Header Ads Widget

Responsive Advertisement

15.கானானை நோக்கிப் பயனம்


எகிப்திலிருந்து எபிரேயர் கிளம்பி மொசேவை பின்தொடர்ந்தனர். கானான் நாட்டை கடவுள் அவர்களுக்கு வாக்களித்திருந்தார்.

யோசேப்பின் சவப்பெட்டி
யோசேப்பின் சவப்பெட்டியை யோசேப் விரும்பியபடி எபிரேயர்கள் எடுத்துச்சென்றனர். யோசேப்பு தன் சவப் பெட்டி கடவுள் வாக்களித்த நாட்டில் புதைக்கப்படும்படி எபிரேயர்கள் எகிப்தை விட்டுப் போகும்போது எடுத்துச்செல்லப்படவேண்டும் என கேட்டிருந்தான்.

கட‌வுளின் வழிகாட்டுதல்

எபிரேயர்களின் பயணத்தில் கடவுள் பகலில் மேகத்தூணாகவும் இரவில் ஒளிதரும் நெருப்புத்தூணாகவும் நின்று வழிகாட்டினார். எபிரேயர்கள் செங்கடலை அடைந்து ஓய்வுக்காக அங்கே தங்கினர்.

பாரோவின் கோபம்
எகிப்தில் பாரோ எபிரேயர்கள் வழிபாடு முடிந்து திரும்புவார்கள் என நினைத்திருந்தான். எபிரேயர்கள் திரும்பப்போவதில்லை என அறிந்து தன் படைகளைத் திரட்டி எபிரேயர்களை பின்தொடர்ந்தான்.செங்கடல் பகுதியிலிருந்து பயணம் மீண்டும் புறப்பட்டது.

மாராவின் கசப்பை மாற்றுதல்
இப்போது ஒரு பாலை வழியே நடக்க நேர்ந்தது, நீரின்றி தவித்த மக்கள் மோசேவிடம் குறை கூறினர்.
விரைவில் ஒரு நீரூற்றை கண்டனர் ஆனால் அதிலிருந்த நீர் கசந்தது. மோசே கடவுளிடம் முறையிட அவர் ஒரு மரத்தைக் காட்டி,”அந்த மரத்தை வெட்டி இந்த ஊற்றில் போடுங்கள்” என்றார். மரத்தை நீரில் போட்டதும் நீர் சுவைத்தது. எல்லோரும், கால்நடைகளும் தாகம் தணித்தனர்.

மண்ணாவும் காடைகளும்

பின்னர் ஏலிம் எனும் பாலைவனச் சோலை பகுதிக்கு வந்து முகாமிட்டனர். கடவுளின் மேகத்தூண் எலிமைக் கடந்து சென்றது எபிரேயர்களும் பின் தொடர்ந்தனர். இப்போது பயணம் கடினமான வறண்ட வனங்களுக்குள்ளாய் சென்றது. மக்கள் உணவின்றி வாடினர் மோசேயிடம் மீண்டும் முறையிட்டார்கள்.கடவுள் மோசேயிடம், “கடவுள்தான் இவர்களை எகிப்திலிருந்து விடுவித்து அழைத்து வந்தார் எனக் காட்டும்படிக்கு இவர்களுக்கு வானிலிருந்து உணவு அளிப்பேன். அவரவர் தங்கள் தேவைக்கேற்ப இந்த உணவை எடுத்துக்கொள்ளட்டும். தேவைக்கதிகம் எடுக்க வேண்டாம், ஆறாம் நாள் மட்டும் இரண்டு மடங்கு சேகரிக்கட்டும், ஏனெனில் ஓய்வு நாளான ஏழாம் நாள் உணவு வழங்கப்படாது”. என்றார். கடவுள் வாக்களித்தது போல அடுத்த நாள் காலை வானிலிருந்து மாவு போன்ற ஒன்று பூமியில் விழுந்து கிடந்தது. காடை போன்ற ஒரு பறவையும் இவர்கள் உண்ணக்கிடைத்தது. மக்கள் மாவை வைத்து ரொட்டி செய்து உண்டனர். இந்த உணவுக்கு மன்னா எனப் பெயரிட்டனர்.எபிரேயர் கானானை அடையும் வரை இந்த உணவு வானிலிருந்து வழங்கப்பட்டது

தாகமும் பாலைவனத்தில் நீரோடையும்

ரெவிதீம் என்னும் இடம் வந்ததும் முன்சென்ற மேகம் நின்றது. எபிரேயர் கூடாரமிட்டு, தங்கி ஓய்வெடுப்பதற்கான அடையாளம் அது. ரெவிதீமிலே காலம் செல்லச் செல்ல எபிரேயர் தண்ணீரின்றி தவிக்கத் துவங்கினர், மோசேவினிடத்தில் முறையிட்டனர்.மோசே கடவுளிடம்,” இதோ இவர்கள் என்னை கல்லால் அடித்து கொன்று போடுவார்கள் போலுள்ளது. இவர்களின் தாகம் தீர என்ன செய்ய வேண்டும்?” என்றார். கடவுள் மோசேவிடம், ” நீ ஓரேப் மலைக்குச் சென்று அங்குள்ள பாறை ஒன்றில் உன் கைத்தடியால் தட்டு” என்றார்.
மோசேவும் பாறை ஒன்றின் மேல் தட்ட அருவிபோல நீர் பாய்ந்தது.

எபிரேயர் பாலைவனத்தில் குளிர் நீர் அருந்தி தாகம் தணிந்தனர்.

செங்கடல் பிள‌ந்த்தது

எகிப்திய படைகள் தங்களை நோக்கி வருவததைக்கண்ட எபிரேயர்கள் மோசேவை பழிக்க ஆரம்பித்தனர். “எங்களை கொல்வதற்கா அழைத்து வந்தீர்” என்றனர்.கடவுள் மேகத்தூணாகவும் நெருப்புத் தூணாகவும் எகிப்திய படைகளுக்கு முன் நின்று தாக்குதலை தடுத்தார்.

பின்பு மோசேவை நோக்கி,”உன் ஊன்றுகோலை செங்கடல் மேல் நீட்டு” என்றார். மோசேவும் தன் ஊன்றுகோலை நீட்டினார் பலத்த காற்று வீசி செங்கடலை பிரித்தது. நிலம் தெரிந்தது. எபிரேயர் அதன் வழி பயணித்து செங்கடலைக் கடந்தனர்.

எகிப்திய படைகள் அழிந்தன‌
எகிப்திய படைகளும் அவர்களை கடலுக்குள் பின் தொடர்ந்தனர். மீண்டும் மோசே ஊன்று கோலை செங்கடல் மீது நீட்ட கடல் நீர் எகிப்திய படைகளை சூழ்ந்து அழித்தது.

பாட்டுப்பாடி ஆராதனை
மோசே கடவுளைப் புகழ்ந்து ஒரு பாட்டை எழுத எபிரேயர்கள் அதை பாடி மகிழ்ந்தனர். கடவுள் தங்களுக்குச் செய்ததை எண்ணி அவருக்கு அடிபணிந்தனர்.

Post a Comment

0 Comments