Header Ads Widget

Responsive Advertisement

பைபிளின் ஐந்தாம் நாளும் அறிவியலும் (பகுதி-1) அறிவியல் பொய்யா?


அன்பானவர்களே நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி இந்த படைப்பின் இரகசியங்கள் தொடரில் இன்று மிக முக்கியமான ஒரு காரியத்தைக் குறித்து தியானிக்கப் போகிறோம், இன்று அறிவியலாளர்கள் உயிரின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி செய்து மனிதன் வேறு கிரகங்களில் வாழ முடியுமா என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டு ஆராய்கிறார்கள். சனியின் துனைக்கோளான டைட்டனில் குளிர்ச்சியால் மீத்தேன் வாயு திரவ வடிவத்தில் இருப்பதாகவும், பூமியில் எரிமலைகள் நிறைந்த தென் பசுபிக் பகுதியில் தார் (சாலை போட பயன்படும் பொருள்) வழியும் இடங்களின் அடியில் சில நுன்னுயிர்கள் இருப்பதாகவும், அவை மீத்தேனை மட்டுமே சுவாசிப்பதாகவும், சொல்லுகிறார்கள். மேலும் டைட்டன் துனைக்கோளின் சூழ்நிலையை சோதனைக் குழாயில் உண்டாக்கி அதில் உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கூறுகள் உண்டாகுவதையும் நிரூபித்திருக்கிறார்கள்.
அதேபோல வியாழனின் துனைக்கொள் ஒன்றில் பூமியின் பாறைகளை ஒத்த இறுக்கத்தோடு தண்ணீர் உறைந்திருப்பதையும், அதன் அடியில் திரவ பெருங்கடல்கள் இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அங்கே உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் இருப்பதை நிரூபிக்க துறுவப் பகுதிகளில் 36000 ஆண்டுகள் பழமையான பனிப்பாறைகளின் உள்ளே உயிர் வாழும் சில பாக்டீரியாக்களையும், இருளான குகைகளில் வாழும் பூஞ்சைகளையும் உதாரனமாகச் சொல்லுகிறார்கள். நல்லதுதான் ஆனால் இவை ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகளாக மட்டுமே இருக்கின்றன. ஒருவேளை அறிவியல் வளர்ச்சி இன்னும் அதிகமாகும் போது உயிரி தொழில் நுட்ப அறிவியலைப் பயன்படுத்தி இத்தகைய சூழ்நிலை வாழ ஒருவேளை வழிகானப்படலாம். இதை பைபிள் மிகவும் தெளிவாகச் சொல்லுகிறது (எபிரேயர் 2;8), ஆனாலும் இன்னும் அவை நடைபெறவில்லை என்றும் சொல்லுகிறது.

அரைகுறையான கிறிஸ்தவர்கள் தவிர யாரும் அறிவியலை எதிர்க்க மாட்டார்கள். நானும் அறிவியலுக்கு எதிரியல்ல, காரணம் அறிவியலும், மனிதனுடைய அறிவும், அறிவியலில் ஆராயப்படும் அனைத்து காரியங்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டது. அதே சமயம் அறிவியலில் சில மனிதத் தவறுகள் இருக்கின்றன. உதாரனமாக பரினாமக்கொள்கை போன்றவை, இந்த தவறுகள் எப்படி நிகழ்ந்தன என்பதை நாம் விரிவாக ஆராய்வோமா?

அறிவியல் கோட்பாடுகளில் மனிதத் தவறுகளுக்கு யார் காரணம்?
கடவுள் மனிதனை உருவாக்கியபோது, முற்றிலும் அறிவுள்ளவனாகவும், சகலமும் அவனுக்குக் கீழ்பட்டிருக்கும்படியே அவன் உருவாக்கப்பட்டான். ஆனால் இந்த கட்டுரைத் தொடரின் ஆரம்ப பதிவுகளில் நாம் கண்ட பிசாசு என்பவனின் தந்திரத்தினால் பொய்யான சில செய்திகள் மக்கள் மனங்களில் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவை, தற்பெருமை, நம்மால் எல்லாம் முடியும் என்ற அகங்காரம் ஆகியவை. இவை மனிதனுக்கு உறுவாக்கும் தீங்கு என்னவென்றால் கடவுளை மறக்கச்செய்தல் ஆகும். அதாவது நாமே எல்லாம், கடவுள் என்று ஒருவர் இல்லை அவரை நாம் சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்ற ஒரு பொய்யை சாத்தான் நம் அனைவரின் மனதிலும் விதைத்து விட்டான். கடவுளுக்கு விரோதமான பிரிவினைகள், கடவுள் மறுப்பு (பெரியார் மேற்கொண்ட போராட்டம் அல்ல) ஆகியவைகள் அனைத்துமே சாத்தானால் விதைக்கப்பட்ட பொய்கள் ஆகும்.(இவைகளைக்குறித்து நாம் விரிவாகவும், ஆதாரங்களுடனும் மிகவிரைவிலேயே ஆராய்வோம்) இத்தகைய பொய்யின் அடிப்படையில் உண்டான அறிவியல் கோட்பாடுதான் பரினாமக்கொள்கை

எப்படியெனில், இந்த உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களும், தனக்கு வகுக்கப்பட்ட முறைமைகளின் படியே செல்கிறதேயல்லாமல், புதிய முறைகளுக்கு தங்களை மாற்றிக்கொள்வதில்லை. ஆனால் வாழும் சூழ்நிலை மாறும்போது ஒரு சில குண நலன்களை மட்டுமே மாற்றிக் கொள்கின்றன. இப்படி சில பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வதால் அந்த மிருக வகைகளில் தனி வகையாக மட்டுமே மாறுகிறதே தவிர முற்றிலும் புதிய வகை உயிரினமாவதில்லை. உதாரணம்: தங்க மீன்கள் (இவைகள் இருட்டான பகுதிகளில் வசித்தால் வெள்ளை நிறமாக மாறிவிடும்.

ஆனால் எல்லா வகைகளும் இப்படிப் பட்ட மாற்றத்தால் உண்டானவைகள் அல்ல அவைகள் முற்றிலும் அவைகள் வாழும் சூழ்நிலைக்கேற்பவே படைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணம்: வெப்ப மண்டலக்காடுகளில் வாழும் கரடிகள், மற்றும் பனிக்கரடிகள்.

ஆகவே முதலில் நாம் கடவுள் இல்லை, காரணம் நாம் எதையுமே இந்த உலகத்தில் உண்டாக்கவில்லை, சகலமும் கடவுளால் உண்டாக்கப்பட்டு மனிதர்களுக்குக் கீழ்ப்படுத்தப் பட்டுள்ளது (எபிரேயர் 2;8). என்ற உண்மையை நாம் உணரத் தொடங்குவோம். (இங்கே சகலமும் என்றால் கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய உயர்ந்த நிலையைத் தவிர மற்ற அனைத்தும்), அப்படி நினைக்க ஆரம்பித்தால் நாம் சர்வ சிருஸ்டிகரை ஆராதித்து அவர் நமக்குக் கொடுத்திருக்கும் நிலைக்காகவும், அவருடைய அன்புக்காகவும், அவருக்கு நன்றி செலுத்தத் தொடங்கி விடுவோம். இந்த்த் தெளிவு நம் அனைவருக்கும் வரவேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான விருப்பம். மேலும் மனிதக்கண்களால் கானமுடியாத ஆவிக்குரிய பகுதியில் நிகழும் பல விசயங்களை அறிவியல் ஆதாரங்களோடு மிகவிரைவிலேயே ஆராய்ந்து அறியும் போது இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்ட பலவிசயங்களுக்குத் தெளிவு கிடைக்கும். ஆகவே தொடர்ந்து படியுங்கள்.

இந்த பதிவின் இரண்டாம் பாகத்தில் பைபிளின் ஐந்தாம் நாளில் சொல்லப்பட்ட விசயங்களை அறிவியல் ஆதாரங்களோடு ஆராய்வோம் மிக விரைவில் சந்திப்போம். காத்திருங்கள்.

Post a Comment

0 Comments