
முதல் நாள்
இரண்டாம் நாள்
பின்பு, பூமியிலிருந்த நீரை இரன்டாகப் பிரித்து, மேலிருக்கும் நீரான மேகங்களுடன் சேர்த்து ஆகயத்தை உருவாக்கினார். இதற்கு ‘வானம்’ எனப் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து இரண்டாம் நாளாயிற்று.
மூன்றாம் நாள்
பூமியிலுள்ள நீரை பிரித்து, தரைவெளிகளை உண்டாக்கினார். ஒன்றுசேர்த்த நீர் கடலானது. “பூமி அனைத்து புல்வகைகளையும் பூண்டுவகைகளையும், மரம் செடி கொடிகள் ஆகியவற்றையும் உருவாக கட்டளையிட்டார், மேலும் அந்தந்த தாவரங்கள் இனவிருத்தி செய்து கொள்ள விதைகளையும் உண்டாக்க கடவது என்று கட்டளையிட்டார்; அதன் படியே அழகிய மலர்தரும் செடிகளும், புல்வெளிகளும், கனிதரும் மரங்களும் உண்டாயின.
நான்காம் நாள்
இரவை ஆள நிலவையும், திரளான நட்சத்திரங்களையும், பகலை ஆள சூரியனையும் உருவாக்கி ஆகாயத்தில் வைத்தார்.
ஐந்தாம் நாள்
நீரில் நீந்தும் மீன்களையும் தாவரங்களையும் பிற கடல் வாழ் உயிரினங்களையும் வானத்தில் பறக்கும் பறவைகளையும் படைத்தார்.
ஆறாம் நாள்
கடவுள் நிலத்தில் ஊர்வனவான, நடப்பனவாகிய விலங்குகள் அனைத்தையும் படைத்தார். பூமியை ஆட்சி செய்ய, தன் சாயலில், ஆணும் பெண்ணுமாக மனிதனைப் படைத்தார்.
ஏழாம் நாள்
இவை எல்லாம் நல்லவையே எனக் கண்டார். பகலும் இரவுமாகி ஆறாம் நாள் கழிந்தது. எல்லாம் உருவாக்கிமுடித்ததும் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார்
0 Comments