நோவாவின் வம்சம்
ஆதாம் ஏவாளுக்குப் பின் ஆதாமின் மகன் சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேத், ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, ஆகியோர்களின் வழியின் நோவா என்பவர் பிற்ந்தார்.
பிசாசானவனால் பூமியின் நிலை
இந்த நேரத்தில் உலகத்தில் மனித இனம் பல்வேறு பாவங்கள் நிறந்ததாய் மாறிப்பொனது. கடவுள் ஏனிந்த மனிதனைப் படைத்தோமோ என மனமுடைந்து, உலகை அழித்துவிட நினைத்தார்.
வெள்ளத்தால் அழிவு
நோவாவும் அவரது குடும்பமும் கடவுளுக்கு உண்மையாய் இருப்பதைக் கண்டு கடவுள் நோவாவிடம், பெரும் வெள்ளம் ஒன்றை ஏற்படுத்தி இந்த உலகை அழிக்கப்போகிறேன். ஒரு படகு (பெரிய பல அறைகளுள்ள ) ஒன்றை செய். உலகிலுள்ள உயிரினங்களில் அனைத்திலும் ஒரு ஜோடியை எடுத்துக்கொண்டு உன் குடும்பத்தோடு அந்தப் படகில் ஏறி வெள்ளத்திலிருந்து உன்னை காப்பாற்றிக்கொள்.” என்றார். நோவாவும் அவரது மகன்கள் சேம் காம் யாப்பேத் ஆகியோர் ஒரு பெரிய படகை கட்டுவதை கண்டவர்கள் அவரை ஏளனம் செய்தனர். ‘இவனுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?’ என எள்ளினர். நோவா கடவுளின் திட்டத்தை அவர்களுக்கு கூறி மனம் திரும்பச் சொன்னார். அவர்கள் நோவாவை கண்டுகொள்ளவில்லை.
வெள்ளம் வந்தது
சில நாட்களுக்குப்பின் பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது தொடர்ந்து நாற்பது நாட்கள் இடைவிடாது மழை பொழிந்தது, இதனால் உலகம் நீரினால் நிரம்பி, உலகை அழித்தது. நோவாவின் குடும்பத்தினரும் அவர் பெட்டகத்திலிருந்த விலங்குகளும் வெள்ளத்திலிருந்து உயிர்தப்பினர்.
வெள்ளம் வடிந்தது
நூற்றிஐம்பது நாளுக்குப்பின் வெள்ளம் வடிந்தது. நோவாவின் பெட்டகம் ஒரு குன்றின்மேல் தரைதட்டி நின்றது. நோவா ஒரு பறவையை பறக்கவிட அது ஒரு செடியின் கிளையை பறித்துவந்து தந்தது. பெட்டகம் திறக்கப்பட்டு எல்லோரும் வெளியேறி கடவுளுக்கு நன்றி சொன்னார்கள்.
வானவில் ஒப்பந்தம்
கடவுள் நோவாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். “இனிமேல் இதுபோன்று வெள்ளத்தால் உலகின் எல்லா உயிரினங்களும் சாகும்படி செய்யமாட்டேன். இந்த ஒப்பந்தத்தை நினைவு கொள்ள வானவில்லை உருவாக்குகிறேன். ஒவ்வொருமுறை மழை பெய்யும்போதும், வானவில் தோன்றி இந்த ஒப்பந்தத்தை அறிவிக்கும்” என்றார்
0 Comments