Header Ads Widget

Responsive Advertisement

பைபிளின் மூன்றாம் நாளும் அறிவியலும்


அன்பானவர்களே, இன்று நாம் மிக முக்கியமான படைப்பின் நாளைக்குறித்து தியானிப்போம், ஆம் இன்று பைபிள் சொல்லும் படைப்பின் மூன்றாம் நாளைக் குறித்து அறிவியல் ஆதாரங்களோடு தியானிப்போம், இது ஆதியாகம் 1:9-13ல் இது குறிப்பிடப்பட்டுள்ளது

மூன்றாம் நாளில் தேவன் பூமியில் அதாவது தரையில் உள்ள நீரை ஓர் இடத்தில் ஒன்று சேரும்படி கட்டளையிட்டார், இதன் மூலம் பூமியில் வெட்டாந்தரை உண்டானது. தண்ணீர் ஒன்றாக இனைந்த பகுதி கடலாக மாறியது.

தாவரங்கள் உண்டான பைபிள் கூற்று
”அப்பொழுது தேவன் பூமியானது புல்லையும், விதைகளைப் பிறபிக்கும் பூண்டுகளையும் பூமியின் மேல் தங்களின் தங்கள் விதையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின் படியே கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார் அது அப்படியே ஆயிற்று” (ஆதி1:11) என்று மிகத் தெளிவாக நமக்கு தாவரங்கள் உண்டான வரலாற்றை அழகாக விவரிக்கிறது.

தாவரங்கள் உண்டான அறிவியல் கூற்று
தாவரம் உண்டானது பற்றி அறிவியலில் பரினாமக்கொள்கை விளக்குகிறது. அதாவது பூமியில் முதலாவது தண்னீரில் ஒருசெல் உயிரினம் உண்டாகி, அதிலிருந்து படிப்பட்டியாக முன்னேறி தரைவாழ் தாவரங்களும், பிரானிகளும் உண்டாயிற்று என்று சொல்லுகிறது. இது இன்றைய உலகம் பொதுவாக ஏற்றுக்கொண்டுள்ள கூற்று ஆகும்,

சில கேள்விகள்
ஆழ்கடலில் உள்ள பாறைகளில் கிடைக்கும் உயிரினப்படிமங்களும், அரிஜோனாவில் உள்ள கிராண்ட் கேனியன் என்ற பள்ளத்தாக்குகளில் காணப்படும் சாம்பிராணி மரத்தின் மகரந்த்தூள் படிமங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவைகள் இரண்டும் ஒரே காலத்தில் வாழ்ந்து வந்தவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இவைகள் பரினாமக்கொள்கையின் படி உருவாகியிருந்தால் இவைகள் இரண்டுக்கும் இடையே குறைந்த பட்சம் பல கோடி ஆண்டுகள். வித்தியாசம் இருக்கும் அல்லவா?

ஆனால் மேலே கொடுக்கப்பட்ட வேத வசனத்தை இப்போது வாசித்துப்பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும்.


பரினாமக் கொள்கையை ஆதரிப்பவர்களுக்கு ஓர் கேள்வி
ஆதியாகமம் முதலாம் அதிகாரத்திலே தங்கள் தங்கள் ஜாதியின் படியே என்ற சொற்தொடர் எட்டுமுறை வருகிறது. இது பரினாமக் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். பைபிள் சொல்லும் மேற்கண்ட வார்த்தைக்கு மாற்றாக பரினாமக்கொள்கைக்காரர்கள் என்ன ஆதாரத்தைக் கொடுக்க முடியும்?

புளியமரம் வேப்பமரமனது என்றோ அல்லது வாழைமரம் ஆலமரமானது என்றோ. பசலைக் கொடி ரோஜாவானது என்றோ நிரூபிக்க முடியுமா?


விலங்கியல்தொடர்பான தாவரவியல் ஆதாரங்கள்
மத்திய அமெரிக்காவில் மெக்சிகொ நாட்டில் யூக்கா என்ற ஒரு வகைத்தாவரம் உண்டு இதற்கு மகரந்த சேர்க்கை புரிய யூக்கோ என்ற வகை வண்ணத்துப் பூச்சிகள் மட்டுமே பயன்படுகிறது, அதே போல யூக்கோ வண்ணத்துப் பூச்சியும், தன் முட்டைகளை யூக்கோ வகை தாவரங்களில் மட்டுமே இட்டு வளர்கிறது. வேறு தாவரங்களில் யூக்கோ வண்ணாத்தி பூச்சிகளை வளர்க்க முற்பட்டாலோ அல்லது யூக்கோ தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு வேறு பூச்சிகளைக் கொண்டு மகரந்தச் சேர்க்கை செய்ய முற்பட்டாலோ இரண்டுமே தோல்வியில் தான் முடிவடைகின்றன. இதற்கு பரினாம கொள்கைக்காரர்கள் என்ன பதில் சொல்லுவார்கள்?

ஆஸ்திரேலியாவில் மொரேட்டன் அத்திமரமும் துருக்கி சிமிர்னா அத்திமரமும், ஒரு குறிப்பிட்ட வண்டுகள் மூலமே மகரந்தச்சேர்க்கை செய்கின்றன. வண்டுகளின் இனப்பெருக்கமும் இந்த அத்திமரத்தைச் சார்ந்தே இருக்கின்றன. அப்படியானால் இதில் எது பரினாம கொள்கைப்படி முதலில் தோண்றியது?

இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்கள் உண்டு இவைகளைச் சொல்ல ஒரு நாள் போதாது

தற்கால உதாரணம்

இன்று இந்தியாவில் மரபனு மாற்றம் செய்யப்பட்ட பிடி கத்தரிக்காய், பிடி பருத்தி ஆகியவை விளைச்சலிலும், தரத்திலும் உயர்ந்த்து என்று மத்திய அரசு அனுமதி வழங்கியது அனைவருக்கும் தெரிந்த விசயம். இந்த பீடி இரகங்கள் என்னதான் விளைச்சலைக் கொடுத்தாலும், அது உற்பத்தி செய்யும் விதைகள் இயற்கையான மரபனுவுடன் கூடிய விதைகளாகத்தான் இருக்கின்றன, மீண்டும் மரபனு மாற்றப்படும் போதுதான் அது மீண்டும் பிடி கத்தரிக்காயாக மாறுகிறது.

இன்று நாம் சாதாரணமாக கானும் ஓர் செய்தி பைபிளின் உண்மையை நமக்கு (ஆதி1;11) மிக மிகத் தெளிவாக விளக்குகிறது அல்லவா?

படைப்பின் இரகசியங்களை அறிய உங்களை பைபிளில் சொல்லப்பட்ட நான்காம் நான்காம் நாளுக்குறிய அறிவியல் ஆதாரங்களோடு உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன் காத்திருங்கள்.............

Post a Comment

0 Comments