Header Ads Widget

Responsive Advertisement

'அன்புள்ள கணவனுக்கு' ஓடிப்போன மனைவியின் கடிதம் (சிறுகதை)

சந்தோஷுக்கு இதயம் சம்மட்டியாய் அடித்துக் கொண்டிருந்தது, உடல் முழுவதும் வியர்வை, நாக்கு வரண்டு உதடுகளை ஈரமாக்க முயன்று தோற்றுக்கொண்டிருக்க மனதிலோ ஆத்திரம், அழுகை, கவலை எனக் கொந்தளித்துக் கொண்டிருந்தது. 

ஐயோ இனி நான் என்ன செய்வேன்? பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? இனி அவர்களை நான் எப்படி வளர்த்துவேன்? என்னுடன் 12 ஆண்டுகள் அன்பாக இருந்த என் மனைவியா இப்படி? என்று புலம்பித் தீர்த்துக்கொண்டிருந்தான்....

விசயம் இதுதான்: அன்று அலுவலகத்திலிருந்து மதியமே வீட்டுக்கு வந்த சந்தோஷுக்கு மனைவி கடிதம் எழுதிவைத்து விட்டு சென்று விட்டதை அறிந்து தான் இத்தனை புலம்பல்கள்.

அப்போது மணிஅடிக்கும் சத்தம் கேட்டது, திடுக்கிட்டு விழித்தான், அதிகாலை நேரம் 3 மணி, ஓ இது கனவா? என்று மனதை பெருமூச்சு விட்டு தேற்றிக்கொண்டிருக்க பக்கத்தில் இருந்த தேவாலயத்தின் மணி 3 அடித்து  "மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார். ஏசாயா 62:5" என்ற வசனைத்தைச் சொன்னது,


கனவின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு கொண்டிருந்த சந்தோஷுக்கு அந்த வசனத்தைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது, அப்போது அவனது மனசாட்சி பேச ஆரம்பித்தது 

சந்தோஷ் ஒரு சாதாரண கனவுக்கே இவ்வளவு தூரம் பதட்டமடைகிறாயே, உன் மனைவியாவது உன் வாழ்க்கையில் பாதியில் உனக்குக் கிடைத்தவள், ஆனால் உன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உன் கரு உருவாகும் போதே (சங்கீதம் 139:16) உன்னை தெரிந்து கொண்ட உன் ஆண்டவர் உன் மனைவி உன்னை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக உன் ஆணடவர் உன்னை நேசிப்பதை அறிந்திருந்தும், நீ அவரை விட்டு அடிக்கடி சொல்லிக்கொள்ளாமல் பாவம் செய்ய ஓடிப் போகிறாயே? அப்போது இயேசு கிறிஸ்துவின் மணம் எவ்வளவு பாடுபட்டிருக்கும்? உனக்கு எதாகிலும் தேவை என்றால் மட்டும் அவரிடம் ஓடிப் போகிறாய் அவரும் உனக்கு மணம் இறங்குகிறார். நீ இப்படி வாழ்வது உனக்கே நன்றாக இருக்கிறதா? என்று கேட்டது..


இந்த வார்த்தைகளைக் கேட்ட சந்தோஷ் இருதயத்தில் குத்தப்பட்டவனாக அழ ஆரம்பித்தான், 

சிறிதும் தாமதிக்காமல் முழங்காலிட்டு இயேசு கிற்ஸ்துவை நோக்கி தன் பாவங்களை அறிக்கையிட்டான், மனம் கசந்து அழுதான், பின்பு அப்பா நான் உம்மை விட்டு விட்டு பாவப் பாதையில் லஞ்சம், குடி, என்ற பாவ பாதையில் சென்றபோது உமது உள்ளம் எத்தனை பாடுகள் அடைந்திருக்கும் என்று உணர்கிறேன். இனி உம்மை மகிழ்ச்சிப்படுத்தும் பிள்ளையாக என் வாழ் நாள் எல்லாம் வாழ்வேன், உமக்கு சாட்சியாக வாழ்வேன், நான் உம்முடைய பிள்ளை இனி தவறு செய்யமாட்டேன். தயவு செய்து கிருபையாய் என்னை மன்னியும் என்று கெஞ்சினான். அன்று முதல் சாட்சியுள்ள வாழ்க்கை வாழத்தொடங்கினான்.

எனக்கன்பானவர்களே, நானும் நீங்களும் கூட இப்படி கிறிஸ்துவின் அன்பை விட்டு போய் பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம், இன்றே பாவத்தை அறிக்கை செய்து இனி பாவம் செய்யமாட்டேன் என்று கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து தீர்மாணம் எடுப்போம்... மணவாளன் வரும் நாளுக்கென்று காத்திருப்போம் (மத்தேயு 25:10) ஆமென்.

Post a Comment

2 Comments

  1. நண்பரே தலைப்பை சரி செய்யவும்..

    க'ண'வன் என்று இருக்க வேண்டும். கனவன் என்று இருக்கிறது.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே மாற்றி விட்டேன்

    ReplyDelete