Header Ads Widget

Responsive Advertisement

திருவிருந்து ஒரு சிறப்பு பார்வை

சாக்கிரமந்துகள்
ஞானஸ்நானமும் திருவிருந்தும் சாக்கிரமந்துகள் எனப்படும், சாக்கிரமந்து என்பது இலத்தீன் சொல் ஆகும், அதன் தமிழ் அர்த்தம் திருவருட்சாதனம் எனப்படும், இதில் திருவிருந்து என்பது நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூறும்படி நாம் கடைபிடித்து வருகிறோம், இந்த திருவிருந்து பழைய உடன்படிக்கைக் காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்ததா? ஆதித் திருச்சபையினர் கடைபிடித்த திருவிருந்தை உலகத்தார் எப்படிப் பார்த்தார்கள்? திருவிருந்தின் அடிப்படை என்ன? யாரெல்லாம் திருவிருந்தை எடுக்கலாம்? எப்படியெல்லாம் திருவிருந்தை எடுக்கக் கூடாது? என்பதைப்பற்றிய தெளிவான விளக்கங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.


ஆதித்திருச்சபையில் திருவிருந்து
அதித்திருச்சபைக் காலத்தில் சபை கூடிவரும் பொழுதெல்லாம் அப்பம் பிட்குதல் நடந்தது, இந்த அப்பம் பிட்குதல் சகலத்தையும் சமமாகப் பங்கிட்டு வாழ்ந்த திருச்சபையினரின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாகவே இனைந்திருந்தது. வெளியிலிருந்து பார்த்த புறஜாதியார் அப்பத்தை மாமிசமாகவும் திராட்சை இரசத்தை இரத்தமாகவும் கருதி அவற்றைப் புஷிப்பது நரமாமிசம் சாப்பிடுவதற்கு ஒப்பானது என்று சாடினார்கள். இதனால் அனேகர் ஆதித் திருச்சபையினரைக் காட்டுமிராண்டிகள் என்றே அழைத்தனர். ஆனால் ஆதித்திருச்சபை முற்பிதாக்கள் நாங்கள் அப்பத்தை சரீரமாக மாற்றுவது இல்லை, திராட்சை இரசத்தையும் இரத்தமாக மாற்றுவது இல்லை,  எங்களுக்காக பிட்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை நினைவுகூறும்படி நாங்கள் அப்பம் பிட்கிறோம், அப்போது அப்பம் அப்பமாகவே இருக்கிறது சரீரமாக மாறுவது இல்லை, ஆகவே நாங்கள் நரமாமிசம் சாப்பிடுவது இல்லை, அதே போல எங்களுக்காக சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தத்தை நினைவுகூறும் படியாக நாங்கள் திராட்சை இரசத்தைக் குடிக்கிறோம்., அந்த திராட்சை இரசமும் இரத்தமாக மாறுவதில்லை என்று விளக்கம் அளித்தார்கள்.

பழைய உடன்படிக்கையில் திருவிருந்து
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டினத்தாருக்கு எழுதின முதலாம் கடிதத்தில் 10 ஆம் அதிகாரம் 1,2 வசனங்களில் பழைய உடன்படிக்கைக் காலத்தில் இந்த சாக்கிரமந்துகள் எப்படி நிகழந்தன எனபதை நமக்கு விளக்குகிறார், அதிலும் குறிப்பாக திருவிருந்து பற்றி அவர் சொல்லும் போது, " அவர்கள் ஒரே ஞான போஜனத்தை புஷித்தார்கள் என்றும், எல்லோரும் ஒரே பானத்தைக் குடித்தார்கள் எப்படியெனில் அவர்களோடே கூடச் சென்ற ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள் அந்த கன்மலை கிறிஸ்துவே என்று விளக்குகிறார்.

பழைய உடன்படிக்கைக் காலத்தில் தேவன் இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கிய போது புறப்படும் அவசரத்தில் புளிக்காத மாவில் அப்பம் சுட்டு சாப்பிட்டார்கள், எகிப்த்தியர்களுக்கு உண்டான கடைசி வாதையின் போது சங்காரத்தூதன் வீட்டின் தலைச்சான் பிள்ளைகளை சங்கரிக்கக் கடந்து சென்ற போது இஸ்ரவேலர்கள் தங்கள் குடும்பத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு ஆட்டையாவது, மாட்டையாவது பலியிட்டு அதன் இரத்தத்தை அவர்களது வாசல்களின் நிலைகளில் பூசினார்கள். அப்படி இரத்தம் பூசப்பட்ட வீடுகளை சங்காரத்தூதன் கடக்கும் போது அவர்களுக்கு எவ்வித சேதமும் உண்டாகவில்லை, ஆனால் அப்படிப் பூசப்படாத எகிப்திய வீடுகளில் சேதம் உண்டானது.

புதிய பஸ்கா
இந்த விடுதலையின் நாளைத் திரும்பிப் பார்க்கும் ஒரு நினைவுகூறுதல் பண்டிகைதான் யூதர்களின் பஸ்கா பண்டிகை, அப்படிப்பட்ட ஒரு பஸ்கா பண்டிகையைக் கொண்டாடத்தான் இயேசுவும் அவருடைய சீஷர்களும் எருசலேம் சென்று, அந்தப் புளிப்பில்லாத அப்பப் பண்டிகையைக் கொண்டாடும் அந்த இராத்திரியில் தானே நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்பத்தை எடுத்து பிட்டு "இது உங்களுக்காக பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது" என்றார், பின்னும் அவர் திராட்சை இரசம் நிரம்பிய பாத்திரத்தை எடுத்து "இந்தப் பாத்திரம் என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது இதில் பாணம் பண்ணும் பொழுதெல்லாம் என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள்" என்றார்,

மேற்கண்ட இந்த சம்பவமானது மாம்சத்தின் படியான இஸ்ரவேலர்கள் கடைபிடித்து வந்த பஸ்கா பண்டிகையையும், புதிய உண்படிக்கையில் விசுவாசத்தால் ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாக இனைந்திருக்கும் நம்மையும் இனைக்கும் ஒரு முக்கியமான சம்பவம் ஆகும், இங்கே பழைய உடன்படிக்கையில் பஸ்கா பண்டிகையின் திரிஸ்டாந்தமான நோக்கம் நிறைவடைகிறது,

கால்களைக் கழுவுதல் யூதமரபு
மேலும் அந்த இராத்திரியிலே பஸ்கா விருந்துண்ண இயேசுவும் அவருடைய சீஷர்களும் யூதர் ஒருவருடைய வீட்டில் தங்கியிருந்தார்கள், பொதுவாக யூதர்களுடைய வீட்டுக்கு வரும் விருந்தினர்களை கௌரவப் படுத்த அந்த வீட்டின் வேலைக்காரர்கள் வந்து அந்த விருந்தினர்களின் பாதத்தைக் கழுவுவார்கள், இது ஒரு யூத மரபாகும், ஆனால் நம்முடைய இரட்சகர் அந்தப் போஜனப் பந்தியிலிருந்து எழுந்திருந்து தன்னுடைய அங்கிகளைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு சீலையை அரையிலே சுற்றிக்கொண்டு தன்னுடைய சீஷர்களின் பாதத்தைக் கழுவினார், இதன் மூலம் தன்னுடைய சீஷர்களுக்கு தாழ்மையைப் போதித்தார்,

பஸ்கா பண்டிகையின் நினைவுகூறுதலை நிறைவே திருவிருந்து என்பதை அறிந்தோம், பஸ்கா பண்டிகை போலவே திருவிருந்தும் ஒரு நினைவுகூறும் ஆசரிப்பு ஆகும், ஆம் அதை நாம் ஆசரிக்கும் போதெல்லாம், நாம் நமக்காக பலியிடப்பட்ட பஸ்காவாகிய ஆட்டுக்குட்டியானவரை நினைவுகூறுகிறோம். அவருடைய மரணத்தையும், அவருடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை அன்று சங்கார தூதனிடமிருந்து இஸ்ரவேல் மக்கள் காப்பாற்றப் பட்டது போல ஆக்கினைத் தீர்ப்புக்கு நாமும் காப்பாற்றப்படுவோம் என்பதையும் நினைவுகூறுகிறோம், இன்னும் கூட‌

திருச்சபைகளில் திருவிருந்துக்கு முன்பாக நாம் ஏறெடுக்கும் ஜெபத்தில், "உம்முடைய மரணத்தை நினைவுகூருகிரோம், உம்முடைய உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறோம், நீர் வரக் காத்திருக்கிறோம்" என்று அறிக்கையிடுகிறதும் இந்த நினைவுகூறுதலின் தொடர்ச்சியாக இரண்டாம் வருகையையும் விசுவாசித்து அறிக்கையிடுகிறோம்.


சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர்வரக் காரணம் திருவிருந்தே,
நிறைவாக இந்த திருவிருந்து கிறிஸ்துவைத் தலையாகக் கொண்ட சபையாகிய சரீரத்தில் நம் ஒவ்வொருவரையும் ஒன்றாக கரைதிறைகளைக் களைந்து வேறுபாடுகள் இல்லாமல் இனைக்கிறது எப்படியெனில், ஆதித்திருச்சபையினர்கள் கிறிஸ்துவின் சீஷர்கள என்றே அழைக்கப்பட்டு வந்தார்கள். அவர்கள் அந்தியோகியா பட்டனத்தில் தான் முதன்முதலாக கிறித்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள், இந்தப் பெயர் அவர்களுடைய கிரியைகளாயேயோ, செயல்களினாலேயோ வந்தது இல்லை, மாறாக அந்த பட்டனத்திலே யூதர்கள் இருந்தார்கள், கிரேக்கர்கள், பெர்ஷியர்கள், என்று கிறிஸ்துவைப் பற்றிக் கொண்ட அனேக இனத்தார் ஒரே சபையாகக் கூடிவந்தார்கள். அப்பம் பிட்குதலிலும் பங்கு கொண்டார்கள், பொதுவாக யூதர்கள் மற்ற இனத்தார்களோடே கூடி போஜனபாணம் பண்ணுகிறது இல்லை, ஆனால் அந்தியோகியாவில் கிறிஸ்துவைப் பற்றிக் கொண்ட யூதர்கள் கிரேக்கர்கள், பெர்ஷியர்களோடே கூடி அப்பம் பிட்டு போஜனம் செய்தார்கள், அப்படிப்பட்ட யூதர்களை கிறிஸ்துவை தூஷித்த யூதர்கள் கேலி செய்வதற்காகவும், கிறிஸ்துவைப் பற்றிக் கொண்ட புறஜாதியாரைக் கேலி செய்யவுமே கிறிஸ்தவர்கள் என்ற பெயர் உண்டானது.

கேலி செய்ய வைக்கப்பட்டது தான் கிறிஸ்தவர்கள் என்ற பெயர், இதற்கு அப்பம் பிட்குதலாகிய திருவிருந்து மிக முக்கியக் காரணம் ஆகும். ஒரு அப்பமானது வெவ்வேறு செடிகளில் வெவ்வேறு இடங்களில் விளைந்த கோதுமை மணிகளை ஒன்றாகத் திரட்டி, வேறுபாடுகளற்ற ஒரே மாவாகப் பிசைந்து ஒரே வார்ப்பில் அப்பமாக மாற்றப்படுகிறது, நம்முடைய இரட்சகர் தன்னுடைய சரீரமாக நினைவுகூறும்படி சொன்ன அப்பமானது நம்மைப் போல பல்வேறு சந்ததிகளிலிருந்து இனைந்திருக்கும் திருச்சபையாகும், நம்மில் யூதர்கள், கிரேக்கர்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள், ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடுகள் இல்லாமல் கறைதிரைகளற்ற வேறுபாடுகள் களைந்து பாவங்கள் சுத்தீகரிக்கப்பட்டு ஒரே சரீரமாகிய அப்பமாகிய திருச்சபையாக உருவாக்கப்படுகிறோம் என்பதையும் இந்தத் திருவிருந்தில் நாம் நினைவுகூறுகிறோம்.


திருவிருந்தை யாரெல்லாம் எடுக்கலாம்?
இயேசு கிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகள் இன்றி தங்களுடைய இரட்சகருடைய மரணத்தையும், அவருடைய இரத்தத்தால் செய்யப்பட்ட புதிய உடன்படிக்கையையும், நினைவுகூறும்படி நாம் யாவரும் இயேசுகிறிஸ்துவாகிய கர்த்தரின் பந்தியில் சேரலாம்.


எப்படியெல்லாம் திருவிருந்தை ஆசரிக்கக்கூடாது?
நாம் அபாத்திரமாக கர்த்தருடைய பந்தியில் சேரக்கூடாது, அப்படி ஒரு சடங்காச்சாரத்திற்காகவோ, பெருமைக்காகவோ, சோதித்துப் பார்க்கும்படியாகவோ, பந்தியில் சேர்ந்தால் அவன் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும் குறித்து குற்றமுள்ளவனாக இருப்பான் என்று வேதம் சொல்லியிருக்கிறது, இதுவரை அப்படிப்பட்ட அபாத்திரவானாய் திருவிருந்தில் பங்குகொண்டு வந்திருந்தால் முதலாவது தேவனிடத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மணம் திரும்பி நம்மை நாமே சோதித்து அறிந்து என்னுடைய பாவமன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவால் சிந்தப்பட்ட புதிய உடன்படிக்கைக் குரிய இரத்தம், என்னுடைய மீறுதல்களுக்காக பிட்கப்பட்ட இயேசுகிறிஸ்துவின் சரீரம் என்ற உணர்வுள்ளவர்களாய் கர்த்தரின் பந்தியில் சேர்வோம்மாக,

நம்முடைய பிதாவானவர் தம்முடைய ஒரே பேரான குமாரனை விலைக்கிரயமாக செலுத்தி நம்முடன் செய்து கொண்டுள்ள இந்த புதிய உடன்படிக்கையை நினைவுகூறும் புதிய பஸ்காவாகிய திருவிருந்தை பரிசுத்தமான ஆசரிப்போம், திருவிருந்தில் தேவனுடைய அன்பின் ஆழத்தை புரிந்து கொள்வோம் ஆமென்,.

Post a Comment

0 Comments