Header Ads Widget

Responsive Advertisement

உன் இஷ்டப்படி நடந்தால்..... (ஓர் உண்மை சம்பவம்)


சில வருடங்களுக்கு முன்பதாக நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை உங்களோடு வேத வெளிச்சத்தில் ஆராய விரும்பிகிறேன்,  நீதிமொழிகள் 16;25 மற்றும் பிரசங்கி 12ம் அதிகாரம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை இது விளக்கும்,
சில ஆண்டுகளுக்கு முன்பதாக எனக்குத் தெரிந்த ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் தலைவர், தன் வாழ்க்கையை தன் இஷ்டப்படி தன் வாழ்வை குடி, சூதாட்டம், விபச்சாச்ரம், என்று மிகவும் உல்லாசமாக வந்து வந்தார். அவரது இளம் மனைவி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமலும், மற்றவர்கள் சொல்லுவதை அசட்டை செய்து கொண்டும் வாழ்ந்து வந்தார்.
 தீய நண்பர்களோடு சேர்ந்து கொண்டு குடிப்பதும், விபச்சாரத்தில் ஈடுபடுவது என்று இந்த உலகத்தில் சாத்தான் மனிதனை வீழ்த்த வைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதமான சிற்றின்பம் என்ற சேற்றில் சிக்கி உழன்று கொண்டிருந்தார்.

காலம் கடந்தது சாத்தானின் கன்னியில் வீழ்த்தப்பட்டார், உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் உங்களுக்கு உயிர் கொல்லியான் எயிட்ஸ் வந்துள்ளது என்று அறிக்கை அளித்தார். அப்போது தான் உண்மையை அறிந்து கொண்டார். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மிகவும் பிரயாசப்பட்டார். காரணம் தன் மனைவி மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள் அனாதையாகிவிடுவார்கள் என்று மிகவும் கவலை கொண்டார்.
நாட்கள் கடந்தன அவரது நிலைமை மிகவும் மோசமானது, உடல் மெலிந்தார். உரோமங்கள் விழுந்தன, படுத்த படுக்கையானார். மருத்துவம் தன்னைக் காப்பாற்றாது என்று உணர்ந்து கொண்ட அவர். இனி கடவுள்தான் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அறிந்து அனேக தேவ ஊழியர்களை அழைத்து ஜெபித்தார். தான் எப்படியாகிலும் பிழைத்து விட வேண்டும் என்று தவியாய்த் தவித்தார். ஆனால் காலம் கடந்து விட்டது. தான் நன்றாக வாழ்ந்த போது கடவுள் கொடுத்த எல்லா எச்சரிப்பையும் உதாசீனப்படித்தியதனாலும், காலங்கடந்த தேடலினாலும் (எபிரேயர் 12;17), அவர் கண்ணீரோடு தன் நல் வாழ்வைத் தேடியும் கிடைக்காமல் ஒருநாள். மிகவும் பாடுபட்டு மாண்டார்.
இன்று அவருடைய மனைவிக்கும், தன் குழந்தைகளுக்கும் சேர்த்து வைத்துப் போன சொத்து என்னவென்று தெரியுமா? கடனும் கண்ணீருமே, நீதிமொழிகள் 5;3-5 வசனங்களில் வேசியின் உதடுகள் தேன்கூட்டைப் போல மிருவாக இருக்கும், ஆனால் முடிவோ கசப்பும், இறுதியில் துர்மரணமும் தான் மிச்சமாகும் என்று சொல்லுகிறது எந்தனை உண்மை பாருங்கள்.

எனக்கன்பான சகோதரனே இன்று ஒருவேளை நீயும் இந்த வேசி மார்க்கத்தில் நடந்து கொண்டிருக்கலாம். பைபிள் மிகத் தெளிவாக எச்சரிக்கிறது நீ உனக்கு உரிமையில்லாத பெண்ணை இச்சையோடு பார்த்தால் கூட அது விபச்சாரம் என்று (மத்தேயு 5;28). இன்று வெசி மார்க்கத்தைப் பெருக்க சாத்தான் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டான், ஆம் தொலைக்காட்சியும், கணினியும் தான் அது. அன்றாடம் காமக் களியாட்டங்கள், மற்றும் ஆபாசமான உறையாடல்கள். என்று பட்டியல் நீள்கிறது. 
இவைகளைப் பார்க்கும் போது நம்மையும் அறியாமல் நாம் சாத்தானுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விடுகிறோம். முடிவில் கலாச்சார சீர்கேடு, நிம்மதியின்மை, தற்கொலை என்று படிப்படியாக சாத்தானின் திட்டத்திற்கு ஆட்பட்டு விடுகிறோம். ஒருவேளை இதுவே உனக்கு கடைசி எச்சரிப்பாக இருக்கலாம். நீ இந்த வேசி மார்க்கங்களை விட்டு விலகாவிட்டால், முடிவில் துர்மரணமும், நரகாக்கினையும் நிச்சயம் மறந்து விடாதே, இன்றே உன் பாவங்களை அறிக்கை செய்து மனம் திரும்பு.
வேசிமார்க்கம் என்பது ஏதோ வேசியோடு விபச்சாரத்தில் ஈடுபடுவது என்பது மட்டும் நினைத்துவிடாதே, 2கொரிந்தியர் 6;9-ன் படி ஒருபாலினப்புணர்ச்சி, சுயப்புணர்ச்சி, இவைகளும் தான். மேலும். இவர்கள் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு விட்டுவிட்டால் ஒழிய இவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள்.
எப்படி விடுதலை ஆவது?
ஆகவே விபச்சாரம் என்ற சாத்தானுக்கு எதிர்த்து நில்லுங்கள் அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான் (யாக்கோபு 4;7) என்று வேதம் சொல்லுகிறது. எப்படி எதிர்த்து நிற்பது? சாத்தான் எப்போதுமே முதலில் சிந்தனையில் தான் நம்மை வசப்படுத்துவான், ஆகவே அவன் உங்கள் மனதில் இப்படிப்பட்ட எண்ணங்களை உட்புகுத்தும் போது உடனே அந்த நினைவுகளுக்கு உட்படாதிருங்கள். அப்போது அவன் உங்களை ஆளுகை செய்ய முடியாது.
நம்மை உண்டாக்கிய கடவுள் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் (வெளி4;8) ஆகவே நாமும் நாம்முடைய பரிசுத்ததைக் காத்துக்கொண்டு(1பேதுரு1;15) பரிசுத்தமாய் வாழ்ந்து சர்வ வல்லவராம் இயேசு கிறிஸ்துவுடன் நித்திய இளைப்பாறுதலுக்குள் கடந்து செல்வோமாக (வெளி14;13) ஆமேன்.


Thanks:Stephen ramesh (voice of wilderness international Ministries)

Post a Comment

1 Comments

  1. நல்லதொரு எச்சரிக்கை மணி உங்கள் பதிவு

    ReplyDelete