Header Ads Widget

Responsive Advertisement

தேவ தூதர்களும், பிசாசும்
அன்பானவர்களே சென்ற பதிவில் நாம் பரலோகம் எங்கிருக்கிறது என்பது பற்றி அறிவியல் பூர்வமாகவும், வேத அடிப்படையிலும் அறிந்து கொண்டோம் மேலும், சங்கீதம் 48.2 ஐ வாசித்துப்பாருங்கள், ஆக வ‌டதிசையில் உள்ள மிகவும் பிரமாண்டமாக, அமைந்திருக்கும் நம்முடைய பால்வெளி மண்டலம் உட்பட‌ ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் சுற்றிவரும் பிரகாசமான பகுதியே கடவுளின் இருப்பிடம் என்பது தெளிவாக விளங்குகிறது அல்லவா?

தேவதூதர்கள்
நம்மைப் போலவே மற்ற நட்சதிரங்களிலும் தேவபுத்திரர்கள் இருக்கிறார்கள் என்று நாம் ஏற்கெவே பார்த்தோம், அவர்கள் முற்காலத்தில் நம்முடைய பூமிக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள், இதை ஆதியாகமம் 6ம் அதிகாரம் 1 முதல் 4 வரை வாசித்துப் பாருங்கள், வேற்றுகிரக வாசிகள் பூமியிலுள்ள பெண்களோடு கூடினார்கள் இதனால் இராட்சர்கள் என்று சொல்லப்படுகின்ற பலவான்கள் பிறந்ததாக்வும் குறிப்பிடப்பட்டுள்ளது, இங்கே நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், தேவகுமாரர், என்று அழைப்படுவது குறித்து நாம் குழப்பமடைய வேண்டியதில்லை, இங்கு தேவகுமாரர் என்று சொல்லப்படுவது, தேவனால் உருவாக்கப்பட்டவர்கள் என்று பொருள் கொள்ளவேண்டும்,

அப்படியானல் இப்போதெல்லாம் தேவகுமாரர்கள் பூமிக்கு வருவதில்லையா? என்று நீங்கள் நினைக்க வேண்டாம் வருகிறார்கள், வந்துகொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் மாம்ச கண்களுக்குத் தெரியாத படி தேவன் நம் கண்களைக் குருடாக்கி விட்டார், ஆனால் வேதம் எங்கும் தேவ குமாரர்கள் வந்து மனிதர்களுக்கு உதவியதாக சொல்லப்பட்டிருக்கிறது (மரியாளுக்கு நற்செய்தி சொன்ன கேபிரியேல்,) (பேதுருவை சிறையிலிருந்து தப்புவிக்க உதவிய ஒரு தூதன்) இன்னும் பல சம்பவங்களை நாம் சொல்லலாம். இவர்களை தேவ தூதர்கள் என்றும் அழைக்கலாம்,

தேவ தூதர்களின் வகைகள்
தேவ தூதர்களும் நம்மைப் போலவே தேவனை மகிமைபடுத்தவும், போற்றிப்பாடவும் படைக்கப்பட்டவர்களே, இவர்கள் பலவகைக் கூட்டம் உண்டு, கேருபீன்கள், சேராபீன்கள் போன்றவை அவற்றுள் சில, இந்த தூதர் குழுக்களுக்கு சில தலைவர்கள் இருக்கிறார்கள். அவற்றுள் பிரதான தூதனாகிய மிகாவேல், செய்தி கொண்டுபோகும் காபிரியேல், ஆங்கில வேதாகமத்தில் சொல்லப்பட்ட லூசிபர் (தமிழில் அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி என்று சொல்லப்பட்டவன் ஏசாயா 14)

பிசாசு யார்?
இதில் லூசிபர் என்பவனைக் குறித்து எசேக்கியேல் 28;12,13,14 ஆகிய வசனங்களில் வர்னிக்கப்பட்டுள்ளது, அதில் அவன் எவ்வளவு அழகானவன் என எழுதப்பட்டுள்ளது, விசித்திரமாய் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், ஞானத்தால் நிறைந்தவன், ப்த்மராகம், புஷ்பராகம், போன்ற ஒன்பது வகைக் கல்லும், பொன்னும் இவன் உடலை மூடிக்கொன்டிருந்தது, என சொல்லப்பட்டிருக்கிறது அப்படியானால் எவ்வளவு அழகாக இருந்திருப்பான் பாருங்கள், மேலும் சகலவிதமான இசைக்கருவிகளும் அவன் சிருஷ்டிப்பின் போதே அவன் செட்டைகளில் (சிறகுகளில்) இருந்தது என்று சொல்லபடுகிறது மேலும் அவன் த செட்டைகளை அடித்தாலே அழகான இன்னிசை பிறக்கும் என்றும் வேத பண்டிதர்கள் சொல்லுகிறார்கள்,

இப்படிப்பட்ட அழகான ஒருவன், தன்னை உருவாக்கியவருக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொள்ள‌ வேண்டும் என்று நினைத்தான், அவன் அப்படி நினைத்த மாத்திரத்திலேயே பூமியில் விழுந்து விட்டான், ஏசாயா 14ம் அதிகாரத்தை வாசித்துப்பாருங்கள், நான் வானத்துக்கு ஏறுவேன், (முதல் வாணம்), நட்சத்திரத்திற்கு மேலாக (இரண்டாம் வாணம்) வட புறங்களில் உள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதங்களில் வீற்றிருப்பேன் என்று சொல்லி நினைத்தான் (இவனும் மூன்று வானத்தை உறுதி செய்கிறான் பாருங்கள்) அப்படி அவன் நினைக்கும் போது தன்னுடைய இடத்தை விட்டு தானாகவே கீழே இருக்கும் பூமியில் விழும்படி கடவுள் அவனைத் தள்ளிவிட்டார்,

அப்படி பூமியில் விழுந்ததால் பூமி என்ன ஆனது என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? தற்காலத்தில் மனிதனால் கண்டறியப்பட்டுள்ள‌ பல அறிவியல் பூர்வமான உண்மைகள் இங்குதான் பைபிளில் புதைக்கப்பட்டுள்ளது, அடுத்த பதிவில் இதை நாம் அறிந்து கொள்ளலாம் காத்திருங்கள்.........


Post a Comment

0 Comments