Header Ads Widget

Responsive Advertisement

08.ஈசாக்கு


ஈசாக்கின் மகன்கள்
ஆபிரகாமின் மகன் ஈசாக்கிற்கு இரண்டு மகன்கள் பிறந்தனர், . மூத்தவன் எசா, இளையவன் யாக்கோபு.
எசா தலைசிறந்த வேட்டைக்காரன், வேட்டையாடுவதே அவனுக்கு பொழுதுபோக்கு, கொஞ்சம் முரடனும்கூட.
யாக்கோபு வீட்டு வேலைகள் செய்வதில் ஆர்வம் கோண்டான், சாது, கடவுள் பக்தியில் சிறந்தவன்.

ஈசாக்கின் விருப்பம்
ஈசாக்குக்கு வயதாகி தள்ளாடும் நிலையில் அவரது ஆசீர்வாததை தன் மூத்தமகன் எசாவுவிற்கு அளிக்க விரும்பினார். ஈசாக்கு எசாவை மிகவும் நேசித்தார். ஈசாக்கின் மனைவி ரெபெக்கா யக்கோபுமீது பாசம் வைத்திருந்தாள்.

ரெபேக்காலின் சூழ்ச்சி
ஈசாக்கு எசாவை அழைத்து,” கட்டிற்குப்போய் வேட்டையாடி கறி சமைத்து எனக்கு கொண்டு வா. என் ஆசீர்வாதத்தை உனக்கு அளிக்கிறேன்.” என்றார். இதை ரெபெக்கா கேட்டாள். தன் செல்லப்பிள்ளை யாக்கோபுவிற்கு இந்த ஆசீர்வாதம் கிடைக்கச் செய்ய எண்ணினாள். யாக்கோபுவை அழைத்து,”உன் தந்தை தன் ஆசீர்வாதத்தை எசாவுக்கு வழங்க இருக்கிறார். நீ போய் ம ந்தைக்கு போய் நல்ல ஆடுகள் இரண்டை கொன்டுவா நான் அதை சமைத்து தருகிறேன் நீ அதை கொண்டு போய் நான்தான் எசா எனச் சொல்லி அந்த ஆசீர்வாத்தை வாங்கிக்கொள். மேலும் ஏசாவைப்போல கைகளில் ரோமத்தை அறிய ஆட்டுத்தோலினை அணிந்து செல் அப்போது கண்பார்வை குறைந்த ஈசாக்கால் உன்னை சரியாக அடையாளம் காண முடியாது.” என்றாள்.

யாக்கோபுக்கு ஆசீர்வாதம்
ஈசாக்கு யக்கொபின் குரலை அடையாளம் கண்டுகொண்டார், ஆனால் கைகளைத் தொட்டுப் பார்க்கையில் அவை ஏசாவின் கைகள் போல இருக்கவே வந்திருக்கும் யாக்கோபுதான் தன் பிரிய மகன் ஏசா என நம்பி தன் ஆசீர்வாத‌த்தை அவனுக்கே வழங்கினார்.

ஏசாவின் கோபம்

சற்று நேரம் கழித்து ஏசா வந்தான். தன் தம்பி மீண்டும் தன்னை
வஞ்சித்து தனக்குச் சேரவேண்டியதை பெற்றுக்கொண்டதை அறிந்தான், கோபம் கொண்டான். யாக்கோபை கொல்லத் திட்டம் போட்டான்.

யாக்கோபு தப்பிச்செல்லுதல்
ஈசாக்கும் ரெபெக்காவும் ஏசாவுக்குப் பயந்து யாக்கோபை ரெபெக்காவின் அண்ணன் வாழ்ந்த ஹாரன் நாட்டிற்கு அனுப்பி அங்கேயே பெண்பார்த்து மணம் முடிக்கும்படி அனுப்பிவைத்தனர்.

Post a Comment

0 Comments