Header Ads Widget

Responsive Advertisement

26.நேர்மையற்ற பணியாளின் கதி


நேர்மையற்ற பணியாளின் கதி

இது மாற்கு 13:34-37, மத்தேயு 24:42-51, லூக்கா 12:35-40 இல் வாசிக்கலாம்.


ஒருவர் நெடு பயணம் ஒன்று செல்லும் போது தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறப் பணியாள் ஒருவரை அமர்த்திச் சென்றார். தலைவர் திரும்பி வரும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அறிவாளியாவான். அவன் பேறு பெற்றவன். ஏனெனில் தலைவர் அவனை தம் சொத்துக்கெல்லாம் அதிகாரியாக பணிப்பார்.
அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத்தன் உள்ளத்தில் எண்ணி தன் உடன் பணியாளரை அடிக்கவும் குடிகாரருடன் உண்ணவும் குடிக்கவும் தொடங்குவான். அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வருவார். அவர் அவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி வெளி வேடக்காரருக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.


பொருள்

இவ்வுவமை இயேசுவின் இரண்டாவது வருகயை குறிக்கிறது. இயேசு கிறிஸ்த்து கூறியவற்றை அவர் திரும்ப வரும் போது கடைபிடித்துக்கொண்டிருபோரே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பார்கள்.ஆகவே மனித குமாரன் வரும் நேரத்தை அறியாத படியால் விழித்திருங்கள்

Post a Comment

0 Comments