Header Ads Widget

Responsive Advertisement

பாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம்-2


கி.மு. மற்றும் கி.பி. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன் கிறிஸ்து பிறப்பதற்கு பின் என்று காலத்தை பகுத்துப் பார்க்கும் நடை முறை எப்போதிருந்து வந்தது தெரியுமா? கி.பி526 ல் இருந்து தான் ரோமானியப் பேரரசன் ஜஸ்டினியன் என்பவனின் உத்தரவுப் படி கிறிஸ்தவ துறவி டயோனியஸ் எக்சிகஸ் என்பவர் நடைமுறைப்படுத்திய வழக்கம் தான் கிமு, கிபி ஆகும், ஆனால் அவர் வருடத்தை தவறாக கணக்கிட்டதால் சுமார் ஆறு ஆண்டுகள் பின்ணோக்கி கணக்கிடப்பட்டு வருகிறது, இதன் படி சரியாக இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு கிமு 6 ஆம் ஆண்டு ஆகும்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////


தமிழகத்துக்கு வந்த இயேசு கிறிஸ்துவின் நேரடி சீடராகிய அப்போஸ்தலனாகிய தோமா இயேசு கிறிஸ்துவைப் பற்றி எழுதிய நற்செய்தி நூலின் சில பாகங்கள் எகிப்த்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது, அந்த நற்செய்தி நூலின் ஆங்கில தொகுப்பு நம்முடைய பைபிள் அங்கிள் தளத்தில் இருக்கிறது

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

தமிழ் மொழி நோவாவின் குமாரனான சேமின் வம்சத்திலிருந்து வந்த மொழி என்று வரலாற்று வல்லுணர்கள் கருதுகிறார்கள், 38 தலைமுறைக்கு முன்னால் தமிழர்கள் ஒருதாய்க்குப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் கணித்திருக்கிறார்கள், இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழர்களைச் சந்திக்கத்தான் இயேசு கிறிஸ்துவின் நேரடி சீடர் அப்போஸ்தலராகிய தோமா(தாமஸ்) தமிழகத்துக்கு வந்தார்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

தமிழ் மொழி இத்தனை சிறப்பு வாய்ந்ததாக இருப்பதாலோ என்ன்வோ, இந்தியாவிலேயே ஏன் ஆசியாவிலேயே தமிழில் தான் முதன்முதலில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது, தமிழில் வந்த முதல் அச்சுப் புத்தகமமும், உரைநடை புத்தகமும் பைபிளே என்பது கூடுதல் தகவல்,

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

நாம் இப்போது பயன்படுத்திவரும் நவீன தமிழ் எழுத்துருக்கள், மற்றும் மெய்யெழுத்தின் மீது புள்ளி வைப்பது, வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு எழுதுவது, கெ, கே, போன்றவற்றை வித்தியாசப்படுத்த ஒற்றை மற்றும் இரட்டை சுழி கொம்புகள் கே, கோ, ஆகிய எழுத்துக்களை வித்தியாசப்படுத்த பயன்படுத்தப்படும் துனைக்கால், ஆகியவைகளும் தமிழுக்கான முதல் எழுத்து அச்சுகளும் பைபிளை மொழிபெயர்த்த கிறிஸ்தவ மிஷனரிகள் செய்த மாற்றங்களாகும். தமிழுக்கான முதல் சொல் அகராதியும் பைபிள் மொழியாக்கத்தின் போது உருவாக்கப்பட்டது ஆகும்

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////


இன்று நாம் ஒரு கட்டுரை எழுதுவதற்கு பல நூல்களிலிருந்து தேவையான கருத்துக்களையும்(reference), அகராதிகளிலிருந்து சொற்களையும் பெறுகிறோம் ஆனால் தமிழில் அச்சு நூல்களே இல்லாத காலகட்டத்தில்(1715ஆம் ஆண்டு) தமிழில் பைபிளை எழுத சீகன் பால்கு அவர்கள் அதிக கஷ்டப் பட்டார், அவருக்கு அப்பத்திற்கு என்ன தமிழில் எழுதுவது என்று தெரியவில்லை தன்னுடைய வேலைக்கரனிடம் உங்கள் ஊரில் சாப்பிடும் பொருளுக்கு என்ன பெயர் என்று கேட்டிருக்கிறார் அதற்கு அந்த வேலைக்காரன் கஞ்சி என்று சொல்லியிருக்கிறான், உடனே இவர் அப்பம் என்று வரும் இடங்களில் எல்லாம் கஞ்சி என்றே அச்சிட்டாராம், பின்னாட்களில் அது சரி செய்யப்பட்டது.


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

நமக்கு ஆங்கில மாதம் தமிழ் மாதங்களும் ஓரளவு தெரியும், ஆனால் பைபிள் எழுதப்பட்ட சூழ்நிலை மற்றும் காலகட்டத்தில் இருந்த எபிரேயர்களின் (இஸ்ரேலியர்கள்) மாதங்கள் தெரியுமா? அவை (1)ஆபீப் (நிசான்). (2) சீப் (IYYAR). (3) சிவான். (4) தம்முஸ். (5) ஆப் (6) எலூல். (7) எத்தானிம்(திஸ்ரி). (8) பூல். (9)கிஸ்லெயு (10) தேபேத் (11) சேபாத் (12) ஆதார், ஆகியவை ஆகும், தற்கால நடைமுறையின்படி சூரிய சுழற்சியின் படி அமைக்கப் படாமல் அம்மாவாசையைக் கணக்கில் கொண்டு கணக்கிடப்பட்டது,  12 அமாவாசை ஒரு ஆண்டு ஆண்டுக்கான நாட்கள் 354 மேலும் நாட்கணக்கை சரிகட்ட மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வீதார் என்ற ஒரு மாதம்  நிசான் மாதத்திற்கும் ஆதார் மாதத்திற்கும் இடையில் சேர்க்கப்பட்டது

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

விசுவாசத்தை வளர்க்கும் வரலற்று உண்மை

இஸ்ரேல் பழங்குடிகளின் தலைவர்களான ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபுக்கு தேவன் கொடுத்த வாக்கின் படி கி.பி 70ல் சிதறடிக்கப்பட்ட யூதர்களுக்கு 1948 ஆம் ஆண்டு அதிசயத்தக்க விதமாக மீண்டும் இஸ்ரேல் தேசம் உருவாகி நம் கண்முன்னால் சாட்சியாக நிற்கிறது, இந்த இரண்டாயிரம் ஆண்டு காலத்தில் யூதர்கள் தாங்கள் வேறு தேசம் வேறு மொழி, என்று மற்ற மக்களோடு மக்களாக கலந்து சகல வசதிகளோடும் வாழ்ந்து வந்த தங்களுடைய குடிபுகுந்த நாட்டை விட்டு வெளியேறி புதிய தேசத்தில் குடியேறினார்கள் இது நம் கண்முன்னால் நாம் பார்க்கும் அதிசயம்,

இனி வரும் நாட்களில் யூதர்கள் மட்டுமல்லாது உலக மக்களுக்குள் கலந்து தாங்கள் யாரென்றே தெரியாத மற்ற பதினொரு இஸ்ரேல் கோத்திரத்தார்களும், இயேசுவே மேசியா என்று அறிந்து கொண்டு வாக்களிக்கப்பட்ட முழு இஸ்ரவேல் தேசத்தையும்(தற்போது இருக்கும் இஸ்ரேல் தேசம் அதின் ஒரு சிறு பகுதிதான்) தேவன் அளித்த வாக்குறுதியின் படி பெற்றுக்கொள்வார்கள், இது உலகம் முழுவது ஒராட்சியாகும் போது நடக்கும்,.

எனக்கன்பான தேவபிள்ளையே இஸ்ரேலின் முற்பிதாக்களுக்கு தேவன் கொடுத்த வாக்குறுதிகளை மறக்கவில்லை என்பதற்கு தற்போதுள்ள இஸ்ரேல் தேசமே சாட்சி, உனக்கும் எனக்கும் தேவன் கொடுத்திருக்கும் வாக்குறுதியை தேவன் மறக்கமாட்டார், கவலைப்படவேண்டாம். நிச்சயம் நிறைவேற்றியே தீருவார்.

Post a Comment

0 Comments