ஆதாம் ஏவளுக்கு இரன்டு குமாரர்கள் பிறந்தனர் அவர்கள் காயீன் மற்றும் ஆபேல். காயின் விவசாயி, ஆபேல் ஆடுமெய்ப்பவன்.
ஆபேல் சிறந்த பொருளை காணிக்கையாய் தருதல்
ஒருநாள் காயின் கடவுளுக்கு காணிக்கையாக விளைச்சலில் மிச்சமிருப்பதை கொஞ்சம் எடுத்து வைத்தான். ஆபேல் தன் சிறந்த ஆடுகளில் ஒரு முதல்குட்டியை எடுத்து அதன் சிறந்த பாகங்களை பலியாகத்தந்தான். ஆகவே ஆபேலின் பலி கடவுளுக்கு விருப்பமாக இருந்தது. அதை எற்றுக்கொண்டார். காயினின் பலியை ஏற்றுக்கொளளவில்லை.
ஆபேல் கொலை செய்யப்படுதல்
இதனால் காயின், ஆபேலின் மேல் வன்மம் கொண்டான், மேலும் ஆபேலை கொல்லத்துடித்தான். கடவுள் காயினிடம்,பாவம் உன்னை சிக்கவைக்க காத்திருக்கிறது, அதிலிருந்து உன்னை காத்துக்கொள்” என எச்சரித்தார். ஆனாலும் காயினின் வன்மம் வளர்ந்தது. தன் தம்பி ஆபேலை ஒரு வயல்வெளிக்கு அழத்துச்சென்று கொலை செய்தான்.
கடவுளின் சாபம்
கடவுள் காயினிடம்,”உன் தம்பி எங்கே?”, என “என் தம்பிக்கு நான் காவலாளியா என்ன?” என பதில் தந்தான் காயின். கடவுள் அவனை தூர நாட்டிற்கு ஓடிப்போகும்படி சபித்தார். “நான் தூர நாட்டிற்கு ஓடிப்போனால் என்னை கொன்று போடுவார்களே? இந்தத்தண்டனை கொடுமையானது.” என காயின் முறையிட, கடவுள் அவனிடம், “உன்னை கொல்பவனுக்கு பலமடங்கு தண்டனை காத்திருக்கிறது.” என்று கூறி, யாரும் அவனை கொல்லாதபடி அவன்மீது ஒரு அடையாளமிட்டார்.
காயின் மனமொடிந்து ஏதேனைவிட்டு தொலைதூரம் போய் வாழ்ந்தான்.
0 Comments