Header Ads Widget

Responsive Advertisement

14.பல்வேறு சோதனைகளும் தொடங்கிய பயனமும்


பாரோவின் அவையில் மோசே
மோசேவும் ஆரோனும் பாரோவிடம் சென்று எபிரேயர்கள் தங்கள் கடவுளை வணங்க மூன்று நாட்கள் அவர்களை விடுவித்துவிடக் கேட்டனர். பாரோ,”நீங்கள் சொல்லும் இந்தக் கடவுளை எனக்குத் தெரியாது” எனக் கூறினான்

வேலையை அதிகரித்தல்
மேலும் எபிரேயர்களின் வேலைச் சுமையை அதிகரித்து அவர்களை மேலும் கொடுமை படுத்தினான். எபிரேயர்களுக்கு செங்கல் செய்ய கொடுக்கப்படும் நார்கீற்றுக்களை அவர்களே சேகரித்து செங்கல் செய்யச் சொல்லப்பட்டது. செங்கலின் அளவும் குறையக்கூடாது என்றும் கட்டளையிட்டான்.

மோசே மீது கோபம்
அடிமைகளான எபிரேயர்களுக்கு வேலைப் பழுவும் கொடுமையும் அதிகரித்தது. அவர்கள் மோசேவின் மேல் கோபம் கொள்ளத்துவங்கினர்.


மோசே செய்த அடையாளங்கள்

கடவுள் மோயீசனை திரும்ப பாரோவிடம் போய் தான் காண்பித்த அடையாளங்களை காண்பிக்கச் சொன்னார். பாரோவிடம் ஆரோனும் மோசே செல்ல அவன்,” நீங்கள் கடவுளிடமிருந்து வருகிறீர்களென்பதற்கு என்ன ஆதாரம்?” என்றான். ஆரோன் தன் கைத்தடியை கீழே போட அது பாம்பாகியது. பாரோ தன் அவையிலிருந்த மந்திரவாதம் மற்றும் மாயங்கள் செய்பவர்களை அழைத்தான் அவர்களும் தங்கள் தடிகளை பாம்பாக மாற்றிக் காட்டினர். ஆரோனின் பாம்பு எகிப்தியரின் பாம்பை விழுங்கியது. பாரோ இதனாலும் மனம் மாறவில்லை.

மனமாறாத பாரோ
அடுத்தநாள் நைல் நதிக்கரையில் பாரோவை சந்தித்தனர். ஆரோன் தன் கைத்தடியை நைல்மீது நீட்ட நைல் நதியில் நீர் இரத்தமாக மாறியது. எகிப்திலிருந்த அத்தனை நீரும் இரத்தமாய் மாறியது. தன் மந்திரக்காரர்களும் நீரை இரத்தமாக மாற்றியதைக் கண்ட பாரோ எபிரேயர்களை அனுப்ப மறுத்தான்.

வாக்கு மறந்த பாரோ

இன்னுமொரு வாரம் கழித்து பார்ரோவிடம் சென்றனர். இம்முறை ஆரோன் தன் கைத்தடியை நீட்ட ஆயிரக்கணக்கில் தவளைகள் எகிப்தில் புகுந்தன.எங்கு பார்த்தாலும் தவளைகள், அரண்மனை முதல் அடுப்படி வரை. பாரோவின் ஆட்களாலும் இதேபோல் தவளைகளை வரவழைக்க முடிந்தது. பாரோ எரிச்சலடைந்து மோயீசனிடம் “நாளைக்கே இந்த தவளைகளை அழித்தால் உன் மக்களை வழிபாட்டுக்கு அழைத்துச் செல்லலாம்” என்றான். அதுபோல அடுத்தநாள் எல்லா தவளைகளும், நதிகளில் வாழ்பவை தவிர, இறந்தன. பாரோ தன் வாக்கை மறந்து எபிரேயர்களை அனுப்ப மறுத்தான்.

ஆரோன் செய்த அடையாளம்

மீண்டும் ஆரோன் தடியை நீட்ட சிறு பூச்சிகள் எகிப்தை ஆட்கொண்டன. இதை பாரோவின் ஆட்களால் செய்யமுடியவில்லை ‘இது கடவுளின் செயல்தான்’ என்றனர். இருப்பினும் பாரோ மனம் மாறவில்லை.எபிரேயர்கள் வசித்துவந்த நகரில் மட்டும் எந்த பாதிப்புமில்லை.

மீண்டும் மறுப்பு

“உன் மக்களை உங்கள் நகரத்திலேயே கடவுளுக்கு பலி செய்யச் சொல்” என்றான் பாரோ. எபிரேயர்கள் ஆட்டை பலி கொடுப்பது வழக்கம், எகிப்தியர்களோ ஆடு மாட்டை புனிதமாக கருதினர். “நாங்கள் ஆட்டை பலியிட்டால் எகிப்தியர்கள் கோபத்திற்கு ஆளாவோம் எனவே காட்டுக்குள் சென்று பலியிட வேண்டியுள்ளது” என்றார் மோசே.மீண்டும் சரி என்று சொல்லி பூச்சிகள் போனதும் எபிரேயர்களை அனுப்ப மறுத்தான் பாரோ.

அடுத்த அடையாளமாக எகிப்தியரின் கால்நடைகள் அனைத்தும் கொல்லப்பட்டன, எபிரேயர்களுக்கோ ஒன்றுமாகவில்லை.

கொப்பள‌ங்கள் வெட்டுக்கிளிகள்

அடுத்து வலிகொடுக்கும் கொப்பளங்கள் எகிப்தியருக்கு வந்தன. அதன்பின் பனிக் கட்டிகள் விழும் கொடுமையான ஆலங்கட்டி மழை பெய்தது. பாரோ மோசேயிடம்,”ஆண்களை மட்டும் அழைத்துச் செல்” என்றான் மோசே,”எல்லோரும் எல்லாமும்” என்றார்.பெரும் வெட்டுக்கிளிகளின் கூட்டம் வந்து எகிப்திலுள்ள பயிர்களை அழித்தது. இன்னும் பாரோ மனமிரங்கவில்லை.”இனிமேல் என்னை வந்து பார்க்கதே” என்று மோசேவை கடிந்த்தான்.

மனமிறங்காத பாரோ

மோசேவும்,”நான் வந்து உம்மை இனி பார்க்கப்போவதில்லை ஆனால் கடவுள் எகிப்தியருக்கு இன்னொரு கொடுமையை நிகழ்த்துவார். அப்போது என் மக்களை அழைத்துச் செல்லுமாறு என்னை கெஞ்சுவீர்கள்” என்றார்.சோதனை மேல் சோதனை வந்தும் பாரோ மனமிரங்கவில்லை. எபிரேயர்களை விடுவித்துவிட மறுத்தான்.

கடவுளின் நிறைவான ஆயுதம்
கடவுள் மோசேவிடம்,”உன் மக்களை எகிப்திலிருந்து விடுவித்துச் செல்லும் காலம் வந்துவிட்டது. பாரோவின் மனம் திருந்தும்படிக்கும், கடவுள் இஸ்ரவேலுடன் இருக்கிறார் என்பதை காண்பிக்கவும் இறுதியாய் ஒரு கொடுமை எகிப்தியருக்குச் செய்யப்படும். அந்த நாளில் எபிரேயர்கள் எகிப்தைவிட்டு வெளியேற தயாராயிருக்கவேண்டும்.

பஸ்கா பண்டிகையின் தொடக்கம்

அழிக்கும் தூதன் ஒருவன் இரவில் வந்து எகிப்தியரின் முதல் ஆண் குழந்தைகளைக் கொன்று போடுவான். எபிரேயர்கள் ஒரு வயது நிரம்பிய அப்பழுக்கில்லாத ஆட்டுக்குட்டி ஒன்றை பலி செய்து அதன் இரத்ததை தங்கள் கதவுகளில் பூசி வைப்பார்களாக. இரத்தம் பூசப்பட்ட வீடுகளை அழிக்கும் தூதுவன் கடந்து போவான்.சுட்ட ஆட்டிறைச்சியோடு கசக்கும் கீரையும் புளிக்காத அப்பத்தையும் உண்ணுங்கள். தூதுவன் உங்கள் வீட்டைக் கடந்ததும் பயணிக்கத் தயாராயிருங்கள். எகிப்தியரிடம் ஆடை அணிகலன்களையும் போர்வைகளையும் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். இதை அவர்கள் உங்களுக்குத் தரச் செய்வேன்.” என்றார்.

மோசே இதை எபிரேயர்களுக்குச் சொல்ல அவர்களும் சொன்னது போல செய்தனர்.

மனமிறங்கினான் பாரோ

அன்றிரவு அழிக்கும் தூதுவன் வந்து பாரோ முதல் எகிப்தியரின் கடைசி அடிமை வரையிலான வீடுகளில் உள்ள அனைத்து முதல் ஆண் பிள்ளையையும் கொன்று போட்டான்.எகிப்தில் என்றுமே இல்லாதபடி ஓலம் கேட்டது. பாரோ மனம் தளர்ந்தான். எபிரேயர்களை அவர்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்படச்சொல்லி மோசேவுக்கு செய்தி அனுப்பினான்.

பயனம் தொடங்கியது
மொத்தம் ஆரு லட்சம் ஆண்களும் அவர்களது குடும்பமும் உடமைகளும் கால்நடகளும் எகிப்தைவிட்டு பயணித்தனர்.

Post a Comment

0 Comments