Header Ads Widget

Responsive Advertisement

17.கானானைக் கானுதலும் மக்களின் அவநம்பிக்கையும்


கானான் தேசத்தை இஸ்ரவேலர்கள் கானச்செல்லுதல்
மோசே கானான் நாட்டைச் சுற்றிப்பார்ப்பதற்கு இஸ்ரவேல் மக்களில் பன்னிரன்டு கோத்திரத்தாருக்கு ஒருவர் வீதம் பன்னிரன்டு பேரை பாரான் வனாந்தரத்தலிருந்துஅனுப்பினான்

கானானின் வளம்
அவ‌ர்கள் சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து, தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள், மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்

கண்டதைச் சொல்லுதல்
அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, அனைவருக்கும் செய்தியை அறிவித்தார்கள் மேலும் கானான் நாட்டின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். மேலும் அவர்கள் அது பாலும் தேனும் ஓடுகிற நாடுதான் என்று சொன்னார்கள்.

கடவுள் மேல் நம்பிக்கை வைக்காமல் போதல்
ஆனாலும், அந்த நாட்டிலே குடியிருக்கிற மக்கள் பலசாலிகள். நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த நாடு நம் குடிகளைப் பட்சிக்கிற நாடு. நாங்கள் அங்கே கண்ட மக்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதன் ஒருவனும் இருந்தான் என்றார்கள். என்று தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த கானானைக்குறித்து துர்ச்செய்தி பரப்பச்செய்தார்கள்.

இஸ்ரவெலரின் புலம்பல்
அப்பொழுது மக்கள் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; அவர்கள் அன்று இரவு முழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். மக்கள் அவர்களை நோக்கி, எகிப்திலே செத்துப்போயிருந்தால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்களும் பிள்ளைகளையும் கொள்ளையாகும்படிக்கும், கடவுள் எங்களை இந்த நாட்டுக்குக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றர்கள். பின்பு அவர்கள், நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

யோசுவாவின் நம்பிக்கை

அப்போது சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,. இஸ்ரவேல் மக்களை நோக்கி, நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த நாடு மிகவும் சிறப்பானது. கடவுள் நம்மேல் பிரியமாயிருந்தால், நம்மை அங்கே கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்த நாட்டை நமக்குக் கொடுப்பார்.கடவுளுக்கு விரோதமாய் கலகம்பபண்ணாதிருங்கள்; அந்த நாட்டு மக்களை குறித்து நீங்கள் பயப்படவேண்டியதில்லை, அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகிப்போயிற்று; கடவுள் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள். அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று இஸ்ரவேலர்கள் எல்லாரும் சொன்னார்கள்.

அற்புதங்களைப் பார்த்தும் நம்பிக்கை வைகாததால் தன்டனை
உடனே கடவுளின் மகிமை ஆசரிப்புக்கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது. அப்போது கடவுள் மோசேவை அழைத்து இம்மக்கள் நான் செய்த ஏராளமான அற்புதங்களைப் பார்த்தும் என் மேல் நம்பிக்கை வைக்கவில்லை ஆகவே உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரும் கானான் நாட்டிற்கு செல்லும்முன் இந்த வனாந்தரத்தில் இறந்துவிடுவார்கள் என்று சொன்னார்

பாம்புகள் படை

ஒருசமயம் இஸ்ரவேல் மக்கள் இருக்கும் இடங்களுக்கு பாம்புகள் வந்தன, அவைகள் பலரை கடித்தன, அதில் சிலர் இறந்தனர். இதனால் அவர்கள் கலக்கமடைந்து மோசேவிடம் கூறினர். மோசே கடவுளிடத்தில் முறையிட்டார், கடவுள் மோசேயிடம் பாம்பைப்போல் ஒரு உருவம் செய்து அதை பாம்புகள் கடித்தவர்களை பார்க்கச்செய்; அப்போது அவர்கள் குணமடைவார்கள் என்று சொன்னார். மோசேவும் அப்படியே செய்தான் பாம்பு கடி பட்டவர்கள் குணமடைந்தார்கள்.

இஸ்ரவேல் மக்கள் கடவுள் மேல் நம்பிக்கை வைக்காவிட்டாலும் கடவுள் அவர்களுக்கு அற்புதங்கள் செய்துகொண்டேதான் இருந்தார்.

Post a Comment

0 Comments