Header Ads Widget

Responsive Advertisement

18.புத்தியுள்ளவன் கட்டிய வீடு


புத்தியுள்ளவன் கட்டிய வீடு

இது மத்தேயு 7:24-27 இல் கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்த்துவின் வார்த்திகளை பின்பற்றுபவர்கள் என புத்தியுள்ளவர்களாய் இருப்பார்கள் என பொருள்படும்படி இக்கதையை கூறினார்.

உவமை
இருவர் வீடு கட்டத்தொடங்கினர். ஒருவன் புத்தியுள்ளவன் தனது வீட்டை பாறை மீது கட்டுகிறான். அறிவிலியான மற்றவன் தனது வீட்டை மணல் மீது கட்டுகிறான். பின்னர் மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது ஆனால் பாறை மீதிருந்த வீடோ விழாமல் நின்றது ஏனெனில் பாறையின் மீது அடித்தளம் இடப்பட்டிருந்ததால் “பாறை மேல் வீடு” விழவில்லை. ஆனால் மணல் மீது கட்டப்பட்ட வீடோ அழிந்த‌து.

பொருள்
இயேசு சொன்ன இவ் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கிறவன் இயேசு எனும் பாறை மீது தனது அடித்தளத்தை இடுகிறான். ஆனால், அறிவிலியோ அவர் சொற் கேளாமல் போவதால் மணல் மீது தன் அடித்தளத்தை இடுகிறான்.

இறை சொல் கேட்கும் புத்தியுள்ள மனுசன், உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வந்தாலும் அம்மனிதன் (வீடு) பாவ வழிகளுக்குள் விழமாட்டான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
ஆனால் இயேசு சொன்ன வார்த்தைகளின் படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வரும்போது அம்மனிதன் பாவ வழிகளுக்குள் விழுந்துவிடுவான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டவில்லை

Post a Comment

0 Comments