Header Ads Widget

Responsive Advertisement

பைபிளின் இரண்டாம் நாளும் அறிவியலும்



அன்பானவர்களே சென்ற பதிவில் நாம் கண்ட காரியங்களில் மிக முக்கியமான காரியமான பூமியே முதலில் தோண்றியது என்பது குறித்த வேதாகம கருத்து பற்றி அனேகர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இந்த பைபிள் வசனத்திற்கு எளிமையான அறிவியல் ஆதாரங்களோடு பதில் இருக்கிறது, பொதுவாக அறிவியல் அறிஞர்கள் பூமி சூரியனில் இருந்து பிரிந்து வந்த ஒரு துண்டு என்றும் அது எரிந்து முடிந்து இறுகி இப்போதிருக்கும் நிலையை அடைந்தது என்று சொல்லுவார்கள். ஆனால் சூரியன் இன்னும் பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் எரியும் என்றும் சொல்லுகிறார்கள், அப்படி பூமியும் மற்ற கோள்களும் சூரியனில் இருந்து பிரிந்து வந்திருந்தால் இவைகளுக்கும் எரிவதற்கு போதுமான எரிபொருட்கள் இருந்திருக்கும் அல்லவா? 

இதை இன்னுமொரு உதாரணத்தின் மூலம் தெளிவாக அறிய முடியும், நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு சமைத்தவுடன் தான் மிகவும் சூடாக இருக்கும், சில மணி நேரங்கள் கழித்து பழைய சூட்டுடன் இருக்காது, ஆனால் அப்போது புதிதாக சமைத்த உணவு மிகவும் சூடாக இருக்கும் அல்லவா? அது போல பூமியும் மற்ற கிரகங்களும் ஏற்கெனவே எரிந்து முடித்து குளிர்ந்து விட்டன. ஆனால் சூரியன் இன்னும் எரிந்து கொண்டேதான் இருக்கிறது, இதிலிருந்தே சூரியன் பூமியை விட மிகவும் இளையது என்பது நமக்கு தெளிவாகிறது அல்லவா? இதன் மூலம் பைபிள் சொல்லும் கூற்று உண்மை என்பது மிகத் தெளிவாக நமக்கு விளங்குகிறது அல்லவா?

சரி நாம் இனி பூமி மறு சீரமைக்கப்பட்ட இரண்டாம் நாளுக்குச் செல்லுவோம். ஆதியாகமம் 1:6-8 இரண்டாம் நாளில் தேவன் தண்ணீரை பிரித்த சம்பவத்தை விவரிக்கிறது, அதாவது பூமியை சூழ்ந்திருந்த தண்னீரை மேலும் கீழுமாகப் பிரித்தார் அதாவது பூமியின் கீழும், ஆகாய விரிவிலும் தனித்தனியாகப் பிரித்தார். வாயு மண்டலங்களுக்கு மேல் கணமான நீர் நிற்கமுடியாது ஆகையால், மேலே உள்ள நீருக்கு கணமில்லாத காற்றிலே மிதந்து செல்லக்கூடிய மேனியைக் கொடுத்தார். அதுதான் நாம் வானத்திலே கானும் மேகக் கூட்டங்கள். மிக நுன்னிய  நீர் துகள்களால் ஆன மேகக் கூட்டங்கள் பல கோடிக்கணக்கான டன் எடையுள்ள மழையை தினம்தோறும் சொறிந்து பெரும் வெள்ளப்பெருக்கையும், அழிவையும், உண்டாக்குகிறது.

இதை வேதம் மிக அழகாக யோபு 26:8 ல் சொல்லுகிறது. அவர்(கர்த்தர்) தண்னீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார் அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறது இல்லை(யோபு 26:8)

ஆதியாகம புத்தகம் பூமியில் மிகவும் மழை குறைந்த பகுதியாகிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து எழுதப்பட்டிருந்தாலும் இன்று அறிவியளாலர்கள் கண்டுபிடித்திருக்கும் இந்த உணமையை மிக அழகாக வருனிக்கிறது. இன்று அறிவியலாளர்கள் சொல்லுவதாவது “ பூமி முழுவதும் ஒவ்வொரு நாளும் தோறாயமாக 45000 இடி முழக்கங்களோடு கூடிய புயல் அடிக்கிறது என்றும், இப்பேற்பட்ட இடிமுழக்கத்தோடு கூடிய ஒவ்வொரு புயலினாலும், குறைந்த்து ஒரு இலட்சம் டன் நிறையுள்ள மழை பூமியில் பொழியப்படுகிறது என்று கணக்கிடப்பட்டிருப்பதாகச் சொல்லுகின்றனர். அப்படியாயின் பூமி முழுவதிலும், ஒரு நாளைக்கு 450,00,00,000( 450 கோடி) டன் எடையுள்ள மழை நாள்தோறும் பொழிந்துகொண்டிருக்கிறது அப்படியெண்றால் வான மண்டலத்தில் தேவன் எவ்வளவு தண்ணீரை நிருத்து வைத்திருக்க வேண்டும்? இதைதான் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே யோபுவின் புத்தகம் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது அல்லவா?

இதுவே தேவன் பூமியை புதுபித்த இரண்டாம் நாளில் தேவன் செய்த அதிசமான காரியம்.
அன்பானவர்களே இதுவரை நாம் பைபிள் சொல்லும் தற்கால உலகத்தின் முதல் இரண்டு நாட்களில் தேவன் செய்த காரியங்களை தற்போது நடைமுறையில் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளின் மூலம் அறிந்து கொண்டோம் அல்லவா? இன்னும் விருவிருப்பான மூன்றாம் நாளுக்குறிய அறிவியல் ஆதாரங்களோடு விரைவில் உங்களை சந்திக்கிறேன், காத்திருங்கள்..................

Post a Comment

1 Comments

  1. This is a good one Raj anna!!! Keep going !! God Bless YOu!!!
    Winston:)

    ReplyDelete