Header Ads Widget

Responsive Advertisement

25.தைவிஸ் செல்வந்தனும் லாசரசும்


தைவிஸ் செல்வந்தனும் லாசரசும்

இது லூக்கா நற்செய்தியில் (16:19-31) குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெருஞ்செல்வந்தன் என்பதற்கான இலத்தீன் மொழிப்பதமான “Dives” என்பதன் நேரடி எழுத்துப் பெயர்ப்பாகும்.


(இயேசு மரணத்திலிருந்து உயிர்ப்பித்த‌ லாசரசும் இக்கதையில் வரும் லாசரசும் ஒருவரல்ல)

உவமை
செல்வர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் தைவிஸ் ஆகும். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். லாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் உணவுத் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். கடைசி நாள் வரை அந்த செல்வந்தன் லாசருவுக்கு உதவி செய்யவில்லை. கடைசியில் ஒருநாள் அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் ஒருநாள் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவரோ நரகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலைவில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.
அவர், “தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும். லாசர் தமது விரல் நுனியை நீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் வெந்து, வறண்டு நான் மிகுந்த வேதனையை அடைகிறேன்” என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், “மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய் அதே வேளையில் வேதனைப்படுபவனை உன் கண்கள் பார்க்கவில்லை. ஆனால் லாசர் உன் வாசலன்டையே வாழ்ந்தாலும் இன்னல்களையே அடைந்தார், அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார், நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும், கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது” என்றார்.
அதற்கு செல்வந்தன், “அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே” என்றார். அதற்கு ஆபிரகாம், “மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. இறைவாக்கினருக்கு அவர்கள் செவிசாய்க்கட்டும்” என்றார். செல்வந்தரோ, “அப்படியல்ல! தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்” என்றார். ஆபிரகாம் அவருக்கு மறுமொழியாக, “அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்” என்றார்.

கருத்து
த‌ம‌க்கு அருள‌ப்ப‌ட்ட‌ தால‌ந்த்துக‌ளை பிற‌ருக்கு ப‌ய‌ன்ப‌டும் வ‌கையில் அதை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்

Post a Comment

0 Comments