Header Ads Widget

Responsive Advertisement

பாப்கார்ன் (popcorn) பதிவுகள்-பாகம்-4




நமக்கு திராவிட மொழிகள் தெரியும், கிறிஸ்தவர்களாகிய நமக்கு செமிட்டிக் மொழிக்குடும்பத்தை பற்றியும் தெரிந்திருத்தல் அவசியம், செமிட்டிக் மொழிகள், எபிரேயம், அராமாயிக், அக்காடியம், ஃபோனீசியம், கானானியம், அரபு, எத்தியோபியம், பாபிலோனியம், ஆகிய மொழிகள் செமிடிக் மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவையாகும்,

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

தீர்க்க தரிசனம் இல்லாத இருன்ட காலத்தின் 400 ஆண்டுகளின் முடிவில் நம்முடைய இயேசு கிறிஸ்து பிறந்தார், அக்கால கட்டத்தில் மீட்பர் என்ற பொருள் படக்கூடிய‌ எபிரேய மொழியில் ஜொசுகா என்றும், கிரேக்க மொழியில் ஈசூஸ் என்றும், அரபு மொழியில் ஈசா என்றும் மேசியாவின் எதிர்பார்ப்பு வேட்கையை நினைவுபடுத்தும் பெயர்கள் யூதர்களுடைய பல குழந்தைகளுக்கு வைக்கப்பட்டது,

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

பர் என்ற கிரேக்க சொல்லுக்கு S/O, ‍ அதாவது இன்னாருடைய குமாரன் என்று பொருள், மேலே சொன்னபடி இயேசு என்ற பெயர்கள் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் பலருக்கு வைக்கப்பட்டிருந்தது, பிலாத்து பஸ்கா பண்டிகையின் போது நான் நசரேயனாகிய இயேசு கிறிதுவை விடுதலையாக்க வேண்டுமோ? அல்லது பரபாஸை விடுதலையாக்க வேண்டுமோ என்று கேட்டிருப்பதாக நற்செய்தி ஆசிரியர் விவரித்திருக்கும், சம்பவத்தில் பரபாஸாக வருபவனின் பெயரும் இயேசுவே, குழப்பம் ஏற்படாதிருக்க அபாஸின் மகன் (பர்+அபாஸ்) என்று பொருள் படும், பரபாஸ் என்ற பெயரால் அவனைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////


அலெக்சாண்டர், தான் கைப்பற்றிய பகுதிகளை கிரேக்க மயமாக்கினான், இதனால் யூதர்களுடைய தாய்மொழி எபிரேயமாக இருந்தாலும், பாலஸ்தீனா பகுதியில் அராமாயிக் மொழி பேசப்பட்டாலும், கல்விமுறையும் எழுத்து முறையும் கிரேக்க மொழியாகவே இருந்தது,(இந்தியாவில் ஆங்கில வழிக் கல்வி போல) ஆகவே பைபிளின் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலேயே எழுத்தப்பட்டதற்கு இதுவே காரணம்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

இயேசு கிறிஸ்து அராமாயிக் மொழியில் பேசினார் என்று நமக்குத் தெரியும், பைபிளில் தாணியேல் புத்தகத்தின் சில பகுதிகள் மட்டும் அராமாயிக் மொழியில் எழுதப்பட்டுள்ளது, இது தவிர்த்த பழைய ஏற்பாடு முழுவதும், எபிரேயத்திலும், புதிய ஏற்பாடுகள் முழுவதும் கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

அலெக்சாண்டருக்குப் பிறகு கிரேக்க பேரரசு இரண்டாகப் பிரிக்கப்பட்டு தாலமி, செல்யூக்கஸ் ஆகிய அலெக்சாண்டரின் தளபதிகள் கிரேக்க பேரரசை ஆண்டார்கள், இதில் செல்யூக்கஸ் பாலஸ்தீனா பகுதியை உள்ளடக்கிய பகுதிகளை ஆண்டான், இந்த செல்யூக்கஸின் வம்சத்தில் 'அந்தாந்தியோகியஸ் IV ‍ எப்பிபர்னஸ்' என்ற மன்னன் எருசலேம் தேவாலயத்தில் பன்றிகளைப் பலியிட்டான். தாணியேல் நூல் மறைமுகமாகச் சொல்லும் அரச வணக்கம் போன்றவற்றில் குறிப்பிடப்படும் மன்னன் இந்த நான்காம் எப்பிபர்னஸ் தான்.


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

கிரேக்க பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரோம பேரரசு ஏற்படுத்தப்பட்டது, கி.மு. 63 ஆம் ஆண்டு பாம்பே (pombay) ‍ என்ற கிரேக்கத் தளபதி பாலஸ்தீனா பகுதியை ரோம பேரரசின் கீழ் கொண்டுவந்தான், அதிலிருந்து கி.பி.70 ஆண்டு வரை பாலஸ்தீனா பகுதி ரோமப்பேரரசால் ஆட்சி செய்யப்பட்டது, இந்த ரோமப் பேரரசின் காலகட்டத்தில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தார். கி.பி 70 ஆம் ஆண்டில் தீத்து (Titus) ‍ என்ற ரோமப் பேரரசன் எருசலேம் நகரத்தை முற்றிலுமாக அழித்தான். எருசலேம் தேவாலயமும் அப்போது முழுமையாக இடிக்கப்பட்டது.


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\ + /////////////////////////////////////////////

புதிய ஏற்பாட்டு நூல்கள் மொத்தம் 27 என்று நமக்குத் தெரியும், இது இறுதி செய்யப்பட்ட ஆண்டு கி.பி.327 ஆகும், அந்த ஆண்டில் தான் பிசப் அக்னேசியஸ் என்பவரது தலைமையில் டிரென்டு (Trent) ‍ மன்றம் என்ற அமைப்பில் கூடி வெவ்வேறு சபைகளுக்கு எழுதப்பட்ட கடிதங்களாகவும், இயேசுவின் வாழ்க்கைக் குறிப்பை சொல்லும் நற்செய்தி நூல்களாகவும் சிதறிக்கிடந்த நூல்களை புதிய ஏற்பாட்டு நூல்கள் என்று தொகுக்கப்பட்டது இந்த ஆண்டில் தான். வாலிபன் தன் வழியை வேத வசனங்கள் மூலமாகவே சுத்தம் செய்ய முடியும் என்று வேதம் சொல்லுகிறது, தேவன் நம்மை பரிசுத்தமாய் வாழவே அழைத்திருக்கிறார், ஆகவே அனுதினமும் வேதத்தை தியானித்து அதன் படி நடந்து உன் வாழ்க்கையை ஆண்டவருக்கு பிரியமாக வாழ்வாயா?

Post a Comment

0 Comments