Header Ads Widget

Responsive Advertisement

33.முட்டாள் உக்கிராணக்காரன்(வேலைக்காரன்)

முட்டாள் உக்கிராணக்காரன்(வேலைக்காரன்)

இது லூக்கா16:1-9 இல் காணப்படுகிறது.

உவமை
செல்வர் ஒருவருக்கு வீட்டுப் வேலைக்காரர் ஒருவர் இருந்தார். அவர் தம் முதலாளி உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது. முதலாளி அவரைக் கூப்பிட்டு, “உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது” என்று அவரிடம் கூறினார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், “நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் முதலாளி என்னை நீக்கி விடப்போகிறாரே. மண்வெட்டவோ என்னால் இயலாது, பிச்சை எடுத்துண்ணவும் வெட்கமாய் இருக்கிறது.
வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் என்று அவர் தமக்குள்ளே சொல்லி.
பின்பு அவர் தம் முதலாளியிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், “நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?” என்று கேட்டார். அதற்கு அவர், “நூறு குடம் எண்ணெய்” என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், “இதோ உம் கடன் சீட்டு உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்” என்றார். பின்பு அடுத்தவரிடம், “நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?” என்று கேட்டார். அதற்கு அவர், “நூறு மூட்டை கோதுமை” என்றார். அவர், “இதோ, உம் கடன் சீட்டு எண்பது என்று எழுதும்” என்றார். முட்டாளான அ ந்த வேலைக்காரன் புத்திசாலித்தனமாக செயல்பட்டதால், முதாலாளி அவனை மெச்சிக்கொண்டான்.

பொருள்
நீங்கள் இவ்வுலகில் வாழும்போது, உங்களுக்கு மறுமைக்குறிய‌ நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான இவ்உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள் என்பதாகும்

Post a Comment

0 Comments