Header Ads Widget

Responsive Advertisement

13.மோசே


இஸ்ரவேல் மீட்பர் பிறந்தார்
இந்த நேரத்தில் இஸ்ரவேல் மக்களில் ஒரு லேவியின் வம்சத்தில் வந்த ஒரு தம்பதிக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. கொலைக்கு பயந்து அதன் தாய் அந்தக் குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து நைல் ஆற்றில் விட்டாள். குழந்தையின் அக்கா அந்தப் பெட்டியை பின் தொடர்ந்தாள்.

மோசே இளவரசனானார்

பெட்டி மிதந்து பாரோவின் மகள் குளித்துக்கொண்டிருக்கும் இடத்திற்குச் செல்ல, அவள் அதை திறந்து பார்க்கையில் அழகிய ஆண்குழந்தையை கண்டெடுத்தாள். குழந்தையின் அக்கா,”இது ஒரு எபிரேயக் குழந்தை. இதற்குப் பால் கொடுத்து பராமரிக்க எபிரேயப் பெண் ஒன்றை அழைத்து வரவா?” என்றாள். பாரோவின் மகளும் சம்ம்மதித்தாள். “நீரிலிருந்து இவனை பெற்றதால் இவனுக்கு மோசே எனப் பெயர் வைப்பேன்” என்றாள்.
மோசேயின் தாய் அவனை பராமரிக்க அழைத்துவரப் பட்டாள்.

மோசே பாரோவின் மகளின் மகனாக, அரண்மனையில், இளவரசனாக வளர்ந்தான்.

கொடுமையைப் பார்த்தார் கொலை செய்தார்
எகிப்திய இளவரசனாக இருந்தபோதும் தன் மக்களுக்கு நடத்தப்பட்ட கொடுமைகளை பார்த்துக் கவலைகொண்டான் மோசே. மோசே ஒரு நாள் எகிப்திய மேற்பார்வையாளன் ஒருவன் இஸ்ரவேல் அடிமையை அடித்து துன்புறுத்துவதைக் கண்டு கோபம் கொண்டார். அவனை கொன்று புதைத்தார். யாருக்கும் இது தெரியாது என நினத்தார்.

கொலை வெளியானது
அடுத்த நாள் இரு அடிமைகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதை தட்டிக் கேட்டார் அப்போது ஒரு எபிரேயன் அவரிடம்,”அந்த மேற்பார்வையாளைனை கொன்றது போல என்னையும் கொல்வாயோ?” என்றான். மோசே தான் செய்த கொலை எல்லோருக்கும் தெரிந்துவிட்டதை அறிந்து பயந்தார்.

மோசேவை கொல்ல அரசானை
பாரோவுக்கும் இந்த செய்தி எட்டியது. மோசேவை கொல்ல ஆணையிட்டான். மோசே உயிர் பிழைக்க எகிப்தை விட்டு பாலைவனத்திக்குள் ஓடினார்.

தப்பியோடிய மோசே
மோசே தப்பி ஓடி மீதியான் எனும் ஊருக்கு வந்தார். அங்கே கிணத்தடியில் இருக்கையில் சில பெண்கள் மந்தைக்கு நீர் கொடுக்க அழைத்து வந்தனர். ஆனால் வழக்கம் போல வேறு மந்தையினர் இவர்களை துரத்திவிடப் பார்த்தனர். மோசே அவர்களிடமிருந்த் இந்தப் பெண்களை காப்பாற்றினார்.

திருமணமும் குழந்தைகளும்

அந்தப் பெண்களெல்லோரும் ரெகுவேலின் மகள்கள். நடந்ததை அவர்கள் ரெகுவேலிடம் சொல்ல அவர் மோசே தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். மோசே ரெகுவேலோடு தங்கினார் அவரின் மந்தையை கவனிக்கும் ஆயனானார்.
ரெகுவேல் தன் மகள் சிப்போராளை மோசேவுக்கு மணமுடித்து வைத்தார். இருவருக்கும் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது கெர்ஷோம் எனப் பெயரிட்டனர்.

பாரோ இறந்தான்
இதே நேரத்தில் எகிப்தில், மோசேவை கொல்ல நினைத்திருந்த பாரோ இறந்து போயிருந்தான். புதிய பாரோவின் ஆட்சியிலும் எபிரேயர்களுக்கு பழைய கொடுமைகள் நடந்துகொண்டிதானிருந்தன.

வேண்டுதல் கேட்கப்பட்டது

தம் மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு கடவுள் மனமிரங்கினார்…
மோசே, மாமன் ரெகுவேலின் ஊரில் ஒரு ஆயனாக மாறி வருடங்கள் பல போனது.

கடவுள் பேசினார்

ஒருநாள் ஆடு மேய்க்கையில் மலைமீது ஒரு பசுமையான புதரில் தீ எரிந்துகொண்டிருந்ததை கண்டார். தொடர்ந்து எரிந்தும் புதர் சாம்பலாகாமல் இன்னும் எரிந்துகொண்டிருந்தது.
மோசே அதை ஆராயும்படி மலையேறினார். புதருக்கு அருகில் போகும்போது ஒரு குரல் கேட்டது,”மோசே உன் காலணிகளை கழற்றிவிட்டு வா”. பயந்தபடியே மோசே தன் செருப்புக்களை கழற்றிவிட்டு புதரின் அருகே சென்றார்.
மீண்டும் அந்தக் குரல் பேசியது,”மோசே, உன் முன்னோர்களின் கடவுள் நானே. எகிப்தில் என் மக்கள் படும் வேதனைகளை களைய நீ சென்று அவர்களை அழைத்து வந்து இந்த மலையில் என்னை வழிபடு” என்றது.

மோசேவின் தயக்கம்

மோசே இந்த பெரும் பொறுப்பை ஏற்க தயங்கினார். “நானா? நான் எப்படி பாரோவின் முன்னால்… இஸ்ரவேல் இனத்தையே வழிநடத்த என்னால் முடியுமா?” என்றார்.
கடவுள்,”நான் உன்னோடிருக்கிறேன்” என்றார்.

மோசே இன்னும் நம்பிக்கையில்லாதிருந்தார். “எனக்கு சரியாக பேச வராதே?” என்றார். கடவுள்,”ஆரோன் உன்னைக் காண வந்து கொண்டிருக்கிறான் அவன் உனக்குப்பதிலாக பேசுவான்” என்றார்.

நம்பிக்கை வந்தது

இன்னும் மோசேவுக்கு நம்பிக்கை வராததால் கடவுள் மோசே வைத்திருந்த ஆடு மேய்க்கும் தடியை கீழே போடச் சொன்னார். அது உடனே பாம்பாய் மாறியது. மோயீசன் பயந்து போனார். “உன் கையை உன் கச்சையினுள் விட்டு எடு” என்றார் கடவுள் மோசே கையை ஆடைக்குள் விட்டு எடுக்கையில் அவர் கை தொழு நோய் பிடித்திருந்தது. மீண்டும் அவ்வாறு செய்கையில் பழையபடி குணமுற்றிருந்தது.
“எகிப்திலிருந்து இஸ்ரவேல‌ர்களை விடுவிக்கும்படிக்கு அவர்களுக்கு சில அடையாளங்களை காண்பிப்பேன்.” என்றார் கடவுள்.

ஆரோனோடு எகிப்து நோக்கி பயனம்

மோசே தன் மக்களை மீட்க தன் மாமனார் ரெகுவேலிடம் விடைபெற்றுக்கொண்டு எகிப்து நோக்கி பயணித்தார். வழியில் ஆரோன் அவரை சந்தித்தார்.
இருவரும் எகிப்தை அடைந்து அங்குள்ள எபிரேய தலைவர்களை அழைத்து பேசி கடவுளின் மீட்புத் திட்டத்தை அறிவித்தனர். எபிரேயர் கடவுளைப் புகழ்ந்து மகிழ்ந்தனர்.

Post a Comment

0 Comments