தாலந்துகள்
இயேசு கடவுள் ஒவொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக பயன்படுத்தி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொருள் பட மக்களுக்கு கூறினார். “உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்” என்பதை முக்கிய குறிக்கோள் வசனமாக குறிப்பிடலாம். இது வேதத்தில் மத்தேயு 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது.
தாலந்துகள்:இங்கு தாலந்துகள் என்பது “talanton” என்ற கிரேக்க பதத்தின் நேரடி எழுத்துப் பெயர்பாகும். இது கிறிஸ்துவுக்கு முன்னரான காலந்தொடங்கி கிரேக்கம்,உரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நிறை மற்றும் நாணயத்தின் அளகாகும். இச்சொல்லே பின்னர் பழைய ஆங்கிலத்தில் “talente” என மறுவி இன்று “Talents” என மறுவி திறமை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
உவமை
நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். ஒவ்வொரு பணியாளர்களின் திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், வேரொருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, எசமான் பயணம் போனான். ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எசமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
எசமான் திரும்பினார்
நீண்ட நட்களுக்கு பிறகு அந்த பணியாளரின் எசமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் தான் அவர்களுக்கு கொடுத்த தாலந்துகளுக்கு கணக்குக் கேட்டார். அப்பொழுது, ஐந்து தாலந்தை பெற்றவன், மேலும் ஐந்து தாலந்துகளைக் கொண்டுவந்து: எசமானனே, ஐந்து தாலந்துகள என்னிடத்தில் ஒப்புவித்தீரே அவைகளைக் கொண்டு, இதோ, மேலும் ஐந்து தாலந்துகளைச் சம்பாதித்தேன் என்றான். அவனுடைய எசமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள பணியாளனே, நீ சிறிய பணியில் உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், நீ என்னுடன் விருந்துண்டு களிகூரு என்றார். இரண்டு தாலந்துகளை பெற்றவனும் வந்து: பிரபு, இரண்டு தாலந்துகாளை என்னிடத்தில் ஒப்புவித்தீரே அவைகளைக்கொண்டு, இதோ, மேலும் இரண்டு தாலந்துகளை சம்பாதித்தேன் என்றான். எசமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள பணியாளனே, சிறிய பணியில் உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன் நீயும் என்னுடன் விருந்துண்டு களிகூரு என்றார்.
முயற்சியற்றவனின் முடிவு
ஒரு தாலந்தை பெற்றவெனோ வந்து: ஐயா, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமான மனிதர் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து, நீர் எனக்கு கொடுத்த தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன் இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். அவனுடைய எசமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பேரியுமான பணியாளனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. அப்படியானால், நீ என் பணத்தைக் வட்டியாற்களிடம் கொடுத்து வைத்திருக்க வேண்டாமோ? அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்யிருப்பேனே? என்று சொல்லி, அவனிடத்திலிருந்த தாலந்தையும் பறித்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுத்தார். உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற பணியாளனாகிய இவனை வீட்டுக்கு வெளியே இழுத்து போய் இருளிலே தல்லுங்கள் என்றார்.
கருத்து
கடவுள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் திற்மையை கொடுத்துள்ளார். அவற்றை பயன்படுத்தி மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கடவுள் மேலும் திறமைகளை கொடுப்பார். திறமையை வளர்காது இருந்தால் அவனிடம் இருந்த சிறிய திறமைகளும் அகற்றப்படும்
0 Comments