மோசேவுக்கு தரிசனம்
இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். சீனாய் மலை மலையருகே அவர்கள் வரும்போது கடவுள் மோசேவுக்கு தரிசனமாகி நான் கற்பிக்கும் வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் கடைபிடித்தால் நீங்கள் மற்றவர்களை விட நன்மையான ஈவுகளை புசிப்பார்கள். இரண்டு நாள் அவர்கள் பரிசுத்தப்படுத்து மூன்றாம் நாள் நாள் என் விரலால் எழுதிய கட்டளைகளை உங்களுக்கு தருகிறேன் என்று சொன்னார்.இஸ்ரவேலர்களும் அவ்வாறே பரிசுத்தப்படுத்திக்கொண்டார்கள் மூன்றாம் நாள் கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினார், அப்பொழுது அப்பகுதி முழுவதும் புகைக்காடாய் இருந்தது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது.
பத்துக்கட்டளைகள்
*என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்*மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்
*ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக
*உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
*கொலை செய்யாதிருப்பாயாக
*விபசாரம் செய்யாதிருப்பாயாக
*களவு செய்யாதிருப்பாயாக
*பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக
ஆசரிப்பு கூடார உத்தரவு
மேலும் யூதாவின் கோத்திரத்தில் ஊரியின் குமாரன் பெசலெயேலிக்கு நான் மரம் உலோலம் தொடர்பான வேலைகளை செய்யும் அறிவை வழங்கியிருக்கிறேன். அவனோடு தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபை துனையாகக்கொண்டு எனக்கு ஒரு அழகான ஆசரிப்புக்கூடாரத்தை கட்டுவாயாக என்றும் சொன்னார்
இஸ்ரவேல் மக்களின் குருட்டாடம்
மோசே வருவதற்கு தாமதம் ஆனதால் இஸ்ரவேல் மக்கள் ஆரோனை அழைத்து மோசே இறந்து விட்டான் போலிருக்கிறது எனவே நாங்கள் வணங்க ஒரு தெய்வம் வேண்டும் என்றனர் உடனே ஆரோனும் இஸ்ரவேல் பெண்களின் ஆபரனங்களை வாங்கி உருக்கி ஒரு பசு மாட்டு சிலை செய்து கொடுத்தான்
மோசேவின் பரிந்து பேசுதலும் மன்னிப்பும்
இஸ்ரவேல் மக்களும் புதிய தெய்வத்திற்கு பலி செலுத்தி உண்டுகளித்து நடனமாடிக்கொண்டிருந்தனர் அப்போது மோசே மலையிலிருந்து கீழே இறங்கி வந்தான் மக்கள் செய்வதைக் கண்டதும் மணம் வருந்தினான், மேலும் கடவுள் தன் விரலால் எழுதிக்கொடுத்த கற்பலகைகளை போட்டு உடைத்தான், அப்போது கடவுள் மோசேவை அழைத்து இம் மக்களை கொன்றுபோட்டு விட்டு உன்னை ஒரு பெரிய ஜாதி யாக்கிவிடுவேன். என்றுசொன்னார், மோசே வருந்தி கேட்டுக்கொண்டதாலும் ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் ஆகியோருக்கு கொடுத்த ஆசீர்வாததின் நிமித்தம் நான் இவர்களை மன்னிக்கிறேன் என்று சொன்னார்
ஆசரிப்பு கூடாரம் கட்டுதல்
0 Comments