Header Ads Widget

Responsive Advertisement

10.எகிப்தில் யோசேப்பு


தலைமை சேவகனிடம் விற்பனை
யோசேப்பை அழைத்து வந்த வியாபாரிகள் அவனை அடிமையாக போத்திபர் என்பவனிடம் விற்றனர். போத்திபர் எகிப்தின் பாரோவின் தலைமை சேவகன்.

நல்ல வேலைக்கரன்
போத்திபரிடம் அடிமையான யோசேப்பு நல்ல வேலைக்காரன் எனப் பெயர் பெற்றான், விரைவில் போத்திபரின் வீட்டின் தலைமை வேலைக்காரனானன்.

யோசேப்புக்கு சோதனை
அழகனும் நேர்மையாளனுமான யோசேப்பின் மீது போத்திபரின் மனைவி ஆசைகொண்டாள். அவனை அடையத் துடித்தாள். அவள் ஆசைக்குப் பணிய யோசேப்பு மறுத்தான்.

சோதனையின் உச்சம்
ஒரு நாள் யோசேப்பு தீவிரமாய் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது போத்திபரின் மனைவி பின்னாலிருந்து அவனை இழுத்தாள். யோசேப்பு அவளிடமிருந்து ஓடிப் போகையில் அவன் உடை இவள் கையில் மாட்டிக்கொண்டது.

பொய்யும் தன்டனையும்
யோசேப்பு தன்னிடம் தவறாக நடந்துகொண்டானென்று போத்திபரிடம் அவன் மனைவி பொய்யாக முறையிட்டாள். அவள் கையில் யோசேப்பின் உடை இருப்பதைப் பார்த்த போத்திபர் யோசேப்பை சிறையில் தள்ளினான்.

சிறையிலும் சிறந்தான்

சிறையில் யோசேப்பு சிறந்து விளங்கினான். அவன் நடத்தையை பார்த்த சிறைத்தலைவன் அவனை எல்லா கைதிகளுக்கும் தலைவனாக்கினான்.பாரோ தன் தலைமை உபசரிப்பாளரையும் தலைமை ரொட்டி செய்பவரையும் சிறையிலடைத்திருந்தான்.இருவருக்கும் யோசேப்பு சேவகம் செய்தான்.

ஓர் இரவில் இரு கனவுகள்
ஒரு இரவில் இருவருக்கும் கனவுகள் வந்தன. யோசேப்பு அவர்களிடம் கேட்க, உபசரிப்பாளன், “என் கனவில் மூன்று கிளைகளுடைய ஒரு திராட்சை கொடி இருந்தது, துளிர்விட்டு மலர்ந்து கனிகள் வந்தன. என் கையில் பாரோவின் ரசக் கோப்பை இருந்தது. அந்தப் பழங்களைப் பிழிந்து பாரோவிற்க்கு வழங்கினேன். இதற்கு அர்த்தம் சொல்ல முடியுமா?”
என்றான்.

கனவின் பலன்
யோசேப்பு,”கடவுளால் கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும் என்றான். ” கடவுளின் உதவியோடு கனவின் அர்த்தம் சொல்ல ஆரம்பித்தான்.
“மூன்று கிளைகள் மூன்று நாட்களை குறிக்கின்றன. மூன்று நாட்களில் உன்னை பாரோ விடுதலை செய்வார். மீண்டும் உன்னை சேவகம் செய்ய ஏற்றுக்கொள்வார். அப்போது நான்தான் இதை உனக்குச் சொன்னேன் என்பதை பாரோவிடம் சொல். நான் அடிமையாய் வந்தவன், ஒரு குற்றமும் செய்யாமல் சிறையிலுள்ளேன்” என்றான்.


இரண்டாம் கனவும் பல‌னும்

ரொட்டிக்காரன் இதைக் கேள்விப்பட்டதும் தன் கனவை சொன்னான்,”மூன்று கூடைகளில் ரொட்டிகளை பாரோவுக்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்தேன், மேலேயிருந்த கூடையிலிருந்து பறவைகள் ரொட்டிகளை கொத்திக்கொண்டிருந்தன”. என்றான்.
யோசேப்பு அவனிடம்,”மூன்று கூடைகளும் மூன்று நாட்கள். மூன்று நாட்களில் பாரோ உன்னை கழுவேற்றுவார். உன் உடலை பறவைகள் கொத்தித்தின்னும்” என்றான்.

பலித்தது

யோசேப்பு சொன்னது போல மூன்று நாட்களில் இருவருக்கும் நடந்தது.உபசரிப்பாளன் பாரொவிடம் யோசேப்பை பற்றி சொல்லாமல் போனான்.

இரு வருடங்களுக்குப் பிறகு…
எகிப்திய அரசன் பாரோவிற்கு ஒரு இரவில் இரு கனவுகள் வந்தன. அந்தக் கனவுகளை புரிந்து கொள்ள ஆசைப்பட்டான். எகிப்திலுள்ள அறிஞர்கள் யாராலும் அந்தக் கனவுகளுக்கு விளக்கம் கூறமுடியவில்லை. மன்னனின் கனவுகளை அறிந்த தலமை உபசரிப்பாளன் யோசேப்பு தன் கனவுக்கு சரியான விளக்கமளித்தை பாரோவிடம் சொல்ல அவனும் ஜோசப்பை அவைக்கு அழைத்து வரச்சொன்னான்.

பாரோவின் அவையில் யோசேப்பு

யோசேப்பு அவைக்கு வந்தான். பாரோ அவனிடம் தன் இரு கனவுகளையும் சொன்னான்,”முதல் கனவில் நான் நைல் நதிக்கரையில் நின்றுகொண்டிருந்தேன், திடீரென ஏழு கொழுத்த பசுக்கள் ஆற்றிலிருந்து தோன்றி அருகே புல் மேய்ந்தன. பின்னர் ஏழு மெலிந்து போன பசுக்கள் தோன்றின. கடும் பசியில் அவை கொழுத்த மாடுகளைத் தின்றன. அதன் பின்னும் பசி அடங்காமல் புல் மேய்ந்தன”“இரண்டாம் கனவில் வயல்வெளியில் நின்றிருந்தேன் ஒரு சோளச் செடியில் ஏழு அழகிய முழுதாய் விளைந்த தட்டைகள் விளைந்தன. கொஞ்ச நேரம் கழித்து ஏழு காய்ந்த தட்டைகள் தோன்றி, நல்ல சோளத்தட்டைகளைத் தின்று அழித்தன. இந்தக் கனவுகளுக்கு விளக்கம் சொல்” என்றான்.

கனவுகளுக்கு விளக்கம்
யோசேப்பு, “கடவுள் எகிப்தின் எதிர்காலத்தை உமக்கு காட்டியுள்ளார். ஏழு பசுக்களும் ஏழு தட்டைகளும் ஏழு வருடங்களை குறிக்கும். எகிப்தில் வரும் ஏழு வருடங்கள் செழிப்பானதாயும் அதன் பின் ஏழு வருடங்கள் வறட்சி மிகுந்ததாயும் இருக்கும்” என்று விளக்கம் தந்தான்.

யோசேப்பின் உயர்வு
பாரோ இந்த விளக்கத்தினால் மனம் மகிழ்ந்தான். யோசேப்பை எகிப்தின் ஆளுநராக்கினான், ஒரு எகிப்திய பெண்ணையும் அவனுக்கு மணம் முடித்துவைத்து,”அரசன் எனக்கு அடுத்த படியாக நின்று எகிப்தை ஆள்வாய்” என்றான். அதே போல யோசேப்பு சென்ற இடமெல்லாம் மக்கள் அவனுக்குப் பணிந்தனர்.

சேமிப்பும் வினியோகமும்
பக்கத்து ஊர்களில் தானியக் கிடங்குகளை கட்டி ஏழு செளிப்பான வருடங்களிலும் தானியங்களை சேர்த்துவைத்தான் யோசேப்பு. பஞ்சம் வந்தபோது எகிப்தியர்களுக்கும் இன்னும் பலருக்கும் சேர்த்த தானியங்களை விற்கத் துவங்கினான். அப்போது….

Post a Comment

0 Comments