக் கொன்டிருக்கும் போது ஒரு கடவுளின் ஊழியக்காரன் அங்கே வந்து அந்த பலிபீடத்தை நோக்கி, பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கடவுள் உரைக்கிறார், என்றான். மேலும் பலிபீடம் வெடித்து அதன் மேலுள்ள சாம்பல் சிதறிப் போகும் இதுவே அதற்கு அடையாளம் என அறிவித்தான்.

யெரொபெயாமின் கைகள் மரத்துப்போதல்
க‌ட‌வுளின் ஊழிய‌க்கார‌ன் சொன்ன‌ ப‌டியே ப‌லிபீட‌ம் வெடித்த‌து இத‌னைக் கேள்விப்ப‌ட்ட யெரொபெயாம் அவ்வூழிய‌க்கார‌னை பிடிக்குமாறு சொல்லி கையை நீட்டினான். அந்த‌க்கை முடக்கக்கூடாதபடிக்கு அப்ப‌டியே ம‌ர‌த்துப்போன‌து. இத‌னால் மிக‌வும் ப‌ய‌ந்து போன‌ ம‌ன்ன‌ன் அந்த‌ ஊழிய‌க்கார‌னை நோக்கி தன் கையை குண‌மாக்க‌ க‌ட‌வுளிடம் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டான். அவ்வூழிய‌க்கார‌னும் அவ்வாறே வேண்டிக்கொண்டான். மன்னனின் கை ச‌ரியான‌து.

யெரொபெயாமின் மீறித‌லுக்கான‌ சாப‌ம்
யெரொபெயாமின் ம‌க‌ன் அபியா வியாதியடைந்தான். இத‌னால் தீர்க்க‌த‌ரிசியான‌ அகியாவிட‌ம் குறி கேட்க‌ த‌ன் ம‌னைவியை மாறு வேடத்தில் அனுப்பினான். அகியா அவ‌ளை அடையாள‌ம் க‌ண்டு கொண்டு யெரொபெயாம் செய்த‌ மீறுத‌ளின் நிமித்த‌ம். உன் ம‌க‌ன் இற‌ந்து போவான், மேலும் அவனைத்தவிர‌, அவ‌ன் ச‌ந்த‌தியாரில் யாவ‌ரும் ம‌ரித்து அட‌க்க‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட‌மாட்டார்கள். அவ‌ர்க‌ள‌து பிண‌ங்க‌ளை நாய்க‌ளும், ப‌ற‌வைக‌ளும், தின்னும். என‌ க‌ட‌வுள் சொல்கிறார்; என‌ அகியா ச‌பித்தான்.

யெரொபெயாமின் முடிவு
அகியா சொன்ன‌ப‌டியே யெரொபெயாமின் ம‌னைவி த‌ன் வீட்டிற்கு திரும்புகையில் அவ‌ள் ம‌க‌ன் ம‌ரித்துப் போனான். யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

ரெகொபெயாம்
சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, அவனது ஆட்சிக் காலத்தில் மக்கள் தங்கள் பிதாக்களைவிட அதிகமாக, கடவுளின் உடன்படிக்கைக்கு விரோதமான‌ ஏராளமான மீறுதல்களை செய்தனர். ரெகொபெயாம் உயிரோடு இருந்த நாளெல்லாம் யெரொபெயாமின் தேசத்தோடு கடும் போர் நடந்தது இப்போர்கள் பற்றி நாளாகமம் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. ரெகொபெயாம் நித்திரையடைந்தபின் அவனது மகன் அபியாம் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டான்.

Post a Comment

0 Comments