Header Ads Widget

Responsive Advertisement

இஸ்ரேல் இஸ்லாமியரான‌ வாலித் அவர்களின் சாட்சி


Walid's Testimony

எனது பெயர் வாலித் (walid), நான் இஸ்ரேலில் உள்ள பெத்லகேம் எனும் நகரில் பிறந்தேன். நான் பிறந்த நாள் இஸ்லாமியர்களின் தீர்க்கதரிசியான முகமது (Al-Mauled Al-Nabawi) அவர்களின் பிறந்த‌ நாளாயிருந்தபடியால் அந்நாள் மிகவும் புனிதமான நாளாகும். இந்த நாளில் நான் பிறந்தபடியால் என் தந்தை அதிக‌ மகிழ்ச்சி அடைந்தார். அதன் காரணமாக எனக்கு அரபி மொழிப்படி வாலித் என பெயர் சூட்டினார். பிறப்பு என்ற பொருள்படும் அரபி வார்த்தை மௌலத் (Mauled – The Birth) என்ற வார்த்தைக்கு இணையாக இந்த பெயரை எனக்கு சூட்டினார். இஸ்லாமிய தீர்க்கதரிசியின் பிறந்த நாளை எப்போதும் நினைவு கூறுவதாக அப்பெயர் இருந்தது.
புனித நகரில் ஆங்கிலமும் இஸ்லாமிய கல்வியும் கற்பித்து வந்த எனது தந்தை ஒரு பாலஸ்தீனிய முஸ்லீமாவார். அமெரிக்கரான எனது தாயாரை 1956 ம் ஆண்டு உயர் கல்வி கற்க அமெரிக்கா சென்ற எனது தந்தை திருமணம் செய்துக்கொண்டார்.
அமெரிக்காவின் வாழ்க்கை முறை எங்கே த‌ன‌து இர‌ண்டு பிள்ளைக‌ளையும் பாதித்துவிடுமோ என‌ அஞ்சிய‌ என‌து த‌ந்தை க‌ருவுற்றிருந்த‌ என‌து தாயாரை அழைத்துக்கொண்டு 1960 ம் ஆண்டு இஸ்ரேல் திரும்பினார். அப்போது அப்ப‌குதி ஜோர்டான் என‌ அழைக்க‌ப்ப‌ட்ட‌து. என‌து பெற்றோர் பெத்ல‌கேம் வந்த‌ போது நான் பிற‌ந்தேன், என‌து த‌ந்தை வேறு வேலைக்கு சென்ற‌தால் குடும்ப‌மாக‌ நாங்க‌ள் ச‌வுதி அரேபியாவுக்குச் சென்றோம். சிறிது கால‌த்துக்குப்பின் புனித‌ பூமிக்கு திரும்பினோம், இம்முறை நாங்க‌ள் சென்ற‌டைந்த‌து பூமியின் தாழ்வான‌ ப‌குதியான‌ ஜெரிக்கோ வாகும்.
ஆறு நாள் யுத்தம் நடப்பதற்கு முன்பு ப‌ள்ளிக்கூட‌த்தில் முத‌ன் முத‌லில் நான் ப‌டித்த‌ பாட‌லை என்னால் ம‌ற‌க்க‌ முடியாது. அத‌ன் த‌லைப்பு "அரேபியர் எங்க‌ளுக்கு பிரிய‌மான‌வ‌ர்க‌ள், யூத‌ர்க‌ள் எங்கள் நாய்க‌ள்" என்ப‌தாகும். அப்போதெல்லாம் யூத‌ர்க‌ள் என்றால் யார் என்றெல்லாம் என‌க்கு தெரியாது, ம‌ற்ற‌ பிள்ளைக‌ளோடு சேர்ந்து அத‌ற்கு என்ன‌ அர்த்த‌ம் என‌ தெரியாம‌லேயே அப்பாட‌லை ப‌டித்து வ‌ந்தேன்.
புனித நகரில் வளர்க்கப்பட்ட நான் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் நடந்த பல யுத்தங்களை கண்டிருக்கிறேன், அதன் மத்தியில் வாழ்ந்தும் வந்திருக்கிறேன். நாங்கள் ஜெரிக்கோவில் வசித்து வந்த போது, முதல் யுத்தமாகிய‌ “ஆறு நாள் யுத்தம் - Six Day War” நடந்தது அந்த யுத்தத்தில் பழைய ஜெருசலேம் நகரையும், மீதமுள்ள பாலஸ்தீனத்தையும் யூதர்கள் கைப்பற்றினர். இந்நிகழ்வு உலகளாவிய அரபியர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியது.

ஜெருசலேமில் இருந்த அமெரிக்க கவுன்சில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பு தான் அப்பகுதியில் வசித்த அமெரிக்கரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் எடுத்தது. எனது தாயார் அமெரிக்கரானபடியால் எங்களுக்கும் உதவிசெய்ய அவர்கள் முயன்றனர் ஆனால் தேசப்பற்றாளரான எனது தந்தை தனது நாட்டை அதிகமாக நேசித்தபடியால் அந்த உதவியை நிராகரித்து விட்டார். அந்த யுத்தத்தில் நடந்த பல நிகழ்வுகளை எனது நினைவுக்குக் கொண்டுவர இப்போதும் முடிகிறது. இரவு பகலாக ஆறு நாட்கள் பொழிந்த குண்டு மழை, பல வீடுகளையும், கடைகளையும் அரேபியர் கொள்ளையிட்டது, இஸ்ரேலியரின் தாக்குதலுக்கு பயந்து ஜோர்டான் நதியை கடக்க ஓடும் மக்கள் என்று, பல நிகழ்வுகளை கூறலாம்.
ஆறு நாட்களில் வெற்றியடைந்த படியால் அந்த யுத்தம் “ஆறு நாள் யுத்தம் - Six Day War” என அழைக்கப்பட்டது, ஏழாவது நாளில் கோரென் (Goren) என்ற யூத ரபி ஆட்டின் கொம்பினால் செய்யப்பட்ட பூரிகையை ஜெருசலேமில் உள்ள “கண்ணீரின் சுவர் - Wailing Wall” என்ற சுவரிடம் நின்றுக்கொண்டு முழங்கி வெற்றிப் பெற்றதாக அறிவித்தார். ஜெரிக்கோ கோட்டையை யோசுவா (Joshua) என்ற தலைவரின் தலைமையின் கீழ் ஆறு முறை சுற்றி வந்ததையும் ஏழாவது நாள் ஏழுமுறை சுற்றி வந்ததையும், அவ்வாறு சுற்றியபின் ஆசாரியர்கள் பூரிகைகளை முழங்கி பெரிய ஆர்ப்பரிப்போடு ஜெரிக்கோ நகரை கைப்பற்றியதற்கு இணையானது இந்த வெற்றி என யூதர்கள் பெருமைப்பட்டனர். ஜெரிக்கோவில் வாழ்ந்த எனது தந்தைக்கு இது ஜெரிக்கோ சுவர் இடிந்து தன் மேல் விழுந்ததைப் போன்ற அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.
யுத்த காலத்தில் ஜோர்டான் வானொலி நிலையத்தின் செய்திகளையே எனது தந்தை கேட்டுக் கொண்டிருந்தார், அரேபியர்கள் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியையே கூறிக் கொண்டிருந்தார், ஆனால் அந்தோ பரிதாபம் அவர் தவறான வானொலி நிலையத்தின் செய்தியை கேட்டுக் கொண்டிருந்தார். இஸ்ரேலிய வானொலியோ அதற்கு மாறாக தாங்கள் யுத்தத்தில் அடையப்போகும் வெற்றியைப் பற்றி முழங்கிக் கொண்டிருந்தது. எனது தந்தையோ அரேபியர்களின் செய்தியையே நம்பினார், இஸ்ரேலியர் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர் என நம்பினார்.
பின்னர் நாங்கள் பெத்லகேம் நகருக்கு சென்றோம், அங்கு எனது தந்தை எங்களை ஒரு ஆங்கிலிக்கன்‍ லுத்தரன் பள்ளியில் (Anglican-Lutheran school) சேர்த்துவிட்டார். இப்பள்ளியில் ஆங்கிலத்திற்கு நல்ல பாடங்கள் இருக்கின்றன என்பதால் சேர்த்துவிட்டார். நானும் எனது சகோதரன் மற்றும் சகோதரி என மொத்தம் மூன்று பேர் தான் அப்பள்ளியில் இஸ்லாமியராக இருந்தோம். நாங்கள் பாதி அமெரிக்கராக இருந்ததால் அப்பள்ளியின் ஆசிரியர்கள் எங்களை அவ்வப்போது அடிப்பார்கள், மற்றவர்கள் எள்ளி நகையாடுவதற்கு இது காரணமாக இருந்தது. பைபிள் வகுப்புகள் ஆரம்பிக்கும் போது நான் வகுப்பை விட்டு வெளியே சென்று காத்திருப்பேன். ஒரு நாள் பைபிள் வகுப்புக்கு நான் சென்ற பொது எங்கள் வகுப்பில் இருந்த முரட்டு மாணவன் ஒருவன் என்னோடு சண்டைக்கு வந்தான். இந்த “அரைகுறை அமெரிக்க முஸ்லீம் இங்கு இருக்க வேண்டாம்!” என கத்தினான். இதைக்கண்டு நான் வெளியேற மறுத்தேன். பைபிள் வகுப்பு எடுத்த ஆசிரியை என்னை வகுப்பிலேயே அமருமாறு கூறினார். அப்பள்ளியிலே முதல் முறையாக இஸ்லாமியனான நான் பைபிள் படிக்கும் வகையில் விதிகளை மாற்றுவதற்கு நான் காரணமானேன். அதன் பிறகு சுமார் மூன்று ஆண்டுகள் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் நடுவே பைபிளைப் படித்தேன்.
அதன் பின்னர் எனது தந்தை என்னை ஒரு அரசாங்கப் பள்ளியில் சேர்த்து விட்டார், அங்கு இஸ்லாமிய நம்பிக்கையில் வேரூன்றி வளர்ந்தேன். என்றாவது ஒரு நாள் முகமது நபியவர்களின் தீர்க்கதரிசன நிறைவேறுதலின் படி புனித பூமி ஒரு மிக பயங்கரமான யுத்தத்தின் படி மீட்கப்படும் எனவும் யூதர்கள் மிகப்பெரிய அளவில் அழிக்கப்படுவார்கள் என நம்பினேன்.
இந்த தீர்க்கதரிசனமானது முகமதுவின் பாரம்பரிய நூலில் (ஹதீஸ்களில்) கூறப்பட்டுள்ளது, அதன்படி :
"நியாயத்தீர்ப்பின் நாளானது இஸ்லாமியர்கள் யூத இனத்தை வெற்றி கொள்ளாதவரை சம்பவிக்காது (The day of judgment shall not come to pass until a tribe of Muslims defeat a tribe of Jews.)" (Narrated by Abu Hurairah, Sahih Muslim, Hadith #6985; Sahih al-Bukhari, Vol. 4, #177)

எந்த இடத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என முகமதுவிடம் கேட்டபோது அவர் "ஜெருச‌லேமிலும் அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் இது நடைபெறும்” என கூறியுள்ளார்.
எனது இளம் பிராயத்தில் எனது தந்தையைப் போலவே நானும் இஸ்லாமிய வாழ்க்கையில் திருப்பப்பட்டு இஸ்லாமிய போதகர்கள் வாயிலாக பயிற்றுவிக்கப்பட்டேன். முகமதுவின் தீர்க்கதரிசனத்தை நம்பி எனது வாழ்க்கையை புனித போர் எனும் ஜிஹாத்துக்கு அர்ப்பணித்தேன், அதாவது ஜிஹாத் மூலமாக வெற்றியடைவது இல்லையேல் உயிர்த்தியாக‌ம் செய்து மரிப்பது. புனிதப்போரின் வாயிலாக உயிர்த்தியாக‌ம் செய்வதன் வாயிலாக மட்டுமே மீட்பை அடைந்து பரலோகம் செல்லமுடியும். ஏனென்றால் அல்லா அவரது தீர்க்கதரிசியான முகமது வாயிலாக குர்‍ஆன் மூலமாக இவ்வாறு அருளியிருக்கிறார்:

"அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்." (குர்‍ஆன் 3:169)

பள்ளிப் பிராயத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கெதிராக கலகங்களில் ஈடுபடும் போது பெரிய உரைகள், இஸ்ரேலிய எதிர்ப்பு கோஷங்கள் போன்றவற்றை தயாரித்தேன். இதன்மூலமாக கிளர்ச்சி அடையச் செய்யவும் இஸ்ரேலிய படை வீரர்களை கற்களால் தாக்கவும் ஏவப்பட்டனர். "எதிரிகளோடு சமாதான உடன்படிக்கை வேண்டாம், எங்கள் ஆன்மாவும், இரத்தமும் விடுதலைக்கே அர்ப்பணிக்கிறோம், அராபத்திற்கே பாலஸ்தீனாவிற்கே அர்ப்பணிக்கிறோம், சியோன்காரர்கள் (இஸ்ரேலியர்கள்) நாசமாய் போகட்டும்" என முழங்கினோம். யூதர்களுக்கு எதிராக போராடுவது இறைவனுக்கு செய்யும் தொண்டு எனவும் இறைவனின் திட்டத்தை இவ்வுலகில் நிறைவேற்றுகிறேன் எனவும் அதிகமாக நம்பினேன். ஏதாவது ஒரு வகையில் இஸ்ரேலிய படையினருக்கு சேதம் வரும்வகையில் திட்டங்களை யோசித்து செயல்படுத்தினேன்.
பள்ளிகளிலும் தெருக்களிலும் மற்றும் அரேபியர்கள் அல்-அக்சர்-மசூதி (Al-Masjid Al-Aqsa) என்றுச் சொல்லக்கூடிய‌ ஜெருச‌லேமின் மிகப்புனித இடத்திலும் கூட கலகங்களை தூண்டினேன். எனது பள்ளிப்பிராயத்திலே எந்த ஒரு கலகத்தையும் தூண்டிவிடுவதில் முன்னால் நின்றேன். பலர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் யூதர்களை தாக்கி இஸ்ரேலை விட்டு யூதர்களை துரத்திவிடலாம் என முனைப்போடு செயல்பட்டனர் ஆனால் அவர்களை இஸ்ரேலில் இருந்து வேரறுப்பதற்கு இயலாத காரியமாகவே இருந்தது.
எதுவும் என்னை மாற்ற முடியவில்லை, ஒன்று நான் சாக வேண்டும் இல்லையானால் ஏதாவது ஒரு அற்புதம் நடைபெறவேண்டும். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் இண்டிஃபடா (Intifada) அல்லது எழுச்சி எனும் போராட்டம் நடக்கும் போது கற்களை கொண்டு தாக்குபவனாகவும், கிள‌ர்ச்சி செய்பவனாகவும் காணப்பட்டேன், உங்களில் பல‌ர் சி என் என் (CNN) போன்ற தொலைக்காட்சியில் என்னைப் போன்றவர்களை பார்த்திருக்கக்கூடும். யூதர்களைப் பொறுத்தவரை நான் ஒரு மோசமான தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டேன். எனது தீவிரவாதத்தின் மூலமாக மற்றவர்களை அச்சுறுத்திய நான் எனது தீவிர மத நம்பிக்கைகளின் மூலமாக நானே அச்சுறுத்தப்பட்டேன் என்பது தான் வியக்கத்தக்க உண்மை.
எனது அதி தீவிர செயல்பாடுகள் என்னை பரலோகம் கொண்டுசெல்ல அதிக வாய்ப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. ஆனால் இறைவனின் தராசில் எனது நற்செய்கைகள் எனது தீய செய்கைகளை விட அதிகமாக இருந்து எனக்கு பரலோகத்தின் வாசல்களை திறந்துவிடுமா என்பதை என்னால் உறுதியாக கூறமுடியவில்லை. யூதர்களை அழிக்கும் பணியில் உயிர்த்தியாகம் செய்தால் எனது இச்சைகளை பூர்த்தி செய்ய அழகான கண்களையுடைய மகளிர் எனக்கு பரலோகத்தில் கிடைப்பர் என்று உறுதியாக நம்பினேன். எனது தீய செயல்களினால் கோபமடைந்துள்ள அல்லாவை சாந்தப்படுத்த இது உதவும் என எண்ணினேன். எப்படியோ உறுதியாக நான் வெல்லப்போகிறேன் அதற்கு நான் தேர்ந்தெடுத்தது தீவிரவாதமாகும்.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது ஒருமுறை பெத்லகேமில் உள்ள ஒரு திரையரங்கில் “முனீச் நகரில் 21 நாட்கள் – 21 Days in Munich” என்ற படத்தை அதிக குதூகலத்தோடு ரசித்து பார்த்தோம். அப்படத்தில் முனீச் ஒலிம்பிக் போட்டிகளின் போது பாலஸ்தீனியர் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் ஏறியிருந்த ஹெலிக்காப்டர் மீது வெடிகுண்டுகள் வீசி அவர்களை கொலை செய்தனர். அதைக் கண்டு "அல்லாஹு அக்பர்", அதாவது அல்லா மிகப்பெரியவன் என பொருள்படும்படியாக நாங்கள் முழங்கினோம். வெற்றி பெறும்போது முஸ்லீம்கள் இவ்வாறு சந்தோஷப்படுவர்.
இஸ்லாமிய வகுப்புகள் நடைபெறும்போது மாணவர்கள் ஆசிரியரைப்பார்த்து "யூதர்களை வெற்றி கொண்ட பின் அவர்களது பெண்களிடம் முறைகேடாக நடந்து அவர்களைக் கற்பழிக்க‌ எங்களுக்கு உரிமை உள்ளதா?” என்று கேட்பர். அதற்கு ஆசிரியர் “அவர்களுக்கு வேறு வழியில்லை தங்கள் எஜமான்களுக்கு ஆசை நாயகிகளாகவும் (வைப்பாட்டிகளாகவும்) அவர்களது பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்பவர்களாகவும் தான் அவர்கள் இருக்க முடியும், இது குர்‍ஆனில் விளக்கப்பட்டுள்ளது” என கூறுவார்கள்.

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும்……(குர்‍ஆன் 4:24)

இன்னுமொரு வசனத்தில் குர்‍ஆன் இவ்விதமாகச் சொல்கிறது:
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன். (குர்‍ஆன் 33:50)

இந்த வகையில் முகமது பல பெண்களை அதாவது 14 பெண்களை மணம் புரிந்ததும் பல அடிமைப்பெண்களை போரின் வாயிலாக பிடித்துக்கொண்டு தான் வைத்துக்கொண்டதும் எங்களுக்கு பெரிதாகவோ விகற்பமாகவோ தெரியவில்லை. முகமதுவுக்கு எத்தனை மனைவியர் இருந்தனர் என்பது எங்களுக்கு விவாதத்துக்குரிய பொருளாயிருந்தது, எத்தனை மனைவிகள் அவருக்கு இருந்தார்கள் என்று எங்களுக்கு சரியாகத் தெரியாது. தனது வளர்ப்பு மகனின் (Zaid) மனைவியையே அவர் தனக்காக அல்லா சொன்னபடி எடுத்துக்கொண்டார், அதுபோக பல யூதப்பெண்களை அவர்களின் குடும்ப ஆண்களை படுகொலை செய்தபின் அடிமைகளாகவும் வைத்துக்கொண்டார்.
பாலஸ்தீனர்களின் (எங்களின்) மனதை மாற்ற இஸ்ரேலிய தொலைக்காட்சி இரண்டாம் உலகப்போரின் போது நடந்த யூத படுகொலைகளை விளக்கும் காட்சிகளை ஒளிபரப்பு செய்தது, ஆனால் உணவை கொறித்துக்கொண்டே யூதர்களை படுகொலை செய்யும் ஜெர்மானியரை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். யூதர்களை பொறுத்தவரை எனது இதயம் மாறாததாகவும் கடினமாகவுமே இருந்தது, ஏதாவது ஒரு இதய மாற்று சிகிச்சை நடந்தால் தான் மாற முடியும் என்ற நிலை.
ஒரு முறை எஷ்தோத் (Eshdod) கடற்கரையில் உள்ள யூத முகாமுக்கு எங்களை அழைத்து சென்றனர், யூத பள்ளி மாணவர்களோடு நாங்கள் கலந்தால் ஒருவேளை எங்கள் மனம் இளகும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இப்படிச் செய்தனர். ஆனால் அத்திட்டம் வெற்றி பெறவில்லை, யூதர்களோடு பேசிய ஆசிரியர்கள் பரியாசம் செய்யப்பட்டனர்.
எனது தாயாரோ வேறு ஒரு கோணத்தில் “தேவ திட்டம்” என்று ஒரு காரியத்தை விளக்கினார்கள். அதாவது பைபிள் தீர்க்கதரிசிகளின் படி யூதர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புதல் என்பது தேவனால் முன்குறிக்கப்பட்டது அது தான் நிறைவேறியுள்ளது எனவும் கூறினார். "அவரது சித்தத்தின் படி எல்லாம் ஆகும்" என்பது உலகம் பார்க்கும்படியாக நமது சந்ததியில் நடைபெறும் ஒரு நிகழ்வு என விளக்கினார்கள். தற்போது நமது சந்ததியில் நடைபெறும் நிகழ்வுகள் வருங்கால சம்பவங்களுக்கு முன்னோடியாகத்தான் உள்ளன என கூறினார், பல கள்ளத்தீர்க்கதரிசிகள் பற்றியும் கூறினார்,ஆனால் தீவிர யூத எதிர்ப்பாளனான எனக்கு இந்த கருத்துக்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு அமெரிக்க மிஷனரி தம்பதிகளால் ஈர்க்கப்பட்ட எனது தாயார் ரகசியமாக ஞானஸ் நானம் எடுக்க விருப்பினார்கள், பாசி படிந்து இருந்த குளத்தில் ஞானஸ்நானம் எடுக்க எனது தாயார் விரும்பாததால் அந்த மிஷனரி ஜெருசலேம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) பிரதிநிதிகளிடம் குளம் சுத்தம் செய்யப்பட‌ மன்றாட வேண்டியிருந்தது. அதன் பின்னர் எனது தாயார் ஞானஸ் நானம் எடுத்தார்கள், எங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் இத்தகவல் தெரியாது.

பல முறை எனது தாயார் என்னை இஸ்ரேலில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு அழைத்து சென்றார்கள். நான் அகழ்வாராய்ச்சியின் பால் ஈர்க்கப்பட்டது அப்போது தான். எனது தாயாரோடு வாதம் செய்யும் போது பலமுறை யூதர்களும் கிறிஸ்தவர்களும் வேதாகமத்தை திரித்து பாழ்படுத்திவிட்டனர் என கூறுவேன். ஜெருசலேமில் உள்ள வேதாகம சுருள்கள் இருக்கும் இடத்துக்கு (Museum) அழைத்துச்சென்று அங்குள்ள ஏசாயா தீர்க்கதரிசியின் சுருளை எடுத்து அது எவ்வாறு மாறாமல் இருக்கிறது என விளங்கி காட்டினார்கள். வேதாகமம் திரிக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என கூறினார்கள். இதற்கு என்னால் பதில் கூற முடியவில்லை.
எனது தாயாரை காபிர் (Infidel) என்று இழித்துரைத்ததையும் ஆதிக்க வெறிபிடித்த அமெரிக்கர் எனவும் இயேசுவை இறை மகன் என கூறுகிறார்கள் எனவும் கேவலமாக பேசியிருக்கிறேன். தாக்குதல்களில் உயிரிழக்கும் எண்ணற்ற வாலிபரின் புகைப்படங்களை செய்தித் தாள்களிலிருந்து எடுத்துக்காட்டி, இதற்கு என்ன பதில் என அறை கூவல் விடுத்துள்ளேன். இதற்கும் மேலாக எனது தாயாரை நான் மிகவும் வெறுத்து எனது தந்தையிடம் அவரை விவாகரத்து செய்துவிடுமாறும் வேறு ஒரு நல்ல இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறும் பரிந்துரை செய்திருக்கிறேன்.
பலமுறை போராட்டங்களில் பங்கு கொள்ளும்போது இஸ்ரேலிய படைகளால் தாக்கப்பட்டு கொல்லப்படும் அபாயத்துக்கு உட்பட்டிருக்கிறேன், அந்நேரங்களில் மறுநாள் செய்தித்தாள்களில் நான் உயிர்த்தியாகம் செய்த செய்தி வரும் என்று நான் நினைப்பதுண்டு. ஆறு நாள் யுத்தம், பி.எல்.ஓ கிளர்ச்சி, ஜோர்டானிய கறுப்பு செப்டம்பர் உள் நாட்டு போர், லெபனான் போர்கள், யோம் கிப்புர் யுத்தம் என பல யுத்தங்கள் நடைபெற்ற போது இஸ்ரேலில் இருந்திருக்கிறேன், இவ்வளவு யுத்தங்கள் நடந்தும் இஸ்ரேலை அழிக்க முடியவில்லை ஆனால் அவர்களை ஒரே ஒரு பெரிய யுத்தத்தின் மூலம் அழித்து நிர்மூலமாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.
இஸ்ரேலிய துருப்புக்களால் நான் சிறையில் அடைக்கப்பட்ட போது எனது பெற்றோர் அதிக துக்கமடைந்தனர். எனது தாயார் ஜெருசலேமிலிருந்த அமெரிக்க கவுன்சில் மூலமாக என்னை வெளிக்கொணர முயன்றார்கள். அதிக மன அழுத்தத்தால் அவர்களுக்கு தலை முடி கொட்டத்துவங்கியது. சிறையில் தீவிரவாதம் குறித்து அதிகம் தெரிந்து கொண்டேன், வெளியே வந்த போது முன்பைவிட அதிக வெறிபிடித்த அடிப்படைவாதியாக மாறினேன்.
உயர் நிலைப்பள்ளி படிப்பை முடித்த பின் எனது பெற்றோர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா அனுப்பினர். அங்கும் இஸ்ரேலிய எதிர்ப்புக் குழுக்களின் அரசியல் நடவடிக்கைகளில் என்னை இணைத்துக் கொண்டேன். எனது நண்பர்களிடம் நான் விளையாட்டாக இவ்வாறு கூறுவது உண்டு "ஹிட்லரை நான் வெறுக்கிறேன் ஏனென்றால் அவர் வேலையை முழுமையாகச் செய்யவில்லை, இந்த யூத அழிப்பை முழுவதுமாக செய்து முடிக்கவில்லை" என்பேன்.

ஹிட்லரை கதா நாயகனாகவும் முகமதுவை தீர்க்கதரிசியாகவும் மனதில் வரித்துக்கொண்ட நான் முஸ்லீம் அல்லாதோர் அதுவும் குறிப்பாக கிறிஸ்தவர், யூதரை ஒரு பொருட்டாகவே எண்ணியதில்லை. என்றாவது ஒரு நாள் இஸ்லாமுக்கு இந்த உலகம் முழுவதுமாக அடிபணியும், பல போர்களில் இஸ்ரேலுக்கு எதிராக போரிட்டு பெரிய இழப்புகளை சந்தித்த பாலஸ்தீனுக்கு இந்த உலகம் பெரிய அளவில் கடன்பட்டுள்ளது எனவும் நம்பினேன். யூதர்கள் அனைவரும் தீர்க்கதரிசிகளை கொல்பவர்கள் எனவும் தங்களது கெட்ட எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக வேதாகமத்தை கறைபடுத்தி கெடுத்துவிட்டனர் என்று நம்பினேன், இது தான் முஸ்லீம்கள் போதிக்கும் போதனை.
எல்லாவற்றுக்கும் மேலாக முகமது தான் உண்மையான தீர்க்கதரிசி எனவும் அவர் இறைவனுக்கு மிகவும் விருப்பமானவர் என்று போதித்தார்கள்.
நான் அமெரிக்காவில் வசித்த போதும் கடந்த 20 ஆண்டுகளாக ஈரான், ஈராக், குவைத், சிரியா, ஜோர்டான், லெபனான், ஆப்கானிஸ்தான் மற்றும் பல முஸ்லீம் நாடுகளில் கொல்லப்பட்ட பல முஸ்லீம்களை நினைத்துப் பார்க்க தவறுவதில்லை. இது அனைத்துக்கும் யூதர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனவும் ஏதாவது திரித்து கடைசியில் யூதர்களை குற்றவாளிகளாக நிறுத்துவது எங்கள் கடமையாக இருந்தது.
ஒரு நாள் ஒரு மனிதனோடு சண்டை யிட்டதில் அவர் கண் பறி போனது அவர் யூதராயிருந்த படியால் அதிக மகிழ்ச்சியடைந்தேன். இஸ்லாமிய வரலாற்றை அறிந்து கொள்வது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. முகமது ஒருமுறை ஒரு யூத கோத்திரத்தை சவுதி அரேபியாவில் இருந்து பிரித்து எடுத்து சிறைப்படுத்தி அவர்களது ஆண்கள் அனைவரையும் படுகொலை செய்தார் எனவும் பெண்களை ஆசை நாயகிகளாக வைத்துக்கொண்டார் என்பதை அறிந்தேன். இஸ்லாமின் போதனைப்படி இந்த உலகம் இஸ்லாமியரான ஒரு கலீஃப் பால் தான் ஆட்சி செய்யப்படவேண்டும் எனவும் இஸ்லாம் என்பது தனி நபரின் நம்பிக்கை மட்டுமல்ல இந்த உலகை சரியான முறையில் ஆட்சிசெய்யும் ஒரு சமூக ஒழுங்குமுறை எனவும் சமாதான முறையில் இவ்வாட்சிமுறையை அமல்படுத்த முடியாவிட்டால் போர் செய்தாவது அனைவரையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் என்பதே எனது ஆவலாக இருந்தது. சுமார் ஒரு பில்லியன் இஸ்லாமியர் இந்த உலகத்தில் இருந்ததால் எப்படியாவது இதை அடைந்து விடலாம் என்பது எனது திடமான நம்பிக்கை.
நான் உண்மையைச் சொல்கிறேன், ஒவ்வொரு முறையும் குர்‍ஆனை வாசிக்கும் போதும் பாவங்களுக்காக நரகத்தில் அனுபவிக்கவிருக்கும் தண்டனைகளை எண்ணி நடுங்குவேன். என்னை படைத்தவரை எப்படியாவது அடைந்து எனது தவறுகளுக்காக என்னை மன்னித்து விடுங்கள் என கெஞ்ச வேண்டும் என்பது எனது ஆவலாக இருந்தது. ஆனால், நான் இதில் தோல்வி அடைந்தேன், என்னால் என் எல்லா தீய மற்றும் நல்ல செயல்களை நியாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்குத் தெரியும், அதாவது என் பாவங்கள் என் நல்ல செயல்களை விட அதிகமாக இருக்கும். எனவே, என் பாவப்பட்ட வாழ்க்கையை என்னை படைத்தவனின் தயவின் மிதும், அன்பின் மீதும் ஆதாரப்பட்டு வாழ்ந்துவந்தேன். என் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் வியப்படைவேன். என் மோட்சத்திற்காக மற்றவர்களை கொல்வதை வெறுத்தேன். உண்மையைச் சொன்னால், ஒரு எலியைக் கூட கொல்ல எனக்கு மனது வராது, அப்படியானால், ஒரு யூதனைக் கொள்ள என்னால் எப்படி முடியும்?
1992 ம் ஆண்டு கிரான்ட் ஜெப்ரி (Grant R. Jeffrey) எழுதிய‌ "Armageddon, Appointment with Destiny" என்ற‌ புத்த‌க‌த்தை வாசித்து வியந்தேன். அந்த‌ புத்த‌க‌த்தில் இயேசுவை குறித்தும் அவ‌ர‌து பிற‌ப்பு, வாழ்வு, ம‌ர‌ண‌ம், உயிர்த்தெழுத‌ல், இஸ்ரேல் தேசம் நிறுவப்படுதல் போன்ற‌ காரிய‌ங்க‌ளை குறித்து அழ‌காக‌ விள‌க்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ப‌ல‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ள் பைபிளில் தேவ‌ன் கூறியிருந்த‌ப‌டி நிறைவேறியிருந்த‌ன‌!
என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌டுத்திய‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால் கோடா கோடியில் ஒருவ‌ரால் தான் வ‌ர‌லாற்றில் 100 அல்லது 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு எதிர்கால‌த்தில் ந‌டைபெற‌ப் போகும் காரிய‌ங்க‌ளை குறித்து தெளிவாக‌ கூற‌முடியும் (What also amazed me was to find out that the chances for a man to predict hundreds of historic events written hundreds and thousands of years before their occurrences are one in zillions ). மேலும் அதில் த‌வ‌றுக‌ளுக்கான‌ சாத்திய‌க்கூறுக‌ள் அனேக‌மாக‌ இல்லை ஏனெனில் தீர்க்க‌த‌ரிச‌ன‌மாக‌ உரைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ல காரிய‌ங்க‌ள் என‌து கால‌த்திலேயே நிறைவேறியிருந்த‌ன‌. இது போன்ற‌ உண்மையான‌ காரிய‌ங்க‌ள் தேவ‌னிட‌த்தில் இருந்து மாத்திர‌ம் தான் வ‌ர‌ முடியும்.
என‌க்குள் ஒரு போராட்ட‌ம் ஆர‌ம்பித்த‌து, நான் வ‌ள‌ர்ந்து வ‌ந்த‌ நாட்டில் ப‌ல அக‌ழ்வாராய்ச்சிக‌ள் வாயிலாக‌ பைபிளை ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் கிடைத்து வ‌ரும் நிலையில் அது எப்ப‌டி யூத‌ர்க‌ளால் க‌றைப்ப‌டுத்தப்பட்டிருக்க‌ முடியும் என‌ குழ‌ம்பினேன். கும்ரான் என்ற‌ குகையில் முக‌ம‌து தேய்ப் என்ற‌ ஆடு மேய்ப்ப‌வ‌ரால் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ ஏசாயா தீர்க்க‌த‌ரிசியின் புத்த‌க‌ சுருள் நாம் இன்றைக்கு வைத்திருக்கும் வேத‌ம் போல‌ அப்ப‌டியே அல்ல‌வா இருக்கிற‌து, அதில் இயேசுவின் வ‌ருகையை குறித்து ப‌ல‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ வ‌ச‌ன‌ங்க‌ள் பழைய ஏற்பாட்டிற்கு ஒத்திருக்கின்ற‌ன‌வே என‌ விய‌ந்தேன். இயேசு யார் என்ப‌தை இந்த‌ பைபிளை நானே ப‌டித்து தெரிந்துகொள்ள‌ விரும்பினேன். தேவ‌னாகிய‌ கிறிஸ்து இவ்வாறு விள‌ம்பினார்.

"இருக்கிறவரும் இருந்தவரும் இனி வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர், நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார்" வெளி 1:8

யூதர்களை பார்த்து இவ்வாறு கூறுகிறார்:

அதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுறேன் என்றார். யோவான் 8:58.

இந்த மேற்கோள்கள் எனக்கு பிரமிப்பை உண்டாக்கியது ஏனென்றால் முகமதுவும் இதை போல "நான் எல்லா படைப்பிற்கும் முந்தினவன் மற்றும் கடைசி நபியாக இருக்கிறேன் (I am the beginning of all creation and the last prophet)." என்று கூறியிருந்தார்.
மேலும் "ஆதாம் கலிமண்ணால் உருவாக்கப்படும் போதே நான் அல்லாவின் நபியாக இருந்தேன் (I was a prophet of Allah while Adam was still being molded in clay)." என‌ கூறுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக நியாயத்தீர்ப்பின் நாளில் இஸ்லாமியர்களுக்காக பரிந்து பேசுபவராகவும் முகமது தன்னைப் பற்றி கூறிக் கொள்ளுகிறார். தானே கடைசி தீர்க்கதரிசி மற்றும் இரட்சகர் என்று கூறுகிறார்.
இந்த காரியங்கள் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தின ஏனென்றால் முகமது தன்னை இரட்சகர் என பிரகடப்படுத்தினால் பின்னர் இயேசு என்பவர் யார், அவரும் தன்னை இரட்சகர் என்று அல்லவா கூறுகிறார் என எண்ணினேன். இரண்டு மீட்பர்கள் இருந்தால் ஏதோ ஒன்று நிச்சயம் பொய்யாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். இது தேவனோடு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஏனென்றால் தேவன் தான் மீட்பராக இருக்கமுடியும். கிறிஸ்துவோ அல்லது முகமதுவோ ஆக இரண்டுபேரில் ஒருவர் தான் மீட்பராகவோ அல்லது பரிந்துபேசுபவராகவோ இருக்க முடியும். பைபிள் அல்லது குர்‍ஆன் இவ்விரண்டில் ஏதோ ஒன்று தான் உண்மையாக இருக்கமுடியும், இரண்டில் ஒன்று சுத்த தங்கம் மற்றொன்று போலி ஆனால் எது?
உண்மையை க‌ண்டுகொள்ள‌ ஆவ‌லாயிருந்த‌ப‌டியால் ப‌ல‌ இர‌வுக‌ள் குர்‍ஆன் ம‌ற்றும் பைபிள் கூறும் காரிய‌ங்க‌ளை ஒப்பிட்டுப்பார்த்தேன். அப்போது இறைவ‌னிட‌ம் இவ்வாறு பிரார்த்தித்தேன் "இறைவா இந்த‌ பூமி வான‌ம் அனைத்தையும் ப‌டைத்தாய், ஆபிர‌காம், மோசே ம‌ற்றும் யாக்கோபின் தேவ‌னே நீர் தொட‌க்க‌மும் முடிவும் இல்லாத‌வ‌ர், நீர் ஒருவரே உண்மையுள்ளவர், நீர் ஒருவரே சத்தியமுள்ளவர் , நீரே ஒரே ஒரு மெய்யான‌ வேத‌த்தை உருவாக்கினீர். உம‌து ச‌த்திய‌த்தை அறிந்துகொள்ள‌ ஆவ‌லாய் இருக்கிறேன், என‌து வாழ்வில் உம‌து நோக்க‌த்தை நிறைவேற்ற‌ ஆவ‌லாய் இருக்கிறேன், உம‌து அன்பைப் பெற‌ வாஞ்சிக்கிறேன், ச‌த்திய‌த்தின் பெய‌ராலே ஆமேன்" என‌ பிரார்த்தனை செய்தேன்.
என‌க்கு போலியான‌தை வைத்துக்கொள்ள‌ விருப்ப‌மில்லை அத‌னால் பிளாஸ்டிக் போன்ற‌ உல‌க‌ ம‌த‌ங்க‌ளை எவ்வ‌ள‌வு உண்மை என‌க்க‌ண்டு கொள்ள‌ எவ்வ‌ள‌வு முடியுமோ அவ்வ‌ள‌வு அதிக‌மாக‌ உர‌சிப்பார்க்க‌ நினைத்தேன்.
குர்‍ஆன் தான் உண்மையான வேதம் என நம்பினேன் ஏனெனில் குர்‍ஆனில் பல விஞ்ஞான தத்துவங்கள் நிறைந்திருக்கின்றன எனவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னரே தேவனால் அருளப்பட்டது என நினைத்தேன். ஒரு மென்பொருளின் வாயிலாக சுமார் ஒரு மாதம் பைபிளில் உள்ள விஞ்ஞான தத்துவங்களை அறிந்து கொள்ள விழைந்தேன். பல இஸ்லாமியரால் குர்‍ஆனில் விஞ்ஞான அதிசயம் என நம்பப்பட்ட அனைத்தும் ஏற்கனவே பைபிளில் இருக்கிறது என கண்டு கொண்டேன். எனது அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று அறிவின் துணையால் குர்‍ஆனில் எவ்வளவு தவறுகள் நிறைந்திருக்கின்றன என கண்டுகொண்டேன். பல உண்மைகளை அறிந்துகொண்ட நான் குர்‍ஆன் ஒரு அற்புதம் என்ற எனது எண்ணம் கேள்விக்குறியானது. பைபிளில் உள்ள அற்புதங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. எசேக்கியல் தீர்க்கனின் 38 ம் அதிகாரத்தை வாசித்த போது எனது அஸ்திபாரமே ஆட்டம் கண்டது. அந்த அதிகாரத்தில் தேவன் அழிக்கப்போவதாக சொன்ன அனைத்து நாடுகளும் இன்றைக்கு இஸ்லாமிய அடிப்படைவாத்தை அஸ்திபாரமாகக் கொண்டு வளர்ந்து வருபவை என அறிந்தேன்.
ஒரு எழுத்து கூட மாறாமல் எவ்வாறு பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவந்துள்ளன என்பதை தேவன் எனக்கு விளக்கி காண்பித்தார். எந்த ஒரு மனிதனாலும் தவறே இல்லாமல் இதைப்போல எதிர்கால நிகழ்வுகளை அறுதியிட்டு கூற முடியாது. தேவனால் மாத்திரம் தான் எதிர்கால் நிகழ்வுகளின் கதவுகளை திறக்க முடியும், பைபிள் தான் அதற்கு திறவுகோல் குர்‍ஆன் அல்ல ஏன் என்றால் மீட்பு, இரட்சிப்பு குறித்து எந்த வகையிலும் குர்‍ஆன் விளக்குவது இல்லை. அப்போது தான் இவ்வளவு காலமாக முட்டாள்த்தனமாக வேறு ஒரு கடவுளை வணங்கி வந்திருக்கிறேன் என அறிந்து கொண்டேன். இறைவன் எப்படியாவது என்னை குர்‍ஆனின் மூலமாக வழி நடத்தி செல்வார் என நினைத்திருந்தேன் ஆனால் அது வேறு விதமாக முடிந்தது. எனது பெருமைகளை விட்டுவிட்டு திறந்த மனதோடு சத்தியத்தை அறிந்து கொள்ள ஆவலானேன்.
இறைவன் பைபிளில் இவ்வாறு கூறுகிறார்:
"முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற் கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற் கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளைல்லாம் செய்வேன் என்று சொல்லி," (ஏசாயா 46:9,10)

தேவன் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்தது மட்டுமல்ல அதை நிறைவேற்றியும் வந்திருக்கிறார் மாறாக குர்‍ஆனில் வன்முறை வாயிலாகத்தான் இஸ்லாமியர்களின் நம்பிக்கைகள் நிலை நிறுத்தப்படுகின்றன. பைபிள் கறைப்படுத்தப்படவில்லை என நான் கண்டுகொண்டபடியால் பல நாட்கள் பைபிளை ஆராய்ந்தேன். பைபிளில் முகமதுவைப் பற்றி ஏதாவது கூறப்பட்டுள்ளதா என தேடியும் அவரை பைபிளில் கண்டுபிடிக்க முடியவில்லை. பைபிள் கறைப்படுத்தப்பட்டிருந்தால் அது நிச்சயம் முகமதுவின் வருகைக்குப்பின் தான் நிகழ்ந்து இருக்கவேண்டும் ஏனென்றால் குர்‍ஆன் பைபிளை பற்றி கூறும்போது அது அவரது கரங்களுக்கு இடப்பட்டிருந்தது என்று கூறுகிறதே. அன்று முதல் இன்று வரை ஒரு இஸ்லாமியராலும் கறைப்படுத்தப்பட்ட ஒரு பைபிளையும் உதாரணமாக காட்டமுடியவில்லை. பைபிளை தவறு என நிரூபிக்க ஒரு வரலாற்று உண்மையோ அல்லது அகழ்வாராய்ச்சி உண்மையையோ இஸ்லாமியர்களால் கொண்டுவரமுடியவில்லை.
அவ்வளவு ஏன் முகமதுவின் மரணம் கூட இயேசுவின் மரணத்தை விட வித்தியாசமாக இருந்தது. முகமது தனது பிரியமான மனைவியான ஆயிஷாவின் மடியில் உயிர் நீத்தார் ஆனால் இயேசுவோ மனுக்குலத்தின் பாவத்தை பரிகரிக்க சிலுவையில் உயிர் துறந்தார். இதை போன்ற சவாலிடும் சாட்சியை கேள்விப்படாமல் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் இருக்கிறார்களே என நினைத்த போது எனக்கு மிகுந்த கவலை உண்டானது. இஸ்லாமியரும் உலகமும் மூன்று மதங்களை இறைவனை வணங்கும் வழிகளாக கண்டிருக்கின்றனர் ஆனால் இறைவன் "தான் ஒருவரே, தனது வார்த்தை ஒன்றே" என்றல்லவா கூறியிருக்கிறார் என யோசித்த போது பிரமிப்பாக இருந்தது. நான் முன்பு குருடனாயிருந்தேன் ஆனால் இப்போது பார்வையடைந்தேன், உண்மையில் நான் காண்கிறேன். ஏனெனில் பல பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்கின்றன, இஸ்ரேல் என்ற நாடு கிட்டத்தட்ட அதன் கல்லறையில் இருந்து வேதாகம தீர்க்கதரிசனங்களின் படி உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது, இஸ்லாமியர் மற்றும் ஏனைய உலகத்தார் யூதர்களை நோக்கும் பார்வை இந்த உலகம் இறுதி காலத்துக்குள் வந்து விட்டதையே காட்டுகிறது.
மனிதன் மாறவேயில்லை, காயீன் தன் சகோதரனான ஆபேலை கொலை செய்தது போல் மனிதன் தன் சகோதரனை கொலை செய்கிறான், ஒரே ஒரு வித்தியாசம், பழைய முறைப்படி தலையை வெட்டியோ அல்லது கத்தியால் குத்தியோ கொலை செய்வதில்லை, மாறாக கிருமிகளை அழிப்பது போல இரசாயன ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கி அழிக்கிறான், மனித வாழ்வு அற்பமான ஒன்றாக மாறிவிட்டது. பாவம் தான் மனிதனின் பிரச்சனை, பிசாசு தான் மனுக்குலத்தின் எதிரியேயன்றி 50 ஆண்டுகளுக்கு முன் ஹிட்ல‌ரால் அழிக்க‌ப்ப‌ட்ட‌ 6 மில்லியன் யூதர்கள் அல்ல. இந்த நிகழ்ச்சி நடக்கவில்லை என்று கணக்கிலடங்கா எண்ணிக்கையில் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஒருவேளை ஹிட்லரைப் போல அல்லது ஒரு மெஹ்தி அல்லது கலீப்பை போல யாராவது தற்காலத்தில் பதவியில் அமர்ந்தால் என்ன வாகும் என யோசித்தேன். இப்போது உள்ள அணு ஆயுதங்கள் முன்பைவிட 7 மடங்கு உலகத்தை அழிக்கும் தன்மையோடு அல்லவா இருக்கிறது என நினைத்தேன். தேவன் நான் வாழும் உலகை புரிந்துக்கொள்ளும்படிச் செய்தார், மற்றும் என்னிடம் நானே கேட்டுக்கொண்டேன், "யூதர்கள் இவ்விதமாக ஹிட்லரால் கொல்லப்பட்டதற்கு அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும், அதனை மக்கள் நம்ப மறுக்கிறார்கள், இதே போல், இயேசு தான் மேசியா (மஸிஹா) என்றும், பைபிளின் நம்பகத்தன்மைக்கு அதிகபடியான ஆதாரங்கள் இருந்தும் உலக மக்கள் நம்ப மறுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை".
தேவன் எனது இதயத்தை திறந்தார், எவ்வாறு மக்கள் தவறான வழிபாட்டு முறைகளால் உண்மையான முறையை நிராகரிக்கிரார்கள் அதுவும் தனது வார்த்தையின் மூலமாக இவ்வளவு ஆதாரங்களை காண்பித்த பிறகும் மக்கள் நிராகரிக்கிறார்கள். எனது சிந்தனைகளை எவ்வாறு பிசாசு ஆக்கிரமித்திருந்தான் எனபதை கண்பித்தார், இஸ்லாமியனாக இருந்தபோது இப்படிப்பட்ட சிந்தனைகள் எல்லாம் இறைவனின் மூலமாக வருகிறது என்று நான் நினைத்திருந்தேன். உலகம், வாழ்க்கை பற்றிய‌ ஒரு புதிய கண்ணோட்டத்தையும், இரட்சிப்பின் அவசியத்தையும் அறிந்துகொள்ளும்படி ஏவப்பட்டேன். இந்த உலகத்தில் ஒரே உலக அரசாட்சியையும் அதற்கு பிசாசை அதிபதியாக முன்னிறுத்தும் மனிதனின் குறிக்கோளையும் நாம் இந்நாட்களில் காணமுடிகிறது.
பாபிலோன் மறுபடியும் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்து மற்றுமொரு முறை உலகை ஒன்றுபடுத்துகிறது. நாம் இதன் பெயரை மாற்றி "புதிய உலக வழிமுறை அல்லது தரம்" என்று பெயர் வைத்துள்ளோம், ஆனால், நாம் இதனை "புதிய பாபிலோன்" என்று அழைக்கவேண்டும். நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன், சகரியாவின் தீர்க்கதரிசனத்தை கண்டு ஆச்சரியப்பட்டேன், அதாவது சகரியா ஏன் இவ்விதமாக தீர்க்கதரிசனம் உரைத்தார்:

"ஜெருச‌லேமுக்கு விரோதமக யுத்தம் பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப் போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டு போவதில்லை." (சகரியா 14:2)

எனக்கு கற்றுக்கொடுத்த இஸ்லாமின் படி மேசியாவின் இரண்டாம் வருகை ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசனம் ஆகும். அவர் சிலுவையை முறிப்பவராகவும் பன்றியை கொல்பவராகவும் காண்பிக்கப்பட்டிருந்தார். இன்னொரு இஸ்லாமிய இன மக்களின் நம்பிக்கையின் படி "மெஹ்தி" என்ற போலியான ஒரு மேசியா வருவதாக நம்புகிறார்கள் (Antiochos Epiphinias).
முகமதுவின் தீர்க்கதரிசனத்தின் படி அல்லாமல், யாக்கோபுக்கு உண்டாகும் உபத்திரவமானது யூதர்களை முழுவதுமாக அழிக்க அல்ல மாறாக இயேசு ஒலிவ மலையில் மீண்டும் இறங்கி வர அடையாளமாக உள்ளது. அவர் இறங்கி இஸ்ரவேலர்களின் எதிரிகளோடு போரிடுவார். துரதிருஷ்டவசமாக இதை நம்பாதவர்களுக்கு மனந்திரும்ப சந்தர்ப்பம் இல்லாமல் போகும்.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், யூதர்களை எதிரிகளாக நினைக்கும் மனப்பான்மையானது பழங்காலத்தில் மட்டும் இருந்தது என்று நினைக்கலாகாது. இன்றும் பல கோடிக்கணக்கான முஸ்லீம்கள், என்றைக்காவது ஒரு நாள் முகமது சவுதி அரேபியாவில் உள்ள யூதர்களுக்கு செய்தது போல நாங்களும் புனித பூமியில் உள்ள யூதர்களுக்கும் செய்வோம் என பரிதாபகரமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் கொலை செய்து அவர்களது மனைவியரை ஆசை நாயகிகளாக வைத்துக்கொள்ள குர்‍ஆனில் அனுமதி வழங்கப்பட்டிருப்பது தான் இஸ்லாமியர் அவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொள்ள காரணமாக அமைகிறது.
சத்தியம் என்ற பதம் இரவு பகலாக விடாமல் என் இதயத்துக்குள் ஒட்டிக்கொண்டு எனது ஆன்மாவை விடாமல் உரசிக்கொண்டிருந்தது. அதன் பயனாக பைபிளையும் குர்‍ஆனையும் விடாமல் படித்து பைபிளே சிறிதும் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் உண்மையான சொக்கத்தங்கம் என உணர்ந்தேன். பைபிளின் நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியது என்பதற்காக மட்டுமல்ல‌, தேவன் யாக்கோபின் காலத்திலிருந்து இன்று வரை நமது தலைமுறைவரை உறுதிப்படுத்தி நிலை நிறுத்திய இஸ்ரேல் என்ற வார்த்தை கூட பைபிளின் நம்பகத் தன்மைக்கு ஒரு ஆதாரமே . சந்தேகம் இருப்பவர்கள் இதை பார்த்து அறிந்து கொள்ளலாம். இஸ்ரேல் உருவானதும் யூதர்கள் பூமியின் கடையாந்திரங்களிலிருந்தும் கூட்டி சேர்க்கப்பட்டது வேதாகமம் எனும் பைபிளின் உறுதித் தன்மைக்கு சரியான சான்றாகும். இஸ்ரேல் தேசம் உருவானது வேதமாகிய பைபிளின் உறுதி தன்மைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். தேவன் அவர்களை உலகம் முழுவதும் சிதறடித்தார் ஆனால் தமது வாக்கின்படி அவர்களை மறுபடியும் கூட்டிச்சேர்த்தார்.

"நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பி வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரேமியா 29:14)

மெய்யான தேவன் ஒருபோதும் மாறுவதில்லை, நான் எதிரிகளாக கருதிய யூதர்கள் வாயிலாக தான் தேவனுடைய வார்த்தை எழுதப்பட்டது, மீட்புக்கான தேவ திட்டம் மேசியா மூலமாக வெளிப்பட்டது. இயேசு என்ற யூதர் நான் வசித்த ஊரில் வசித்தவர், எனது ஊரான பெத்லகேம் அப்பத்தின் வீடு என்றல்லவா பொருள்படுகிறது. இயேசு இவ்வாறாக சொல்லியிருக்கிறாரே:

"இயேசு அவர்களை நோக்கி, ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்" (யோவான் 6 :35)

பெத்லகேம் என்ற பெயர் இயேசு இந்த உலகத்தில் வருமுன்னே அந்த ஊருக்கு வழங்கப்பட்டிருந்தது. நான் எதிரியாக கருதிய யூத வம்சத்தில் தான் அவர் வந்தார், எனது பாவங்களுக்காக மரித்தார். பகையாளி தன்னை பகைப்பவனுக்காக மரிப்பதைப்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. தன்னை அடிக்கப்படுவதற்கும், துப்பப்படுவதற்கும் சிலுவையில் அறையப்படுவதற்கும் அவர் தன்னை ஒப்புக் கொடுத்தார், உனது பகையாளி உனக்காக மரிக்கக்கூடுமோ? இருப்பினும் அவர் இவ்வாறு சொன்னார்.

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்" (மத்தேயு 5:44)

சத்தியம் என் கண்களுக்கு முன்பாக இருந்தது, எனது இதயத்தின் கதவுகளை அது தட்டிக்கொண்டேயிருந்தது, அது உள்ளே வர விரும்பியது. அந்த சத்தியத்தை நான் அழைத்தேன், தேவன் பதில் கொடுத்தார், குருடனாயிருந்து சத்தியத்தை தேடினேன், இப்போது பார்க்கிறேன். அவர் எனது கதவை தட்டினார், நான் திறந்தேன் அவர் என்னை விடுதலையாக்கினார்.

"அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6)

எனது உணர்வுகள், நோக்கங்கள், சிந்தனைகள் அனைத்தும் மாறின. யூதர்களுக்காக பரிதாபப்பட ஆரம்பித்தேன், எனது காழ்ப்புணர்ச்சிகள் என்னை விட்டு அகன்றன. அவர்களை காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் என் வாழ்விலே இப்போது இல்லை. ஜெருச‌லேமின் அமைதிக்காக ஜெபிக்கிறேன். யூத படுகொலைகளை தொலைக் காட்சிகளில் கண்டு ரசிப்பதை விடுத்து அவர்களுக்காக கண்ணீர் வடிக்கிறேன். என் இயேசு எனக்காக செய்தது போல‌ எனது உயிரையே அவர்களுக்காக தியாகம் செய்ய ஆவலாய் உள்ளேன். எனது சொந்த இன மக்களான அரேபியர் இவ்வளவு வெறுப்புணர்வு கொண்டிருந்தபோதும் இதை தைரியமாக கூறுகிறேன்.
ஆம், முழு உலகத்துக்கும் சொல்கிறேன், நான் யூதர்களை நேசிக்கிறேன், அவர்களிடமிருந்து வந்த இரட்சகருக்காக நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் மூலமாக ஒளியும் சத்தியமும் இந்த உலகத்துக்குள் வந்தது, இதற்காக நான் அவர்களை நேசிக்கிறேன். அவர்களை இனியும் வெறுப்பதற்கில்லை ஏனெனில் நான் பைபிள் மூலமாக அறிந்துக்கொண்டேன், அவர்கள் கர்த்தரால் தெரிந்து எடுக்கப்பட்ட ஜனம், அரேபியர் மாத்திரம் அல்ல முழு உலகத்துக்கும் வெளிச்சம் கொடுக்க ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனம். தேவன் உலகம் முழுவதற்கும் அவர்களை ஆசீர்வாதமாக வைத்தார். நாம் அவர்களை நேசிக்க வேண்டும் தாங்க வேண்டும். அவர் ஆபிரகாமுக்கு சொன்னபடி

"நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்" (ஆதியாகமம் 12:2)

சத்தியத்தை அறிந்ததால் ஹிட்லரை நம்பிக்கொண்டிருந்த நான் கிறிஸ்துவை நம்ப ஆரம்பித்தேன். பொய்களை நம்புவதிலிருந்து உண்மையை, வியாதிப்பட்டிருந்து பின் சுகமாகி, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, சந்தேகத்திலிருந்து விசுவாசத்திற்கு, வெறுப்பில் இருந்து அன்பிற்கு இப்படி பல வகைகளில் மாற்றப்பட்டேன். இந்த மாற்றம் காரணமாக தேவனுடைய சத்தியத்தை அறியாவிட்டால் வெளியே நன்றாக தெரியும் விஷயங்கள் உள்ளே ஏமாற்றம் அளிக்கும் பொய்யோடு தான் இருக்கும் என்பதை உணர தவறிவிடுவோம் என அறிந்துகொண்டேன். கர்த்தராகியை இயேசு தான் நமது பாவங்களுக்காக மரித்தார் என்பதை ஏற்றுக்கொண்டேன், அவருக்கே என்னை அர்ப்பணிக்கிறேன்.
இயேசு கூறினார்:
"வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28)
உமது வாக்குத்தத்தை நிறைவேற்றியதற்காக நன்றி ஆண்டவரே.

என்னோடு தொடர்பு கொள்ள வேண்டுமானால், எனக்கு மெயில் அனுப்புங்கள். அன்பான இஸ்லாமியர்களே, நான் ஏன் இயேசுவை நம்புகிறேன் என்பதை உங்களுக்கு சொல்லட்டும். பைபிளிலும் குர்‍ஆனிலும் வாலித் அவர்கள் செய்த ஆராய்ச்சி கட்டுரைகளை படியுங்கள். ஆங்கில மூலம்: Walid's Testimony

Post a Comment

0 Comments