புலம்பல் பாட்டு
தாவீது சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான், பின்பு தாவீது சவுலின்பேரிலும் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும் புலம்பல் பாடினான். மேலும் தாவீது தனது நன்பர்களோடு இனைந்து கடவுளின் அருளால் பல தேசங்களை வெற்றி கொண்டான்.
இஸ்ரவேல் தேசத்திற்குத் திரும்புதலும் அரசனாதலும்
தாவீது இஸ்ரவேல் தேசத்திற்குத் திரும்பி அங்கே யூதா பட்டணம் ஒன்றில் தங்கினான். அங்கே அவனை யூதா பகுதிக்கு மட்டும் ராஜாவாய் முடிசூட்டப்பட்டான். மற்ற இஸ்ரவேல் பகுதி முழுமைக்கும் சவுலின் குமாரன் இஸ்போசேத் ராஜாவாக முடிசூட்டப்பட்டான். அவன் இரன்டு வருடம் அரசாண்டான். சவுல் குடும்பத்தினருக்கும் தாவீதுக்கும் இடையே நீண்ட காலம் சன்டை நடந்தது தாவீது வர வர பெலத்தான். நிறைவாக தாவீது இஸ்ரவேல் தேசம் முழுமைக்கும் ராஜாவாக அபிசேகம் பன்னப்பட்டான்,அவன் ராஜ்ஜிய பாரம் ஏற்கும் போது முப்பது வயதாயிருந்தான் அவன் இஸ்ரவேலை நாற்பது ஆண்டுகள் அரசான்டான். தாவீது சவுலிடமும் பெலிஸ்தியர்கள் கையிலிருந்தும் தன்னைக் காத்து வழினடத்தினதற்காக கடவுளுக்கு நன்றி கூறி சங்கீதப் பாட்டை பாடினான்.
தாவீதின் மீறுதல்
தாவீது ராஜா ஒரு நாள் அரன்மனை உப்பரிகையில் உலவும் போது அருகில் இருந்த குளக்கரையில் நீராடும் ஒரு பெண்ணின் மீது மோகம் கொண்டான். அவள் உரியா என்பவனின் மனைவி பத்சேபாள் என தெரிந்து அவளோடு கூடினான். அவள் கருவுற்றாள். இது கடவுளின் பார்வையில் மிகவும் பொல்லாதாய் இருந்தது. பின்பு தாவீது தன் தவறை மறைக்க போர்களத்தில் தன் சேனாபதி யோவாப்பிடம் போர்முனையில் இருக்கும் உரியாவை தன்னிடம் அனுப்புமாறு கட்டளையிட்டான். உரியா தாவீதைப் பார்க்க வந்தவுடன் அவனுக்கு அளவுக்கதிகமான மதுவைக் குடிக்கும் படி கொடுத்தான். ஆனாலும் அவன் தன் மனைவீ பத்சேபாளிடம் அவன் போகவில்லை, இதனால் உரியாவை போர்முனையில் எதிரிகள் எளிதாய் தாக்கும் பகுதியில் நிறுத்தி எதிரிகள் கையால் கொலை செய்துவிடும் படி ரகசியமாய் தன் நன்பனும் சேனாபதியுமான யோவாபுக்கு கட்டளையிட்டான். யோவாப் உரியாவை தாவீது சொன்னபடியே நிறுத்தி அவனை எதிரிகள் கையால் கொலை செய்யவைத்தான். பின்பு பத்சேபாளை தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.
சாலமோன் பிறந்தான்
பத்சேபாளுக்கு குழந்தை பிறந்தது அக்குழந்தையை கடவுள் அடித்தார் இதனால் அக்குழ்ந்தை கேவலமாய் இருந்தது பின்பு அக்குழந்தை இறந்தது. அதற்குப் பிறகு தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது அதனை கடவுள் மிகவும் நேசித்தார். அக் குழந்தை மிகவும் ஞானமுள்ளதாய் வளர்ந்தது,அதன் பெயர் சாலமோன் ஆகும். தனக்குப் பிறகு பத்சேபாள் தன் சுற்றத்தாரால் தீங்கு அனுபவிக்கக் கூடாது என தாவீது என்னி; தனக்குப் பிறகு சாலமோனே ராஜ்ஜிய பாரம் பன்னுவான் என் பத்சேபாளுக்கு ஆனையிட்டுக் கொடுத்தான்.
நாத்தான் சொன்ன கதை
கடவுள் நாத்தான் என்ற தீர்க்கதரிசியை தாவீதிடம் அனுப்பி: ஒரு ஊரில் ஒரு செல்வந்தனும் ஒரு தரித்திரனும் வாழ்ந்தார்கள் தரித்திரனுக்கு ஒரே ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் இருந்தது. செல்வந்தன் வீட்டுக்கு விருந்தினன் ஒருவன் வந்தான். அப்போது செவந்தன் தன்னிடமிருந்த ஏராளமான ஆடுகளை அடிக்க மனமில்லாமல் தரித்திரனின் ஆட்டைத் திருடி அதை அடித்தான் இதற்கு நீ என்ன தீர்ப்பு சொல்லுவாய் எனக் கேட்டான். அதற்கு தாவீது இது கன்டிக்கத்தக்கது செல்வந்தன் தரித்திரனுக்கு நாலு மடங்கு திரும்பச் செலுத்த வேண்டும் என தீர்ப்புக் கூறினான்.
தாவீதுக்கு சாபம்
நாத்தான் தவீதை நோக்கி தாவீதே நீதான் அந்த செல்வந்தன் உரியாவே அந்த தரித்திரன், நீ சொன்ன தீர்ப்பின் படியே உனக்கும் ஆகக் கடவது. நீ கடவுளை அசட்டைபண்ணி, உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால, பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். மேலும் கடவுள் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். என்ற சாபத்தை தாவீதுக்குக் கொடுத்தார்.
சாபம் நிறைவேறுதல்
இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.அவன் தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்;அம்னோனுக்கு யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி. யோனதாப் அம்னோனை நோக்கி நீ வியாதிக்காரனைப்போல உன்படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்கு உணவு கொடுக்க தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான். அப்படியே. தாவீது தமாருக்கு உத்தரவு கொடுத்தான். தமாரும் அப்படியே அவனுக்கு சமைத்து அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, நீ வந்து என்னோடே சயனி என்றான்.அதற்கு அவள், மறுத்தால் பின்பு வழுக்கட்டாயமாக அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளைவெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. அவன் அவளைத் தன்னை விட்டுப் போகும் படி தன் வேலைக்கரனை விட்டு வீட்டிற்கு வெளியே துரத்திவிட்டான். தாவீதுராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயெரிந்தான்.
அப்சலோம் பழிதீர்த்தான்
அப்சலோம் தன் சகோதரிக்கு நடந்ததை மனதில் வைத்து அம்னோனை பழிவாங்க என்னினான். அதற்காக ஒரு விருந்து ஏற்படு செய்து அம்னோனை அழைத்து அவனைக் கொலை செய்தான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய் அங்கே மூன்று வருஷம் இருந்தான்.
அப்சலோமின் முடிவு
பின்பு அப்சலோம் தன் தகப்பனும் ராஜாவுமான தாவீதுக்கு விரோதமான காரியங்களைச் செய்ய ஆரம்பித்தான். ஒருநாள் அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை சன்னல் பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின் கீழவந்ததினால், அவனுடைய தலைமுடி கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே போயிற்று. யோவாப், இதைக் கேள்விப்பட்டு அவனைக் கொன்று போட்டான். தாவீது இச்செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தான்.
பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.
தாவீதுராஜா வயதுமுதிர்ந்தவனாய் ஆனபோது இஸ்ரவேலரில்
ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் தான் ராஜா என அறிவித்துக் கொண்டான். இதனை அறிந்த பத்சேபாள் தாவீதிடம் போய் முறையிட்டாள் தாவீதி நாத்தானை அழைத்து சாலமோனை ராஜாவாய் அபிசேகம் பன்னக் கட்டளையிட்டான் சாலமோன் ராஜாவானான்.
0 Comments