Header Ads Widget

Responsive Advertisement

09.யாக்கோபு


கடவுளின் உறுதி வார்த்தை

யாக்கோபு ஊரைவிட்டு ஓடிப்போகையில்வழியில் அயர்ந்து தூங்குகிறான் அப்போது கடவுள் அவன் கனவில் வந்து நான் உன்னோடு கூட இருந்து உன்னை பாதுகாப்பேன் என்று உறுதியளித்தார்.

லபானிடம் வேலைக்கு சேர்தல்
பின்னர் அவன் தொடர்ந்து பயனம் செய்து ரெபெக்காவின் அண்ணன் லபானை சந்திக்கிறான். தன் தங்கையின் அன்பு மகன் யாக்கோபை கண்டதும் லபான் மகிழ்வடைந்தான். “நீ என்னுடன் வேலை பார்க்க உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்” என்றான். யாக்கோபு லபானின் மகள் ராகேல் மீது ஆசை கொண்டிருந்தான். “நான் உம்மிடம் ஏழு வருடங்கள் வேலை பார்ப்பதற்கு ஈடாக உம் அழகிய மகள் ராகேலை எனக்கு மணம் செய்து தருவீரா?” என்றான் யாக்கோபு. லபான் சம்மதித்தான்.

திருமணம்
ஏழு வருடங்கள் கழிந்ததும் லபானனொரு பெரிய திருமண விருந்து வைத்தான். தன் மகளை யாக்கோபிற்கு மணம் செய்து வைத்தான். திருமணம் முடிந்தது, யாக்கோபு தன் மனைவியின் முகத்தை மூடியிருந்த முகத்திரையை விலக்கிப் பார்த்தான்..அதிர்ச்சியுற்றான். அது ராகேலின் மூத்தவள் லேயாள்.

கோபமும் சமாதானமும்
தன் மாமன் தன்னை வஞ்சித்துவிட்டதை அறிந்து கோபம் கொண்டான். லபான் யாக்கோபிடம், “மூத்தவள் இருக்க இளையவளுக்கு மணம் முடிப்ப்பது எப்படி? இன்னும் ஏழு வருடங்கள் வேலை செய்து ராகேலை மணந்துகொள்” என்றான்.

கானானுக்கு திரும்புதல்
அப்படியே இன்னும் ஏழு வருடங்களுக்கு வேலை செய்து ராகேலை மணந்துகொண்டான்.யாக்கோபு செல்வந்தனானான். கடவுள் யாக்கோபை கானான் நாட்டிற்குத் திரும்பச் சொன்னார். அவனும் யாருக்கும் சொல்லாமல் தன் குடும்பம், வேலையாட்கள் கால்நடைகளோடு கிளம்பி கானானை நோக்கி பயணித்தான்.

அண்ணனுக்கு தூது
அண்ணனுக்குத் தன் வருகை குறித்து யாக்கோபு தூதுவிட்டான், எசா 400 பேர் கொண்ட படையொடு வருவதாக அறிந்தான் தன் உடமைகளையும் வேலையாட்களையும் இரண்டாகப் பிரித்தான், ஒன்று அழிந்தாலும் ஒன்று நிலைக்கும்படி. தன் மனைவி மக்களையும் தனித்து அனுப்பினான்.

யாக்கோபு இஸ்ரவேல் ஆனான்
அன்றிரவு எல்லோரும் தூங்கியபின் யாக்கோபின் கூடாரத்துக்குள் ஒரு புதியவன் வந்தான். யாகோபுடன் மல்யுத்ததில் ஈடுபட்டான். விடியல்வரை மல்யுத்தம் செய்தபின், வந்திருப்பது கடவுளின் தூதன் என்பதை அறிந்தான் யாக்கோபு. தூதன் யாக்கோபுவை நோக்கி, “நீ கடவுளிடமும் மனிதர்களோடுமான சோதனைகளில் வெற்றிபெற்றுள்ளாய் இனிமேல் உன் பெயர் யாக்கோபல்ல இஸ்ரவேல்” என்றான்.

ஏசாவுடன் சமாதானம்
பின்னர் ஏசா யாக்கோபை சந்தித்ததில் மகிழ்ச்சிகொண்டான். இருவரும் கட்டித்தழுவி ஒருவரை ஒருவர் மன்னித்தனர். அதன்பின் யாக்கோபு கானானில் வாழத்துவங்கினான். ராகேல் பென்யமின் எனும் மகனை ஈன்றபின் இறந்து போனாள். யாக்கோபு மனமுடைந்தான்.

யோசேப்பு
யாக்கோபின் 11வது மகன் யோசேப்பு. யக்கோபு மிகவும் நேசித்த ராகேலின் மிக நீன்ட நாளுக்குப்பின் பிறந்த முதல் மகன், யாக்கோபின் செல்லப் புதல்வன். யாக்கோபுக்கு யோசேப்பின் மேல் அலாதி அன்பு. அதனால் அவரின் மற்ற மகன்கள் யோசேப்பின் மீது வெறுப்படைய வைத்தது யாக்கோபின் அன்பு.

இஸ்ரவேலின் பரிசும் யோசேப்பின் கனவும்
யாக்கோபு யோசேப்பிற்கு ஒரு அழகிய வண்ணங்கள் நிறைந்த மேலாடை ஒன்றை பரிசளித்திருந்தார். ஒருநாள் யோசேப்பின் தான் கண்ட கனவு ஒன்றை தன் சகோதரர்களுக்குக் கூறினான்,”வயல் வெளியில் நாமெல்லோரும் கதிர்களை கட்டி வைக்கிறோம். திடீரென என் கதிர் கட்டு எழுந்து நிற்கிறது. உங்கள் எல்லோரின் கட்டுக்களும் என் கட்டுக்கு பணிந்து வண‌க்கம் செய்கின்றன”என்றான்.

ம‌ற்றுமொரு கனவு

யோசேப்பிற்கு இன்னுமொரு கனவு வந்தது,”சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்குவதுபோலக் கண்டேன்” என தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் கூறினான்.ஏற்கனவே யோசேப்பை வெறுத்த அவன் சகோதரர்கள் மேலும் கோபம் கொண்டனர்.

சமயம் வாய்த்தது
ஒரு நாள் யாக்கோபு முதல் பத்து மகன்களும் ஆடு மேய்க்க தொலைதூரம் சென்றனர். அவர்கள் கண்டு யாக்கோபு அவர்களை கூட்டிவரும்படி யோசேப்பை அனுப்பி வைத்தார். யோசேப்பும் பல ஊர்கள் தேடித்திரிந்து தன் சகோதரர்களை கண்டான்.

சகோதரர்களின் திட்டம்
அவன் சகோதரர்கள் அவனைப் பிடித்து”இந்தக் கிணற்றுக்குள் இவனை இரக்கிவிடுவோம், நம் தந்தை கேட்டால் காட்டு விலங்குகள் இவனை கொன்றுவிட்டதாகச் சொல்லுவோம், அப்போது இவன் கனவுகள் என்னவாகும் பார்ப்பொம்” என்று ஜோசப்பை கட்டி கிண்ற்றுக்குள் இறக்கிவிட்டனர்.

ரூபனின் முயற்சி
மூத்தவன் ரூபன் தம்பி யோசேப்பை தப்புவிக்க திட்டம் தீட்டினான்.

யோசேப்பு விற்பனைக்கு
ரூபன் ஆடுகளை கண்காணித்திருக்கும்போது சில வியாபாரிகள் ஜோசப் இருந்த கிண்ற்றுப்பக்கம் வந்தனர். யோசேப்பை சகோதரர்கள் 20 வெள்ளிக்காக அவனை அடிமையாய் விற்றனர்.
ரூபன் திரும்பிவந்து தன் தம்பியைத் தேடுகையில் மற்றவர்கள் நடந்ததைக் கூறினர்.

ச‌கோதரர்களின் பொய்
இஸ்ரவேல் யோசேப்புக்கு அளித்த மேலாடையின் மீது ஆட்டின் ரத்தத்தை ஊற்றி “இதை வழியில் பார்த்தோம் இது தம்பியின் ஆடையல்லவா?” என்றனர்.

இஸ்ரவேலின் துக்கம்
யாக்கோபு இரத்தம் தோய்ந்த ஆடையைக் கண்டு யோசேப்பு இறந்துவிட்டான் என நம்பி துக்கம் கொண்டார்.

அடிமையாய் எகிப்துக்கு
யோசேப்பு அடிமையாய் எகிப்து நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டான்.

Post a Comment

3 Comments

 1. மிக்க நன்றி உங்கள் பதிவு மிக்க பயன் உள்ளதாய் அமைந்தது.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்.

  ReplyDelete
 2. மிக்க நன்றி

  ReplyDelete