Header Ads Widget

Responsive Advertisement

12.எகிப்தில் இஸ்ரவேலரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்


யோசேப்பு இஸ்ரவேலை சந்தித்தல்
எகிப்துக்கு வந்த இஸ்ரவேலை யோசேப்பு கன்டு மனம் கலங்கி அழுதான், இஸ்ரவேலும் தன் செல்ல மகனை கன்டு மனம்கிழ்ந்தான், அவர்களை மன்னரிடம் அழைத்துச் சென்று எகிப்திலே ஒரு வளமையான தேசத்தில் குடியமர்த்தினான் அவர்கள் எகிப்தின் நன்மைகளை புசித்தார்கள்

இஸ்ரவேல் தம் மக்களை ஆசீர்வதித்தல்
இஸ்ரவேல் தன்னுடைய மகன்களான‌, ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், பென்யமீன், தாண், நப்தலி, காத், ஆசேர், மற்றும் யோசேப்பு ஆகியோர்களை பேர் பேராகவும் தனித்தனியாகவும் ஆசீர்வதித்தார்.

இஸ்ரவேல் மக்களின் வளர்ச்சி
யாக்கோபின் மரனத்திற்குபின் இஸ்ரவேல் மக்கள் செழித்து வளர்ந்தார்கள் அவர்கள் எகிப்து நாட்டு மக்களை விட அதிகமாய் பெறுகினார்கள் தேசம் அவர்களால் நிறைந்தது.

இஸ்ரவேல் மக்களின் வீழ்ச்சி
யோசேப்பை அறியாத ஒருவன் எகிப்தின் புதிய மன்னனானான். அவன் எகிப்து மக்களிடம் இஸ்ரவேல் மக்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைவ‌ரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, நாட்டைவிட்டு நம்மை விரட்டாத படிக்கு அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; இஸ்ரவேல் மக்களை கட்டிடம் கட்டவும் சாந்தும் செங்கலும் செய்யவும் வயலிலும் வேலை வாங்கினார்கள் அவர்களை ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள்.

பாரோவின் திட்டம்
ஆகையால் எகிப்தின் மன்னர், மருத்துவச்சிகளோடே பேசி, நீங்கள் எபிரெய பெண்களுக்குகளுக்கு மருத்துவம் செய்யும்போது, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான். மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் மன்னர் தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள். அதனால் எகிப்தின் மன்னன் மருத்துவச்சிகளை அழைத்து விசாரித்தான் அதற்கு மருத்துவச்சிகள் எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள். இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார்.

பாரோவின் கட்டளை
இஸ்ரவேல் மக்கள் பெருகி போனார்கள். மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். அப்பொழுது மன்னன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியில் போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் மக்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.

Post a Comment

0 Comments