Header Ads Widget

Responsive Advertisement

11.எகிப்தில் இஸ்ரவேல்


கானானிலும் பஞ்சம்
எகிப்தில் தானியம் இருக்கிறது என அறிந்து யாக்கோபு , தன் மகன்களை எகிப்துக்கு போய் நமக்காகத் தானியம் வாங்க அனுப்பினான். யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று அஞ்சி, யாக்கோபு அவனை அனுப்பவில்லை.

கனவு பலித்தது

அவர்கள் எகிப்துக்கு போய் யோசேப்பை பார்த்து வணங்கினார்கள். யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போல நடந்து கொன்டான், யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை. யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி, நீங்கள் வேவுகாரர், வேவு பார்க்க வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள், அப்படியில்லை தானியம் வாங்க‌ வந்தோம் என்றார்கள். மேலும் நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய 12பிள்ளைகள். ஒருவன் தொலைந்து போனான், வேவுகாரர் அல்ல என்றார்கள்.

சகோதரர்களை சோதித்தான்

உங்கள் இளைய சகோதரனைப் பார்த்தால் நீங்கள் சொல்லுவதை நம்புகிறேன்,உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; நீங்கள் சொல்வது உண்மையானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து, உங்கள் சகோதரனை அழைத்து வாருங்கள் என்று சொல்லி சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டிவைத்தான்.

யாக்கோபின் மறுப்பும் சம்மதமும்

அவர்கள் யாக்கோபிடம் வந்து, தங்களுக்குச் நடந்ததை சொல்லி பென்யமீனை கேட்டார்கள் மேலும் அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டுகையில், அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்தப் பணமுடிப்புகளை அவர்களும் யக்கோபும் கண்டு பயந்தார்கள்.பென்யமீனை அனுப்ப யக்கோபு மறுத்தான். அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான். யாக்கோபும் சம்மதித்தான்.


யோசேப்பின் வெளிப்படுத்துதல்

முந்தைய பண முடிப்பும் மேலும் தானியம் வாங்க பணமும் எடுத்துக்கொண்டு போய் யோசேப்பின் காலில் விழுந்தார்கள் யோசேப்பு அவர்களுக்கு மதிய‌விருந்து கொடுத்தான் பின்பு சமயம் பார்த்து தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினான் அவர்கள் அவனை கட்டிப்பிடித்து அழுதார்கள்

இஸ்ரவேலை எகிப்துக்கு அழைத்தல்
யோசேப்பின் சகோதரர்கள் வந்ததை அறிந்ததும் எகிப்து மன்னரும் மகிழ்ந்தார். யோசேப்பு தன் அப்பா யாக்கோபு, மற்றும் தன் ச‌கோதரர்கள் குடுப்பத்தையும் அழைத்துக்கொன்டு எகிப்திலே தங்குமாறு பணித்தான். ஏராளமான தானியங்களையும் துணிகளையும் கொடுத்தனுப்பினான்.

எகிப்தில் இஸ்ரவேல்
யோசேப்பு உயிரோடு இருப்பதை அறிந்ததும் யாக்கோபு மகிழ்ந்தான் கடவுள் உத்தரவு கிடைத்ததும் குடும்ப‌த்தோடு எகிப்துக்கு போனான் எகிப்துக்கு போன இஸ்ரவேல் குடும்பத்தினர் அறுபத்தாறு பேர்.மேலும் யோசேப்பின் குடும்பம், பிள்ளைகளோடு சேர்த்து மொத்தம் எழுபது பேர் ஆவர்,

Post a Comment

0 Comments