Header Ads Widget

Responsive Advertisement

40 யோனா


நினிவே பட்டணம்
நினிவே என்ற ஊரில் ஏராளமான மக்கள் வசித்தார்கள் அந்த நகரம் மூன்று நாள் சுற்றிப்பார்க்கும் வகையில் பிரமாண்டமாய் இருந்தது. மேலும் அந்த நகரத்து மக்கள் அனைவரும் கடவுளுக்கு விரோதமான காரியங்களைச் செய்தனர். அவர்கள் செய்த அக்கிரமங்கள் கடவுளின் சமூகத்தை எட்டினது

யோனா
அமித்தாயின் மகனாகிய‌ யோனாவுக்குக் கடவுளின் வார்த்தை உண்டாகி நினிவேவுக்கு போய் அவர்களின் அக்கிரமங்களுக்கு விரோதமாக பிரசங்கி மேலும் அவர்கள் மணம் திரும்பாமல் போனால் நாற்பது நாளில் அப்பட்டணத்திற்கு அழிவு வரும் எனவும்ச சொல்லப்பட்டது.

யோனாவின் விருப்பமின்மை
ஆனால் யோனாவுக்கு நினிவே செல்ல விருப்பமில்லை. இதனால் அவன் கடவுளின் சமூகத்திற்கு விலகி தர்ஸிஸுக்குப் போக கப்பல் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டான்.கப்பலில் அவன் கடவுளின் சமூகத்திற்கு விலகி ஓடிப்போகிறவன் என அறிமுகப்படுத்திக் கொண்டான். மேலும் அவன் கப்பலின் அடித்தலத்திற்குச் சென்று அங்கே தூங்கிவிட்டான்.

சூறாவளி கப்பலைத் தாக்கியது
கப்பல் தர்ஸிஸு பட்டணம் நோக்கி பயணமாகையில் கடவுள் பெரும் சூறாவளிப் புயலை அணுப்பினார். அதனால் கப்பல் மிகவும் அதிகமாக தத்தளித்தது மேலும் தண்டு வலிப்பவர்கள் வேகமாய்த் தண்டு வலித்தும் கப்பல் நகரவில்லை கப்பல் உடைந்து விடுமளவு காற்று பலமாய் இருந்தது. அப்போது கப்பலிலிருந்தவர்கள் எல்லாம் தங்கள் கடவுள்களிடம் கப்பலின் பாரத்தை லேசாக்கும் படி வேண்டினார்கள். மேலும் கப்பலிலிருந்த பொருட்களையெல்லாம் எடுத்து கடலில் எரிந்தனர்.

கடலில் வீசப்பட்ட யோனா
அப்போது கீழ் தலத்தில் தூங்கிக்கொண்டிருந்த யோனாவிடம் கப்பலின் மாலுமி வந்து கப்பல் மூழ்கிப் போகாத படி உன் கடவுளிடம் விண்ணப்பம் பண்ணு என்று சொன்னான். அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியாலும், அவன் கடவுளின் சமூகத்திற்கு விலகி ஓடிப்போகிறவன் என அறிமுகப்படுத்திக் கொண்ட படியால் அவனை விசாரித்தார்கள். மேலும் இந்த அலைக்கழிப்புக்கு யார் காரனம் எனச் சீட்டுப் போட்டார்கள் சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. அவனிடம் சென்று இந்த அசாதாரண நிலை மாற நாங்கள் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டனர் அதற்கு யோனா என்னைக் கடலில் தூக்கிப் போடுங்கள் கடலும் காற்றும் அமைதியாகும் என அறிவித்தான். கப்பல் காரரும் அப்படியே செய்தார்கள். கடல் அமைதியானது.

மீனின் வயிற்றில் வேண்டுதல்
கடலில் வீசப்பட்ட யோனாவை கடவுள் ஒரு மீன் விழுங்கக் கட்டளையிட்டார். மீன் அவனை விழுங்கியது. மீனின் வயிற்றுக்குள்ளிருந்து யோனா கடவுளை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். கடவுள் அவன் மேல் இறக்கம் பாராட்டினார். அந்த மீன் அவனை கடற்கரையில் வந்து கக்கியது

நினிவேயில் பிரசங்கமும் மக்களின் மணமாற்றமும்
மீன் வாயிலிருந்து உயிர் பிழைத்த யோனா கடவுளின் கட்டளைப்படி நினிவேவுக்குப் போனான் அங்கே கடவுளின் எச்சரிக்கை வார்த்தைகளைப் பிரசங்கித்தான். மக்கள் மணந்திரும்பினார்கள். மேலும் அவர்கள் ஆக்கினைக்குத்தப்ப உபவாசமிருந்தார்கள். இதனால் கடவுள் அப்பட்டணத்தின் மேல் இறக்கம் பாராட்டினார்.

யோனாவின் வருத்தம்
யோனா கடவுளை நோக்கி நீர் மக்கள் மேல் இறக்கமுள்ளவர் என்பதை அறிந்ததால் தான் அங்கே போக மறுத்தேன். இப்போது நான் நினைத்தபடியே ஆயிற்று என வருந்தினான்,

காட்டாமணக்குச் செடி மூலம் யோனாவுக்குப் பாடம்

கடவுள் அவனுக்கு சில காரியங்களை உணர்த்த அவன் தங்கியிருந்த குடிசையின் வெளியே ஒரே நாளில் நிழல் தரும் வகையில் ஒரு காட்டாமணக்குச் செடியை வளரவிட்டார். காலையில் கண்விழித்த யோனாவிற்கு அந்தச் செடி நிழல் கொடுத்தது இதனால் அச்செடியை யோனா மிகவும் நேசித்தான். ம்றுநாள் கடவுள் ஒரு வண்டைக் கட்டளையிட்டார். அது அச்செடியை அரித்தபடியால் அச்செடி பட்டுப்போனது இதனால் யோனா மிகவும் வருத்தப்பட்டான்

Post a Comment

0 Comments