Header Ads Widget

Responsive Advertisement

27.கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும்


கிழிந்த ஆடையும் பழந்துருத்தியும்
இது லூக்கா 5:36-40, மத்தேயு 11:17, மாற்கு 2:18-22 இல் காணப்படுகிறது. இது இயேசுவின் சீடர் ஏன் நோன்பிருப்பதில்லை எனக்கேட்டபோது இயேசு அதனை நியாப்படுத்தி சொன்ன உவமையாகும். இது கதை வடிவில் இல்லாமல் உறைநடைவடிவில் அமைந்த உவமையாகும்.

உவமை
எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும் புதிய துண்டும் பழையதோடு பொருந்தாது.

அதுபோலபப் பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை ஊற்றி வைத்தால் புதிய மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும். மதுவும் சிந்திப் போகும். தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார் ஏனெனில் பழையதே நல்லது என்றார்.
பொருள்:
பழையவை புதியவற்றுடன் சேரமுடியாது என்பது இதன் கருத்தாகும் அதாவது ம‌ன‌ம் திரும்புவ‌த‌ற்கு முன் க‌டைபிடித்த‌ ச‌ட‌ங்குக‌ளை ம‌ன‌ம் திரும்பிய‌ பின் கைவிட‌ வேண்டும்.

Post a Comment

0 Comments