Header Ads Widget

Responsive Advertisement

28.திராட்சை செடி


திராட்சை செடி

இது யோவான் 15:1-6 இல் காணப்படுகிறது. இது கதை வடிவில் அமையவில்லை மாறாக இயேசு கிறிஸ்த்து தன்னை திராட்சை செடிக்கும் தம் பிதாவை தோட்டக்காரருக்கும் ஒப்பிட்டு பேசுகிறார்.


உவமை

நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.

பொருள்:

நாம் கிறிஸ்த்துவுக்குள் நிலைத்திருந்தால் ந‌ன்மையான‌ ஈவுக‌ளைத்த‌ருவோம் என்ப‌தாகும்

Post a Comment

0 Comments