Header Ads Widget

Responsive Advertisement

27. சவுலின் வீழ்ச்சி


சவுலின் சூழ்ச்சி
சவுல்; தாவீதோடே கடவுள் இருக்கிறார், என்று மிகவும் பயப்பட்டான், மேலும் அவன் மேல் பொறாமை கொன்டான். பெலிஸ்தியர் கைகளால் அவனைக் கொலை செய்ய என்னி தன் மகள் மீகாளை திருமணம் செய்து தருகிறேன்; நீ போய் நூறு பெலிஸ்தியர்களைக் கொன்று நுனித்தோலை எடுத்து வா என்று சொன்னான். தாவீதும் பெலிஸ்தியர்களிடம் போய் இருநூறு பேரைக் கொன்று அவர்களின் நுனித்தோலைக் கொன்டுவந்தான்.சவுலும் தன் மகள் மீகாளை திருமணம் செய்து கொடுத்தான். ஆனாலும் தாவீதை எப்படியாவது கொல்லவேண்டும் என்று வகைதேடி தன் மகன் யோனத்தானோடும் மற்றவர்களோடும் ஆலோசனை பன்னின்னான்.

யோனத்தானின் உதவி
யோனத்தான் தாவூதின் உயிர் நன்பனாக இருந்த படியால் தாவீதைத் தன் தகப்பனின் சூழ்ச்சிகளிலிருந்து தப்புவித்துக் கொன்டிருந்தான், மீகாளும் தாவீது தப்பிக்க வழி செய்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.

தாவீதுக்கு சமயம் வாய்த்தது

ஒரு சமயம் போர் நடக்கும் போது சவுல் பாளையத்தின் திறந்த வெளியில் தூங்கிக் கொன்டிருந்தான். அப்போது அங்கே வந்த தாவீது அவன் அருகில் வந்து பார்த்தான், அவனது நன்பர்கள் சவுலைக் கொன்று விடலாம் என்று சொன்னார்கள், தாவீதோ அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன் என்று சொல்லி; அவன் தலைக்கு அருகில் தரையில் குத்தப் பட்டிருந்த ஈட்டியையும் தன்னீர் சொம்பையும் எடுத்துச் சென்று சற்றுத் தொலைவில் நின்று சவுலை சத்தமிட்டுக் கூப்பிட்டான். சவுலும் அவனது போர் வீரர்களும் விழித்து எழுந்து சத்தமிட்டது தாவீது என அறிந்தனர். அப்போது தாவீது சவுலை நோக்கி நான் உன்னை இப்போதே கொலை செய்திருக்க முடியும் ஆனாலும் நான் அப்படி செய்யவில்லை என்று தான் எடுத்துச் சென்ற சவுலின் ஈட்டியையும் தண்ணீர் சொம்பையும் காட்டினான்.

மேலும் இஸ்ரவேலரின் மன்னனாகிய நீர் ஒரு சாதாரன தெள்ளுப் பூச்சியாகிய என்னை கொல்ல வகை தேடுகிறது என்ன? என்று கேட்டான், அதற்கு சவுல் தவறி செய்துவிட்டேன் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று கூறினான், பிறகு ஈட்டியையும் சொம்பையும் ஒரு வாலிபனிடம் கொடுத்தனுப்பினான்.

பெலிஸ்திற்கு தப்பியோடுதல்
தாவீது சவுலால் தனக்கு மீண்டும் ஆபத்துவரும் என அறிந்து தன்னோடு இருந்த அறநூறு பேர்களோடு இஸ்ரவேல் தேசத்திலிருந்து வெளியேறி; பெலிஸ்தியரின் தேசத்தில் குடியேறினான். சவுலும் தாவீது வெளியேறிவிட்டான் என அறிந்து அவனைத் தேடுவதை விட்டுவிட்டான். தாவீது பெலிஸ்திய‌ தலைவன் ஆகீஸ்ஸுக்கு விசுவாச‌மாய் இருந்தான். பெலிஸ்தியர்கள் ப‌டையெடுத்துச் சென்ற‌போது தாவீதும் அவ‌ர்க‌ளோடு சென்று உத‌வி செய்தான் இப்ப‌டியாக‌ தாவீது பெலிஸ்திய‌ தேச‌த்தில் ஒரு வ‌ருட‌ம் நான்கு மாத‌ங்க‌ள் த‌ங்கினான்.

பெலிஸ்தியர்கள் படையெடுப்பு

அந்நாட்க‌ளில் பெலிஸ்திய‌ர்க‌ள் இஸ்ர‌வேல‌ர்க‌ளின் மீது ப‌டையெடுத்து வ‌ந்த‌ன‌ர் ஆகீஸ் கேட்டுக் கொன்ட‌தால் தாவீதும் அவ‌ர்க‌ளோடு போர்க்க‌ள‌த்திற்கு வ‌ந்தான்.சாமுவேல் இத‌ற்கு முன்ன‌மே ம‌ரித்துப் போனான், ச‌வுல் தீர்க்க‌த‌ரிசிக‌ளையும் குறி சொல்லுகிறவ‌ர்க‌ளையும் இஸ்ரவேல் தேசத்திலிருந்து விர‌ட்டி விட்டிருந்தான்.

சாமுவேல் ஆவியின் தீர்க்கதரிசனம்
ச‌வுல் பெலிஸ்திய‌ரோடு யுத்த‌திற்கு த‌யாரானான்; பெலிஸ்திய‌ ப‌டைக‌ளைப் பார்த்து மிக‌வும் ப‌யந்தான். மேலும் அவ‌ன் க‌ட‌வுளிட‌த்தில் உத்த‌ர‌வுக்காக‌ காத்திருந்தான், ஆனால் க‌ட‌வுள் அவனுக்கு ம‌றுஉத்த‌ர‌வு த‌ர‌வில்லை. இத‌னால் ச‌வுல் மாறுவேட‌த்தில் குறி சொல்லுகிற‌ பெண்னிட‌ம் போய் “மரித்துப் போன சாமுவேலிடம் குறி கேட்க வேண்டும்” என்று சொன்னான். அப்பெண் மூலமாய் சாமுவேல் வெளிப்ப‌ட்டு ச‌வுலை நோக்கி “கடவுள் உன் மீறுதலின் நிமித்தம் உன்னை கைவிட்டுவிட்டார். உன் ராஜ்ஜியத்தையும் கடவுள் தாவீதிற்கு கொடுத்துவிட்டார். என்றும்; நீயும் உன் பிள்ளைக‌ளும் நாளைக்கு என்னிட‌த்திலே இருப்பீர்க‌ள்”. என்று சொன்னான்.

சவுலின் மரணம்

யுத்த‌ம் வ‌ழுத்த‌து இஸ்ர‌வேல‌ர்க‌ள் பெலிஸ்திய‌ரின் கைக‌ளுக்கு ஒப்புக் கொடுக்க‌ப் ப‌ட்டார்க‌ள். ச‌வுலின் ம‌கன்கள் யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் பெலிஸ்தியர்கள் கொலை செய்தார்கள்.

சவுல் வில் வீரர்களால் மிகவும் காயப்பட்டு, மிகவும் வேதனைப்பட்டுக் கொன்டிருந்தான். அப்போது சவுல் தன் ஆயுதக்காரனை கூப்பிட்டு பெலிஸ்தியர்கள் என்னை நெறுங்கிவிட்டார்கள் நான் அவர்கள் கைகளில் சாக விரும்பவில்லை எனவே நீ என்னை கொன்று போடு என்று சொன்னான், ஆயுதக்காரன் பயப்பட்டான் அப்போது சவுல் தன் வாளை தரையில் குத்தி அதன் மீது விழுந்து உயிர் துரந்தான். சவுலோடே இருந்தவர்களும் அவ்வாறே மரித்துப் போனார்கள்

Post a Comment

0 Comments