நோவாவின் குமாரர் சேமின் வம்சாவழியில் வந்தவர் ஆபிரகாம் ஆவார்
புதிய நாட்டிற்கு செல்லுதல்
ஆபிரகாம் ‘ஊர்’(Ur) என்கிற ஊரில் வாழ்ந்துவந்தார். ஆபிரகாமும் அவர் தந்தையும் ஆடுமேய்ப்பவர்கள். கடவுள் ஆபிரகாமை சொந்த நாட்டைவிட்டுக் கிளம்பி தான் காட்டும் நாட்டிற்கு பயணிக்கச் சொன்னார். ஆபிரகாம் பல நாடுகளுக்குச்சென்று வாழ்ந்துவிட்டு கடைசியாக எகிப்துக்குச் சென்றார்.
எகிப்து மன்னரின் செயலும் பெரும் நோயும்
ஆபிரகாமின் மனைவி சாரா ஆவார், அழகான பெண். எகிப்தில் நுழையும் முன் ஆபிரகாம் சாராவின் அழகைக்கண்டு எகிப்தியர்கள் தன்னைக் கொன்றுவிட்டு அவளை அபகரிக்கக்கூடும் என நினைத்து சாராவிடம், “நீ என் மனைவி எனச் சொல்லாதே சகோதரி எனக் கூறு” என்கிறார். ஆபிரகாம் நினைத்தது போலவே சாராவின் அழகில் மயங்கி எகிப்திய மன்னன், பாரோ, ஆபிரகாமுக்கு பொன்னும் பொருளும் அளித்து சாராவை அடையப் பார்க்கையில் கடவுள் ஒரு பெரும் நோய்க்கு எகிப்தியர்களை ஆளாக்கினார்.
கானானுக்கு திரும்புதல்
பாரோ பின்னர் சாரா ஆபிரகாமின் மனைவி என்பதைத் தெரிந்துகொண்டு, “நீ ஏன் என்னிடம் பொய் சொன்னாய். இதோ எனக்கு நோய் வந்ததற்கு காரணம் நீதான். உடனே உன் மனைவியை அழைத்துக்கொண்டு எகிப்தை விட்டு வெளியேறு” என்றான்.ஆபிரகாமும் எகிப்தைவிட்டு வெளியேறி தான் முன்பு வாழ்ந்து வந்த கானான் நாட்டிற்கு திரும்பினார். ஆபிரகாம் கானான் நாட்டிலே வாழத்துவங்கினார்.
கடவுளின் அருள்
கடவுள் ஆபிரகாமுக்கு ஏராளமான செல்வத்தை கொடுத்திருந்தாளும் குழந்தை பாக்கியத்தை தரவில்லை ஆபிரகாமுக்கு நூறு வயதான போது கடவுள் ஆபிரகாமுக்கு அருள் புரிந்தார் சாராள் கற்பவதியாகி ஈசாக் என்ற குமாரனைப் பெற்றாள்.
கடவுள் ஆபிரகாமைச் சோதித்தல்;
கடவுள் ஆபிரகாமை நோக்கிகூப்பிட்டு, ஆபிரகாமிடம் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ எனக்காக தகனபலியாகப் பலியிடு என்றார். ஆபிரகாம் அதற்கு சம்மதித்து அதிகாலையில் எழுந்து, ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்து கொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி, என் தகப்பனே நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம், என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்;
கடவுளின் ஆசீர்வாதம்
ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தி தன் மகனைவெட்ட கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமை அழைத்து உன்னை சோதிக்கவே அப்படிசெய்தேன் என்று சொல்லி ஒரு ஆட்டுக்குட்டியை அனுப்பினார்
ஆட்டுக்குட்டியை அவர்கள் பலியிட்டுத் திரும்புகையில் கடவுள்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்று ஆசீர்வதித்தார்
0 Comments