Header Ads Widget

Responsive Advertisement

புனித தோமா இந்தியாவில் பணி செய்த ஏழு ஸ்தலங்கள்


புனித தோமா இந்தியாவில் பணி செய்த ஏழு ஸ்தலங்கள்

முதன் முதலாக கேரள மானிலத்தை அடைந்து அங்கு சுமார் 14 ஆண்டுகள் ஊழியத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இது முதல் ஸ்தலமாகும்.அன்றைய நாட்களில் கேரளத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் நெருங்கிய உறவு முறை கொண்ட ஜனங்களாக இருந்ததினால் ஒரு குடும்பத்தின் பிள்ளைகள் திருமண வாழ்க்கை என்று வரும்போது தங்கள் சொந்த குடும்பத்தில் மட்டுமே திருமணம் செய்வது வழக்கம். இதனால் உறவு முறை திருமணத்தினாஅல் ஊனமுடைய மக்கள் குறிப்பாக பார்வை இழத்தவர்கள் அதிகமாக வசித்தனர். இந்த தேசதில் புனித தோமாவிற்கு அனேக ஜனங்கள் ஆதரவு கொடுத்ததினால் அங்கு அதிக எதிர்ப்புகள் நிகழவில்லை. அதே சயதில் அவர்கள் எளிதில் இரட்சிக்கப்பட புனித தோமாவின் வார்த்தைகள் அனேக உள்ளங்களை தொட்டது. சில நாட்களுக்கு பிறகு இந்தியாவில் வேறு மானிலத்து ஜனங்களையும் சந்திக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, உத்திரபிரதேசத்துக்கு கடந்து சென்றார். இங்கு கிபி. 52ம் வருடம் அங்கு வசித்தவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்று கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அவர் அங்கு ஒரு வருடம் மட்டும் தங்கி திருப்பணியாற்றினார். பிறகு அந்த இடத்தை விட்டு நேராக ஆந்திர மானிலத்திற்கு வந்தார். இங்கு தங்கி ஊழியம் செய்யும்போது திருச்சபைகளை கட்டுவதற்கான ஈடுபாடு அவருக்குள் வந்தது. அன்றைக்கு அங்கு வசித்து கொண்டிருந்த மக்கள் விவசாயத்தையே முழுமையாக செய்து வந்ததினால் பாமரமக்கள் அதிகம் காணப்பட்டனர். இங்கு அவர் ஒருவருடம் தங்கியிருந்த போது நேராக வடமானிலத்தை நோக்கி புறப்பட்டார். தற்போது டில்லி என்று அழைக்கப்படும் இந்தியாவின் தலைனகறுக்கு அருகே பஞ்சாப் ஹரியானா ஆகிய சிறு மானிலங்களில் அவர் தங்கி ஊழியம் செய்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு தென்பகுதியில் உள்ள கர்னாடகா மானிலத்தை சந்தித்தார். இங்கு அவர் அந்நாட்களில் வாழ்ந்து குடிசை தொழில் புரியும் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். கர்னாடகத்தில் அவர் தங்கியிருக்கும் வேளையில் ஒரு நாள், தான் செய்த ஊழியத்தின் பின்னணியை நோக்கி பார்க்கும்போது, தான் அமைத்திருந்த‌ உடன் சிஷர்கல் குழுவை அழைத்து தான் சென்ற பாதைகளை பின்பற்ற பல இடங்களுக்கு அவர்களை அனுப்பி வைத்தார். இன்றைக்கும் ரோமன் கத்தோலிக்க வரலாற்று காவியத்தில் தோமாவுடைய சீஷர்களுக்கு பின், வந்த 17 தலைமுறையினரில் 17வது தலைமுறையினரை இப்போதும் நம் நாட்டில் காணலாம். கர்னாடக மானிலத்தை விட்டு மீண்டும் கேரளாவுக்கு சென்று அங்கிருந்து தமிழ் நாட்டில் உள்ள சென்னை பட்டணத்தை நோக்கி வந்தார். இது இவர் கால் வைத்த தேசங்களில் ஏழாவது ஸ்தலமாகும்.

Post a Comment

0 Comments