Header Ads Widget

Responsive Advertisement

26. தாவீது


இரகசிய முடிச்சூட்டு
சாமுவேல் கடவுள் கான்பித்த படியே பெத்தலகேமிற்குச் சென்று ஈசாயின் குமாரன் தாவீதுக்கு எண்ணெய் ஊற்றி அரசனாக்கினான், ஆனால் அவன் மிகவும் சிறியவனான படியால், அவனுக்கு சவுலால் ஏதும் ஆபத்து வராமலிருக்க அதைவெளிப்படையாக அறிவிக்கவில்லை.

பொல்லாத ஆவியும் சவுலும்
சவுலுக்கு அசுத்த ஆவி வ‌ந்து நிலைகுழையச் செய்தது, ஆகவே கின்னரம் வாசிக்கும் ஒருவனை அழைத்து வந்து அவனுக்கு அசுத்த ஆவி மேலிடும் போதெல்லாம் கின்னரம் வாசித்து, அந்த ஆவியை சாந்தப்படுத்த முயன்றார்கள் அப்போது தாவீது கின்னரம் வாசிப்பதில் வல்லவன் என அறிந்து அவனை சவுலின் அரன்மனைக்கு அழைத்து வந்தனர். தாவீதும் அந்த பொல்லாத ஆவி சவுலின் மேல் வரும் போது கின்னரம் வாசித்து சவுலை குண‌மாக்குவான்.

கோலியாத்
அந்தக் காலகட்டதில் பெலிஸ்தியர் மற்றும் இஸ்ரவேலர் இடையேயான போர் உச்ச கட்டத்தில் இருந்தது போர்க்களத்தில் பொலிஸ்திய வீரனான கோலியாத் என்பவன், இஸ்ரவேலரைப் பார்த்து தன்னை வென்றால் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலரின் அடிமை என்னிடம் யார் வந்து சன்டை போடுகிறீர்கள் என்று சவால் விடுவான். இதைக் கேட்ட இஸ்ரவேலர்கள் சிதறி ஓடுவார்கள். இப்படியே நாற்பது நாட்கள் இஸ்ரவேலர்களைப் பார்த்து சவால் விடுவதும் அதைக் கேட்ட இஸ்ரவேலர்கள் சிதறியோடுவதும் வாடிக்கையாக இருந்தது.

போர்க்களத்தில் சிறுவன்

தாவீதின் மூத்த சகோதரர்கள் சவுலோடு போர்க்களத்தில் இருந்தனர், அதனால் தாவீதின் அப்பா அவர்களுக்கு உணவு கொன்டுபோய் கொடுத்து அவர்களைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுவா என தாவீதை போர்க்களத்திற்கு அனுப்பினார், தாவீதும் தன் தகப்பனார் சொன்னபடியே போர்க் களத்திற்குச் சென்று தன் சகோதரர்களைப் பார்க்கப் போனான்,அப்போது கோலியாத் வழக்கம் போல இஸ்ரவேலருக்கு எதிராக வந்து நின்று சவால் விட்டான், ஆனால் இஸ்ரவேலர்கள் சிதறி ஓடினார்கள் இதைக் கண்ட தாவீது, நான் கடவுளின் துனையோடு இவனை கொல்லுவேன் என்று சொன்னான். இதைக் கேட்ட தாவீதின் சகோதரர்கள் தாவீதை மிரட்டி அவனை வீட்டிற்கு திரும்பச் சொன்னார்கள். ஆனாலும் அவன் திரும்பிப் போகாமல் சவுலிடம் போய் நான் கோலியாத்தை வீழ்த்தத் தயார் என்று சொன்னான், அதற்கு சவுல் நீ மிகவும் சிறியவன் உன்னால் முடியாது, நீ திரும்பி உன் வீட்டிற்குப் போ என்று சொன்னான்.

தாவீதின் வீரம்

தாவீது சவுலைப் பார்த்து நான் ஆடுமேய்க்கும் போது என் ஆட்டை ஒருமுறை சிங்கமும் ஒரு முறை கரடியும் கவ்விக் கொண்டு போனது ஆனால் நான் அவைகளை கொன்று எனது ஆடுகளை மீட்டேன் அந்த சிங்கம் கரடி போல இந்த கோலியாத்தும் நம் கடவுளின் முன்னால் சிறியவனே என்று சொன்னான்.சவுலும் அதற்கு சம்மதித்து தாவீதை போர் உடை அணியச் சொன்னான், தாவீது போருடையணிந்து நடந்து பார்த்தான், அது அவனுக்கு மிகவும் சிறமமாக இருந்த படியால் அவைகளை கழற்றிப் போட்டு விட்டு சாதாரன உடையோடு கோலியாத்தை எதிற்கச் சென்றான்.

போர்வாளுக்கு எதிராய் விசுவாச ஆயுதம்
போர்களத்தில் கோலியாத் கையில் மிகப்பெரிய வாள் இருந்தது தாவீதின் கையில் ஆற்றிலிருந்து எடுக்கப் பட்ட ஐந்து கூலாங்கற்கலும் கவன் மட்டுமே இருந்தது, கோலியாத் தாவீதைப் பார்த்து நீயோ சிறுவன், உன்னிடம் வாளும் இல்லை என்று கேலி செய்தான், அதற்கு தாவீது உன்னிடம் இரும்பால் செய்யப்பட்ட வாள் மட்டும் தான் உள்ளது என்னிடம் எல்லாம் வல்ல இறைவனின் அருள் உள்ளது என்று சொல்லி, தன் கையிலிருந்த கவனில் கல்லை வைத்து கோலியாத்தை நோக்கி வேகமாய் அடித்தான், அக்கல் கோலியாத்தின் நெற்றியில் புதைந்தது அதே இடத்தில் கோலியாத் மூர்ச்சையாகி கீழே விழுந்தான், தாவீது ஓடிப் போய் கோலியாத்தின் வாளையெடுத்து அவனைக் கொன்று போட்டான்.

இஸ்ரவேலர்களின் வெற்றி
இதைக் கண்ட இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியரை துரத்திச் சென்று வெற்றி பெற்றனர். இதனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதைத் தன் நன்பனாக்கிக் கொன்டான். யோனத்தான் தாவீதிற்கு தன்னுடைய உடைகளையும் ஆயுதங்களையும் வழ‌ங்கி; தாவீது வீட்டிற்குப் போகவிடாமல் தன்னிடமே வைத்துக் கொன்டான்,

சவுலின் பொறாமை
பெலிஸ்தியருக்கு எதிரான போரில் இஸ்ரவேல் மக்கள வெற்றி பெற்றதால் மக்கள் எல்லோரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அப்போது, இஸ்ரவேல் பெண்கள் சவுலுக்கு எதிர்கொண்டு வந்து சவுல் கொன்றது ஆயிரம்; தாவீது கொன்றது பதினாயிரம் என்று பாட்டுப் பாடினார்கள். இதனால் சவுல் தாவீதின் மேல் பொறாமை கொன்டான்,

சவுலின் திட்டம்
மறுநாள் சவுலின் மேல் மீன்டும் பொல்லாத ஆவி வந்தது அந்த ஆவியைத்தனிக்க தாவீது தன் சுரமண்டலத்தை எடுத்து வாசித்தான், அப்போது சவுல் தாவீதைக் கொலை செய்யத் தன் வாளை உருவி இரண்டு முறை அவன் மேல் வீசினான். தாவீது அதிலிருந்து தப்பியோடினான். சவுல் கடவுள் தன்னிடம் கடவுள் அருள் இல்லையென அறிந்து மிகவும் பயந்து போனான், தாவீதிடம் கடவுளின் அருள் இருப்பதை அறிந்து அவனைப் பார்த்து சவுல் மிகவும் பயந்து; தாவீதை தன்னை விட்டுத் தள்ளியிருக்கும் படி அவனை ஆயிரம் பேருக்கு அதிபதியாய் வைத்தான். தாவீதை மக்கள் மிகவும் நேசித்தனர். மேலும் அவன் புத்திசாலியாய் நடப்பதைக் கண்டு சவுல் மிகவும் பயந்தான், மேலும் சவுல் தாவீதைக் கொல்ல வகைதேடிக் கொன்டிருந்தான்,

Post a Comment

0 Comments